காசநோய் குணமாக | TB Treatment Food in Tamil
காசநோய் குணமாக உணவு / Food For TB Patient: வணக்கம் நண்பர்களே..! காசநோய் இருப்பவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துக்கொள்ளுவோம். இப்போது உள்ள காலங்களில் நுரையீரல் சம்பந்தமான நோய்–களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகம்.
அதில் ஒன்றுதான் இந்த காசநோய். காசநோயிற்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் இருந்தால் நிறைய பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த காசநோய் உள்ளவர்கள் வெளியில் எப்போதும் செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும். காசநோய் உள்ளவர்கள் சில உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. அந்த உணவு வகைகளை இப்போது படித்தறியலாம் வாங்க..!
தைராய்டு முற்றிலும் குணமாக 10 ஆரோக்கிய உணவுகள்..! |
காசநோய் அறிகுறிகள்:
- நாள்பட்ட விடாத இருமல்
- உடலில் எடை குறைந்து காணப்படும்.
- பலவீனம்
- மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும்.
காசநோய் உணவு முறை:
பழங்கள்:
காசநோய் இருப்பவர்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி நிறைந்த பழ வகைகளான ஆரஞ்ச், மாம்பழம், பப்பாளி, கொய்யா, நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை பழத்தினை உணவுகளில் சேர்த்துக்கொண்டால் நல்லது. இந்த பழங்களில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் காசநோயாளிகளின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்க பெரும் உதவியாக இருக்கும்.
பூண்டு:
காசநோயால் அவதிப்படுபவர்கள் தினமும் காலை நேரத்தில் 2-3 பூண்டு பற்கள் சாப்பிட்டு வர காசநோய்க்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். பூண்டில் அல்லிசின் எனும் சத்து காசநோயினை உண்டாக்கும் கிருமிகளை விரட்டும் தன்மை கொண்டது. காசநோயை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் பூண்டு பற்களை வாயில் போட்டு 2-3 நிமிடங்கள் மென்று விழுங்கவும்.
காச நோய் அறிகுறிகள் |
பால்:
பாலில் நாம் எண்ண முடியாத அளவிற்கு கால்சியம், ப்ரோட்டின் சத்துக்கள் அடங்கியுள்ளது. காசநோய் உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடியது பால். காசநோயாளிகள் தினமும் பால் அருந்துவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், உடல் வலிமையும் அதிகரித்து காணப்படும். காசநோயிலிருந்து தப்பிக்க பாதாம் பாலை குடிக்க வேண்டும். பாதாம் பால் குடிப்பதால் எளிதாக செரிமானம் ஆகும். குறிப்பாக பாதாம் பாலில் அதிகமாக வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளதால் காசநோய் உள்ளவர்கள் குடிக்கலாம்.
காய்கறி:
உடலில் காசநோய் உள்ளவர்கள் காய்கறி வகைகளான கேரட், தக்காளி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் ப்ராக்கோலி போன்ற சத்து நிறைந்த காய்கறிகளை உணவுகளில் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும். கூறியுள்ள இந்த காய்கறிகளில் அதிகமாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. காசநோய் உள்ளவர்கள் இந்த காய்கறிகளை சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியத்தினை சீராக வைத்திருக்கும்.
எலும்பு பலம் பெற கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள்..! |
தானிய வகைகள்:
காசநோய் அனைவரும் தங்களது டயட்டில் தானிய வகை உணவுகளை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் பசி கட்டுப்படுத்தப்படுவதோடு, காசநோயில் இருந்து விரைவில் தப்பிக்கலாம். இதற்கு முக்கிய காரணம் தானிய வகை–களில் உள்ள நார்ச்சத்துக்கள் தான்.
கிரீன் டீ:
காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக காபி, டீ குடிப்பதை நிறுத்தி கொண்டு கிரீன் டீ குடிக்கும் பழக்கத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டும். காசநோய்க்கு மிகுந்த நன்மை தரக்கூடிய ஒன்று இந்த கிரீன் டீ. கிரீன் டீ குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும்.
வைட்டமின் டி நிறைந்த உணவுகள்:
காசநோயாளிகளுக்கு வைட்டமின் டி சத்து மிகவும் முக்கியமான ஒன்று. குறிப்பாக காசநோயால் அவதிப்பட்டவர்களுக்கு உடலில் வைட்டமின் டி சத்தானது குறைவாக இருக்கும். எனவே தினமும் அதிகாலையில் சிறிது நேரம் சூரியக் கதிர்கள் உடலின் மீது படும்படி சிறிது நேரம் உட்கார வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் வைட்டமின் டி நிறைந்த உணவுகளான கொழுப்பு நிறைந்த மீன்களான டுனா, கானாங்கெளுத்தி, சால்மன் மீன், சீஸ், முட்டையின் மஞ்சள் கரு, பால் பொருட்கள், காளான், ஆரஞ்சு ஜூஸ், சோயா பால் மற்றும் செரில்கள் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |