விக்கலை உடனடியாக நிறுத்துவது எப்படி தெரியுமா.?

Advertisement

விக்கல் நிறுத்துவது எப்படி..?

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். நாங்கள் உங்களுக்கு எழும் கேள்விகளுக்கு  பதில் அளித்து வருகிறது. அதில் சிலருக்கு இருக்கும் கேள்விகள் அடிக்கடி விக்கல் வருகிறது. விக்கல் எப்படி வருகிறது என்பதை விட அதனை எப்படி உடனே நிறுத்துவது என்பதில் தான் கவனம் இருக்கும் அல்லவா?  வாங்க அதனை உடனடியாக எப்படி நிறுத்துவது எப்படி என்று இந்த பதவி வாயிலாக பார்ப்போம்..!

விக்கலை உடனடியாக நிறுத்துவது எப்படி?

சிலருக்கு வீக்கம் வந்தால் அதனை பார்ப்பதற்கு மற்றவர்களுக்கு சிரிப்பாக இருந்தாலும் வந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும், அது எவ்வளவு கஷ்டம் என்று. சிலர் விக்கல் வந்த உடனே தண்ணீரை அதிகம் குடிப்பார்கள் ஆனால் அப்படி செய்தால் விக்கல் நிற்காது. இன்னும் சொல்லப்போனால் தண்ணீர் கொஞ்சம் நேரத்திற்கு முன் குடித்ததால் தான் விக்கல் வந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

வாயில் கை வைக்க வேண்டும்:

வாயில் கை வைக்க வேண்டும்

உங்களுக்கு விக்கல் எடுக்கும் போது தொடர்ந்து சத்தம் வந்து கொன்டு இருக்கும் அப்போது உங்களின் விரல்களை வாயில் வைக்கவும், அப்படி செய்வதால் விக்கல் நிற்குமா என்றால் நிற்கும் என்று சொல்கிறார்கள். இப்படி செய்தால் நிச்சயம் விக்கல் நிற்கும்.

முழங்கால்களை மடக்குங்கள்:

விக்கல் வரும் போது அமைதியாக இருக்கும் இடத்தில் நீங்கள் இருந்தால் உங்களை தான் அனைவருமே பார்ப்பார்கள், உங்களை பார்த்து சிரிப்பார்கள், அதேபோல் அங்கு தண்ணீர் இல்லை என்றால் தரையில் உட்கார்ந்து உங்கள் காலை மடக்கி உங்களின் மார்போடு அனைத்துக்கொள்ளவும்.

குழந்தைக்கு விக்கல் நிற்க:

குழந்தைகளுக்கு விக்கல் ஏற்பட்டால் உடனே அந்த குழந்தையில் வாயில் தேன் வைப்பார்கள் அப்போது குழந்தைக்கு ஏற்பட்ட விக்கல் நிற்கும். இதேபோல் பெரியவர்களுக்கு விக்கல் ஏற்பட்டால் அது அவர்களுக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்தும் ஆகவே அப்போது தேனை சாப்பிட்டால் அது அவர்களுக்கு விக்கல் எடுக்கலாமல் நிறுத்தும். தேனின் இனிப்பு சுவை நரம்பு மண்டலத்தை சமன் செய்யும்.

விக்கல் நிற்க பாட்டி வைத்தியம்:

குடிப்பவர்களை அதிகம் பார்த்திருப்பீர்கள் அல்லவா அவர்கள் கையில் வைத்திருப்பது என்னவென்று பார்த்தால் அது எலுமிச்சையாக இருக்கும். சிலர் குடித்தவுடன் விக்கல் எடுக்கும் அப்போது எலுமிச்சை பழத்தில் ஒரு துண்டை சாப்பிடுவார்கள் அப்படி சாப்பிடுவதால் விக்கல் உடனே நிற்க்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

இதை தெரிந்துகொள்ளுங்கள் 😨👉👉 கொட்டாவி ஏன் வருகிறது காரணம் தெரியுமா..?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil
Advertisement