இரத்த சோகை அறிகுறிகள் மற்றும் காரணங்கள்..!

இரத்த சோகை குணமாக

இரத்த சோகை குணமாக ..!

நம் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளையே இரத்த சோகை (Anemia) என்கிறோம். இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால், இந்த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன.

நம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது இந்த ஹீமோகுளோபின்கள்தான்.

சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதனால் ஹீமோகுளோபினின் செயல்பாடும் குறைந்து, அதனால் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் தடைபடும் நிலையையே ரத்தசோகை என்கிறோம்.

குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே இரத்த சோகை வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.

இதனால் பெண்களுக்கு பலவிதமான உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும் இந்த இரத்த சோகை மூச்சிரைத்தல், படபடப்பு, உடல் சோர்வுடன் மாதவிலக்குப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

மேலும் பிரசவத்தின் போது தாய் இறந்து போவதற்கு கூட சில சமயங்களில் இரத்த சோகை காரணமாகிறது.

இதையும் படியுங்கள் 

இரத்த சோகை குணமாக

சரி வாருங்கள் இவற்றில் இரத்த சோகை அறிகுறிகள் மற்றும் காரணங்களை காண்போம்.

சிவப்பணு உருவாக்கும் எலும்பு:

எலும்பு மஜ்ஜை எனப்படுவது எலும்பின் மத்தியிலிருந்தே சிவப்பணுக்கள் உருவாகுகின்றன. இந்த சிவப்பணுக்கள் முதல் 120 நாட்கள் வரை உயிருடன் இருக்கும், எனவே இந்த சிவப்பணுவை தொடர்ச்சியாக உருவாக்கி கொண்டே இருக்க வேண்டும்.

இந்த ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புசத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய ஊட்டச்சத்துக்கள் இன்றியமையாதவை ஆகும்.

100 மில்லி இரத்தத்தில் எவ்வளவு கிராம் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும் ?
நிலை குழந்தை (ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை) கர்ப்பிணிகள் பெண்கள் ஆண்கள்
இரத்த சோகையற்ற நிலை12 – 14 கிராம்11 – 12 கிராம்12- 14 கிராம்13 – 15 கிராம்
மிதமான இரத்த சோகை10 – 12 கிராம்10 – 11 கிராம்10 – 12 கிராம்12 – 13 கிராம்
மிகையான இரத்த சோகை7 – 10 கிராம்7 – 10 கிராம்7 – 10 கிராம்9 – 12 கிராம்
கடுமையான இரத்த சோகை7 கிராமிற்கும் கீழ்7 கிராமிற்கும் கீழ்7 கிராமிற்கும் கீழ்9 கிராமிற்கும் கீழ்

இரத்த சோகை அறிகுறிகள் :

இரத்த சோகை அறிகுறிகள் எப்போதும் சோர்வாக இருப்பது, அடிக்கடி மயக்கம் வருவது, கை, கால் மற்றும் முகத்தில் லேசான வீக்கம், அமர்ந்திருந்த நிலையில் இருந்து திடீர் என்று எழுந்தால் தலை சுற்றல் ஏற்படுவது. தோல், நாக்கு, கண் மற்றும் நகங்கள் ஆகியவை வெளுத்து போனது போல் காணப்படும்.

மேலும் நகங்களில் குழி விழுவது மற்றும் பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் பிரச்சனைகள் ஏற்படும்.

Anemia அதிகமாக யாரை தாக்குகிறது:

வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகள் மற்றும் 15-47 வயதுக்கு உட்பட்டவர்களே இரத்த சோகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இளம் வயதில் கர்ப்பம் அடையும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

பிரசவத்தின் போது அதிகமாக உதிரப்போக்கு ஏற்படும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பகாலத்தில் சரியாக இரும்பு சத்து மாத்திரையை உட்கொள்ளாமல் இருக்கும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

சரியான இடைவெளி இல்லாமல் கருத்தரிக்கும் பெண்களுக்கு  மற்றும் கருக்கலைப்பு செய்து கொண்டவர்களுக்கு மற்றும் கர்ப்பகாலத்தில் தாய்க்கு இரத்தசோகை இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு இரத்த சோகை ஏற்படும்.

மாதவிலக்கு பிரச்சனை உள்ள பெண்களுக்கு மற்றும் இரும்பு சத்து குறைவாக உள்ளவர்களுக்கு இரத்த சோகை ஏற்படும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்லது பாட்டில்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொண்டால் இரத்த சோகை ஏற்படும்.

இதையும் படியுங்கள்  பாரம்பரிய சிறுதானிய உணவின் சுவையும், அதன் பயன்களும் !!!

இந்த பிரச்சனை பெண்களை அதிகமாக தாக்குவதற்கான காரணங்கள்:

பெண்களின் மாதவிலக்கின் போது ஏற்படும் உத்திர போக்கின் காரணமாக, பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் சிறிது இரத்த இழப்பு ஏற்படுகிறது.

இதன் காரணமாக இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைகிறது.

கருச்சிதைவு, கருக்கலைப்பு மற்றும் பிரசவம் போன்ற நிகழ்வின் போது அதிகளவு உத்திர போக்கு ஏற்படும்.

இரத்த சோகையை தடுக்கும் முறை:

இரத்த சோகை குணமாக :1

பிறந்த குழந்தைகளுக்கு இரத்த சோகை குணமாக முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

இரத்த சோகை குணமாக :2

கேழ்வரகு, கம்பு, தினை, சாமை, பட்டை தீட்டப்பட்ட புழுங்கல் அரிசி மற்றும் வரகு ஆகியவற்றை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.

இரத்த சோகை குணமாக :3

கற்பிணிப் பெண்களுக்கு ஊட்டசத்துக்காக கொடுக்கப்பட்டுள்ள  இரும்பு சத்து மாத்திரையை சரியாக உட்கொள்ள வேண்டும்.

இரத்த சோகை குணமாக :4

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு, இளம் பெண்களுக்கு மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாவை வாங்கி உட்கொள்வதினால் இரத்தசோகையில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

இரத்த சோகை குணமாக :5

எல்லாவற்றுக்கும் மேலாக சரிவிகித உணவு சாப்பிடுகிறவர்களுக்கு ரத்தசோகை வருவது இல்லை.

இரத்த சோகை குணமாக :6

கீரை வகைகள், முட்டை, பால், இறைச்சி, பேரீச்சம்பழம் போன்றவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தசோகை ஏற்படாமல் தடுக்க முடியும்.

இரத்த சோகை குணமாக :7

குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஜீரண சக்தி குறையும்போது மாத்திரை, ஊசி வழியாகவும் அந்த குறைபாட்டை சமன்படுத்த முடியும்.

இதையும் படியுங்கள் லிச்சி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா ?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com