சுக்கு மல்லி காபி குடிப்பவரா நீங்கள்..! அப்போ முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்.!!

Advertisement

Sukku Malli Coffee Benefits

நம்முடைய வாழ்க்கையில் என்ன தான் புது புது மாற்றங்கள் வந்தாலும் கூட சில விஷயங்கள் ஆனது மாறாமல் அப்படியே தான் உள்ளது. அத்தகைய விஷயங்களில் ஒன்று தான் டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கமும். காலையில் எழுந்தவுடன் சிலருக்கு டீ அல்லது காபி குடித்தால் தான் மற்ற வேலையினை பார்க்கவே செல்வார்கள். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பழக்கங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. இவ்வாறு நாம் குடிக்கும் காபியில் நிறைய வகைகள் உள்ளது. இத்தகைய காபி வகைகளில் சுக்கு காபியும் ஒன்று. ஆகையால் இன்றைய பதில் சுக்கு மல்லி காபி குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

டீயில் இஞ்சி சேர்த்து குடித்தால் இவ்வளவு தீமைகள் உண்டாகுமா.. 

சுக்கு மல்லி காபி:

 சுக்கு மல்லி காபி நன்மைகள்

 சுக்கு மல்லி காபி என்பது ஏலக்காய், துளசி, பனை வெல்லம், இஞ்சி, மஞ்சள், சீரக விதை, திப்பிலி, கொத்தமல்லி, ஜாதிக்காய் மற்றும் கருமிளகு ஆகிய பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. 

இத்தகைய சுக்கு மல்லி காபியினை மூலிகை காபி என்றும் அழைப்பார்கள். மேலும் இந்த சுக்கு மல்லி காபியினை தென்னிந்தியாவில் உள்ள மக்கள் தான் அதிக அளவு குடிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

சுக்கு மல்லி காபி நன்மைகள்:

குழந்தைகளுக்கு இரத்த சோகை:

குழந்தைகளுக்கு இரத்த சோகை

நம் முன்னோர்களின் பாரம்பரியத்தில் இருந்து தோன்றிய இந்த சுக்கு மல்லி காபி ஆனது ஒரு சிறந்த மருத்துவமிக்க பானம் என்று கூறலாம். ஏனென்றால் இந்த சுக்கு மல்லி காப்பினை குழந்தைகளுக்கு கொடுக்கும் போதும் அவர்களுக்கு ஏற்படும் இரத்த சோகையினை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கும் மற்றும் இரத்த சோகையினை வராமல் தடுக்கச் செய்யவும் பயன்படுகிறது.

சளி இருமல் நீங்க:

சளி இருமல் நீங்க

சாதாரணமாகவே சளி மற்றும் இருமலுக்கு பனை வெல்லம் மற்றும் இஞ்சி சேர்த்து கசாயம் வைத்து குடிக்கும் பழக்கம் சிலரது வீட்டில் இருக்கும். அந்த வகையில் பார்த்தோம் என்றால் இந்த சுக்கு மல்லி காபியில் உள்ள எண்ணற்ற சத்துக்கள் ஆனது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் இருமல் மற்றும் சளியில் இருந்து முற்றிலும் குணமடைய செய்கிறது.

இரத்த அழுத்தம் குறைய:

இரத்த அழுத்தம் குறைய

சுக்கு மல்லி காபி ஆனது ஒரு மசாலா நிறைந்த காபி என்று கூறலாம். அதனால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த சுக்கு காபியினை குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். மேலும் பக்கவாதம் போன்றவற்றை வராமலும் தடுக்கச் செய்கிறது. 

செரிமான கோளாறு:

செரிமான கோளாறு நீங்க

 

தினமும் சுக்கு மல்லி காபியினை குடிப்பதன் மூலமாக நாம் சாப்பிடும் சாப்பாடானது எளிதில் செரிமான அடையச் செய்து வயிறு சம்மந்தமான எந்த பிரச்சனையும் வராமல் இருக்க உதவுகிறது.

உடல் பருமன் குறைய:

உடல் பருமன் குறைய

இன்றைய காலத்தில் உள்ள பெரும்பாலான நபர்களுக்கு உணவுமுறை பழக்க வழக்கங்களால் உடல் பருமன் அதிகரிக்க செய்கிறது. அத்தகைய உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று அனைவரும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியினை செய்து வருகிறார்கள். அந்த வகையில் சுக்கு மல்லி காபியும் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் சுக்கு காபியில் உள்ள மூலிகை பொருட்கள் உடல் பருமனை விரைவில் குறையச் செய்கிறது. 

எனவே நாம் தினமும் குடிக்கும் சுக்கு மல்லி காபியில் நம்முடைய உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது.

டீயுடன் இந்த உணவை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள்… 

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement