இனிமேல் இந்த பொருட்களை மறந்தும் பிரிட்ஜில் வைத்து விடாதீர்கள்..? மீறி வைத்தால் அவ்வளவு தான்..!

This Food Items Avoid Store in Fridge

இன்றைய ஆரோக்கியம் பதிவு வாசகர்கள் அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். இன்றைய நிலையில் பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. மேலும் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது என்று சொல்வதை விட வந்து கொண்டே இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த காலத்தில் மின்சார வசதிகள் ஏதும் கிடையாது. ஆனால் இந்த காலத்தில் அப்படி இல்லை. அனைவரின் வீட்டிலும் மின்சார வசதி இருக்கிறது. மேலும் எல்லா வீடுகளிலும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஃபேன், டிவி போன்ற மின்சாதனங்கள் வந்துவிட்டது. அதுபோல இன்றைய பதிவில் பிரிட்ஜில் வைக்க கூடாத பொருட்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பிரிட்ஜில் வைக்கவேண்டிய பொருட்கள் என்ன வைக்ககூடாத பொருட்கள் என்ன என்பதை பார்ப்போம்

This Food Items Avoid Store in Fridge in Tamil: 

நாம் அனைவருமே பிரிட்ஜ் வந்ததற்கு பின் எந்த உணவு பொருளாக இருந்தாலும் அதை பிரிட்ஜில் வைத்து தான் பயன்படுத்துகிறோம். சிலர் முதல் நாள் சமைத்த உணவுகளை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுகிறார்கள். இன்னும் சிலர் குழம்பை பிரிட்ஜில் 3 வைத்து சாப்பிடுகிறார்கள். இதுபோல செய்வது ஆபத்தானது என்று தெரிந்தும் நாம் அதே தவறை தான் இன்று வரை செய்து வருகின்றோம்.

அதுபோல நாம் பிரிட்ஜில் சில பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். மீறி வைத்தால் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் தரம் குறைகிறது. அது என்னென்ன பொருட்கள் என்று இங்கு பார்ப்போம்.

அடிக்கடி பிரிட்ஜில் உள்ள ஃபிரீசரில் அடிக்கடி ஐஸ்கட்டி கட்டுதா? இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் ⇒ அப்போ இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!

வாழைப்பழம்:

வாழைப்பழம்

பெரும்பாலும் வாழைப்பழங்களை பிரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும். நாம் வாழைப்பழத்தை பிரிட்ஜில் வைப்பதால் அதில் இருக்கும் சத்துக்கள் முற்றிலுமாக நீங்கி விடுகிறது.

அதனால் வாழைப்பழம் நன்கு பழுக்க அதை அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும். மேலும் அதன் மீது காற்று மற்றும் ஒளிபட்டால் வாழைப்பழம் அழுகாமல் இருக்கும்.

தேன்:

தேன்

 

நீங்கள் தேனை உங்கள் வீட்டு பிரிட்ஜில் வைத்திருந்தால் அதை உடனே எடுத்து விடுங்கள். தேனை பிரிட்ஜில் வைப்பதால் அதில் இருக்கும் சத்துக்கள் குறைந்துவிடும். மேலும் அது கட்டியாகிவிடும்.

தேன் இயற்கையில் கெடாத தன்மை கொண்டது. அதனால் தேனை பிரிட்ஜில் வைப்பதை விட அதை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் வைத்து வீட்டில் குளிர்ந்த அல்லது இருண்ட இடத்தில் வைத்தால் போதும். தேன் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.

ஃபிரிட்ஜ் ஏன் வெடிக்கிறது.. ஃபிரிட்ஜ் பக்கத்துல எந்த பொருளையும் வைக்காதிங்க..

பிரெட்: 

பிரெட்

பிரெட்டை பிரிட்ஜில் வைப்பதை தவிர்த்து சாதாரணமான காற்று புகாத இடத்தில் வையுங்கள். அதை பிரிட்ஜில் வைத்தால் அதன் சுவை மாறிவிடும். மேலும் அதில் இருக்கும் சத்துக்களும் போய்விடும். அதனால் பிரெட்டை பிரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

தக்காளி:

தக்காளி

பெரும்பாலும் நாம் அனைவருமே தக்காளியை பிரிட்ஜில் வைத்து தான் பயன்படுத்துகிறோம். ஆனால் இதனை பிரிட்ஜில் வைப்பதற்குப் பதிலாக  காற்றோட்டமான கூடைகளில் வைத்தாலே போதும். தக்காளி சில நாட்கள் அழுகாமல் இருக்கும். அதனால் தக்காளியை பிரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil