வெட்டிவேர் மருத்துவ பயன்கள் | Vetti Veru Benefits in Tamil..!
வெட்டி வேரில் உஷ்ணத்தை குறைக்கும் சக்தி அதிகமாகவே உள்ளது. அதனால் தான் நம் முன்னோர்கள் நம் உடலில் ஏற்படும் பல விதமான பிரச்சனைகளுக்கு இந்த வேரினை பயன்படுத்தி வந்தனர். புல் இனத்தை சேர்ந்த இந்த வெட்டி வேர் ஆற்றுபகுதியில் வளரக்கூடியது. இந்த வெட்டி வேரை காஸ் ரூட், குஸ், ராமச்சம், லாவஞ்சி, குறுவேறு போன்ற பெயர்களிலும் சொல்லுவார்கள். இயற்கை அளித்த அற்புதமான வெட்டி வேர் நம் உடலுக்கு என்னென்ன பயன்களை தருகிறது என்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வெட்டி வேரின் பயன்கள்:
மூட்டு வலி குணமாக:
முற்காலத்தில் வயதான பெரியவர்களுக்கு மட்டும் தான் மூட்டு வலி பிரச்சனைகள் இருந்தது. ஆனால் இக்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூட்டு வலியால் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
வெட்டி வேரை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி வைத்து கொள்ளுங்கள். பிறகு இரண்டு நாட்கள் கழித்து அந்த எண்ணெயை உங்கள் கால்களில் எந்த இடத்தில் வலி இருக்கிறதோ அந்த இடத்தில் தடவுங்கள்.
இவ்வாறு நீங்கள் தினமும் தடவி வந்தால் மூட்டு வலி பிரச்சனைகள் இருக்காது.
உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெட்டி வேர் பயன்கள்
உடல் சோர்வு நீங்க:
இக்காலத்தில் உள்ள பல பேருக்கு காய்ச்சல் வந்த பின்பு உடல் சோர்வும், உடல் வலியும் கூடவே வந்து விடுகிறது. இந்த சோர்வை நீக்க நீங்கள் தண்ணீரில் வெட்டி வேரை போட்டு கொதிக்கவைத்து, பிறகு அதனை வடிக்கட்டி குடித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி விடும்.
அதுமட்டுமல்லாமல் கோடை காலத்தில் மண் பானையில் தண்ணீர் வைத்து அதனுடன் இந்த வெட்டி வேரை போட்டு அந்த தண்ணீரை பருகினால் கோடை காலத்தில் ஏற்படும் தாகம் தணிவதோடு உடல் சோர்வும் நீங்கி விடும்.
வயிற்று வலி நீங்க:
உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி நீங்க, வெட்டி வேரை நன்றாக சுத்தம் செய்து காயவைத்து பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு 1/2 டம்ளர் தண்ணீரில் சிறிதளவு வெட்டி வேர் பொடி, சிறிதளவு கருஞ்சீரக பொடி போட்டு நன்றாக கொதிக்கவைத்து அந்த தண்ணீரை சிறிதளவு குடியுங்கள்.
இவ்வாறு நீங்கள் குடித்து வந்தால் வயிற்று வலி நீங்கி விடும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் – அருகம்புல் அற்புதமான மருத்துவ குணங்கள்..!
முகத்தில் உள்ள பருக்கள் நீங்க:
சின்ன சின்னதாக வெட்டிய வெட்டி வேர் சிறிதளவு, கொட்டை நீக்கிய கடுக்காய் 1 இதை இரண்டையும் சுடுநீரில் போட்டு முதல் நாள் இரவே ஊறவைத்து விடுங்கள்.
பிறகு அதை மறுநாள் காலையில் எடுத்து அரைத்து முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் முக பருக்கள் நீங்கும்.
தீ காயத்திற்கு ஏற்ற மருந்து:
தீ காயம் ஏற்பட்டவர்களுக்கு இந்த வெட்டி வேரை அரைத்து தீ காயம் உள்ள இடத்தில் போட்டு வந்தால் தீ காயம் விரைவில் குணமாகும்.
அதுமட்டுமில்லாமல் வெயில் காலத்தில் ஏற்படும் வியர்வையினால் உடலில் துர்நாற்றம் வீசும். அத்தகைய துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கும் அரைத்த வெட்டி வேரை வெந்நீரில் கலந்து குளிக்க வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |