தலை சுற்றல் மயக்கம் நீங்க வீட்டு வைத்தியம் | Thalai Sutral Home Remedies
Thalai Sutral Patti Vaithiyam in Tamil:- வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் வெர்டிகோ என்று சொல்லக்கூடிய தலை சுற்றல் பிரச்சனை எதனால் வருகின்றது? அதன் காரணங்கள் என்ன? இந்த தலை சுற்றல் நீங்க பாட்டி வைத்தியம் என்ன இருக்கிறது என்பதை பற்றி படித்தறியலாம் வாங்க.
தலைசுற்றல் எதனால் வருகிறது?
பொதுவாக தலை சுற்றல் வந்துவிட்டால் உடனே அதனை அனைவரும் மூளை தொடர்பான நரம்பு பிரச்சனை இருக்கும் என்று நினைப்பார்கள். தலைசுற்றல் என்பது மூளை தொடர்பான பிரச்சனை தான் என்றாலும் பெரும்பாலான நேரங்களில் இந்த தலை சுற்றல் பிரச்சனைக்கு காது தான் முதல் காரணம் என்று சொல்லலாம். காது கேட்பதற்கு மட்டும் அல்ல, நம் உடலைச் சமநிலைப்படுத்த உதவும் உறுப்புகளில் மிகவும் முக்கியமான உறுப்பு காது. இத்தகைய காதில் பிரச்சனைகள் ஏற்படும் போது உடலின் சமநிலை இழந்து உடல் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தலை தனியாகச் சுற்றுவது போல் தோன்றும். அல்லது சுற்றியுள்ள பொருட்கள் நம்மளை சுற்றுவதுபோல் தோன்றும். இத்தகைய தலைச்சுற்றலை ஆங்கில மருத்துவத்தில் ‘வெர்டிகோ’ (Vertigo) என்கிறார்கள்.
இந்த தலை சுற்றல் யாருக்கெல்லாம் வரும்?
பொதுவாக இந்த தலை சுற்றல் 30 வயதிற்கு மேல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும், 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 100-ல் 10 பேருக்கு கட்டாயம் இந்த தலை சுற்றல் பிரச்சனை இருக்கும். அதிலும் ஆண்ளை விட பெண்களுக்கு தான் இந்த தலை சுற்றல் பிரச்சனை அதிகமாக ஏற்படுகின்றது.
தலைசுற்றல் வருவதற்கு காரணம் என்ன?
இந்த தலை சுற்றல் பிரச்சனை பொதுவாக காது பிரச்சனை காரணமாக 80% பேருக்கு ஏற்படுகின்றது என்றாலும் மீதமுள்ள 20% பேருக்கு மற்ற காரணங்களினால் ஏற்படுகின்றது. சரி இப்பொழுது என்னென்ன காரணங்களினால் தலைசுற்றல் ஏற்படுகின்றது என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
- உயர் ரத்த அழுத்தம்
- குறை ரத்த அழுத்தம்
- மிகை ரத்த கொழுப்பு
- ரத்த சோகை
- ஒற்றை தலைவலி
- ஊட்டச்சத்து குறைபாடு
- கட்டுப்படாத நீரிழிவு நோய்
- கழுத்து எலும்பில் பிரச்சனை
- தைராய்டு பிரச்சனை
- கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டம்
- இதயத்துடிப்புக் கோளாறுகள்
- மருந்துகளின் பக்கவிளைவு
- பார்வைக் கோளாறு
- மன அழுத்தம்
- தூக்கமின்மை
- மலத்தில் ரத்தம் போவது
- தலைக்காயங்கள்
இதுபோன்ற பல காரணங்களினால் இந்த தலை சுற்றல் பிரச்சனை ஏற்படுகின்றது. சரி இதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
தலை சுற்றல் அறிகுறிகள்:
- மயக்கம்
- தலை சுற்றுவது போல் உணர்வு
- நிலை தடுமாறுவது
- வயிற்று புரட்டல்
- வாந்தி
- நிற்க முடியாத நிலை
- கண்கள் சொருகுவது
சரி இந்த தலை சுற்றல் குணமாக பாட்டி வைத்தியம் என்னென்ன இருக்கிறது என்று இப்பொழுது நாம் படித்தறியலாம்.
தலை சுற்றல் நீங்க பாட்டி வைத்தியம்: 1
தலைசுற்றல் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயுடன் சிறிதளவு தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர இந்த தலை சுற்றல் பிரச்சனை சரியாகும்.
வெர்டிகோ குணமாக பாட்டி வைத்தியம்: 2
பொதுவாக இஞ்சி ஆரோக்கிய பண்புகளை கொண்டது. ஆகவே அனைத்து வகை பிரச்சனைகளையும் குணப்படுத்தும் என்பதினால், சிறிதளவு இஞ்சியினை எடுத்து கொள்ளுங்கள். பின் அவற்றை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின்பு தேனில் 2 அல்லது 3 நாட்கள் ஊறவைக்கவும். பிறகு இந்த இஞ்சி துண்டுகளை காலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 துண்டுகள் சாப்பிட்டு வர இந்த தலை சுற்றல் பிரச்சனை சரியாகும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியம் |