உடல் எடை குறைய பீன்ஸ்..! | Beans Benefits for Weight Loss
ஒவ்வொருவருக்குமே அவங்க உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள நினைப்பார்கள். அந்த வகையில் பல்வேறு முயர்ச்சிகளையும் செய்வாங்க, இருந்தாலும் உடல் எடை குறையாது.
ஒருவருக்கு உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், அவர்கள் உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கலோரிகள் குறைவாக இருக்கும், அதே சமயம் கலோரிகளை கரைக்க உதவும் உணவுப் பொருட்களையும் உட்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் பீன்ஸை உணவில் அதிகளவு சேர்த்து கொள்ளுங்கள், பீன்ஸில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக பீன்ஸை அதிகளவு உட்கொள்வதினால் உடல் எடையை குறைக்கலாம்.
பீன்ஸில் உள்ள சத்துக்களால், உடலுறுப்புக்கள் சீராக செயல்படுவதோடு, நோய்களின் தாக்கமும் குறையும். அதிலும் பீன்ஸை வேக வைத்து சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள சத்துக்களை முழுவதுமாகப் பெறலாம்.
இதையும் படிக்கவும் ![]() |
படிகாரத்தை வைத்து 9 அருமையான Treatment..! |
சரி, இப்போது பீன்ஸில் உள்ள சத்துக்களையும், அதனை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பார்ப்போம் வாங்க !!!
உடல் எடை குறைய (Weight Loss Tips in Tamil) பீன்ஸ்:
உடல் எடை குறைய உணவில் அதிகளவு பீன்ஸை சேர்த்து கொள்ளுங்கள். ஏன் என்றால், பீன்ஸில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலம் சீராக இயங்குவதோடு, மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமலும் தடுக்கும்.
இதன் மூலம் கழிவுகள் முறையாக வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறைய (Weight loss tips in tamil) ஆரம்பிக்கும்.
புரோட்டீன்:
பீன்ஸில் புரோட்டீன் அதிகம் உள்ளது. உடல் எடை குறைய (Weight loss tips in tamil) புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஆகவே தினமும் அதிகளவு புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொண்டால், உடல் எடையைக் குறைக்கலாம்.
எனவே உடல் எடையை குறைக்க (Weight loss tips in tamil) நினைப்பவர்கள் தினமும் பீன்ஸினை அதிகளவு உட்கொள்ளவும்.
கலோரிகள் (Weight Loss Tips in Tamil):
பீன்ஸில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதினால், இதை உட்கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம்.
உடலில் ஆற்றலை அதிகரிக்கும்:
பீன்ஸ் சாப்பிடுவதன் மூலம் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். இதனால் உடல் எடையை குறைக்க நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.
இன்சுலின் அளவுகள்:
பீன்ஸில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைத்துக்கொள்ளும். எனவே நீரிழிவு நோயாளிகள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், பீன்ஸை அதிகளவு உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதனால் உங்களின் உடல் எடையை மிக விரைவில் குறைத்துவிட முடியும்.
இதையும் படிக்கவும் ![]() |
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | udal edai athikarikka tips |