பபிள் கம்மை விழுங்கினா என்ன ஆகும் தெரியுமா?

Advertisement

பபிள் கம்மை விழுங்கினா என்ன ஆகும் 

பெரும்பாலும் சிரியவர்களிடம் பபிள் கம்மை விழுங்க கூடாது என்று சொன்னாலும், சில சமையத்தில் அவர்கள் தெரியாமல் விழுங்கிவிடுவார்கள். சிரியவர்களை ஏன் உதாரணத்திற்கு சொல்ல வேண்டும், பெரியவர்கள் கூட சில சமையத்தில் பபிள் கம்மை விழுங்கிவிடுவார்கள். இருப்பினும் அனைவருக்கும் இருக்கும் பயம் ஒன்று தான் பபிள் கம்மை விழுங்கி விட்டோமே ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்ற எண்ணம் மனதிற்குள் ஓடும். சரி இந்த பபிள் கம்மை விழுங்கினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

Chewing Gum-ஐ விழுங்கினா என்ன ஆகும் தெரியுமா?

பொதுவாக பபிள் கம்மை விழுங்கினால் வயிற்றுக்குள் ஒட்டிக்கொள்ளும். இது சரியாக குறைந்தது ஏழு வருடங்கள் ஆகும் என்று சொல்வார்கள். குறிப்பாக நாம் சாப்பிடும் உணவுகள் அதற்கு அப்பறம் சரியாக செரிமானம் ஆகாது என்று பல விதமாக சொல்லி பயம் காட்டிவிடுவார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் எப்படி செரிமானம் ஆகிறதோ. அதே போன்று தான் நாம் விழுங்கிய பபிள் காம்மும் செரிமானம் ஆகும். ஆனால் என்ன மற்ற உணவுகளை காட்டிலும் பபிள் காமை நமது உடல் செரிமானம் செய்வதற்கு அதிக நேரம் எடுத்து கொள்ளும். மற்ற படி வேறு எந்த பிரச்சனையும் வராது.

இருப்பினும் நீங்கள் பபிள் கம்மை பெரிய அளவில் விழுங்கி இருந்திருந்தாலோ.. அல்லது சிறிய பபிள் காமை அடிக்கடி விழுங்கி இருந்தால். பின் அது செரிமான மண்டலத்தில் தடையை ஏற்படுத்திவிடும். எப்போவாவது ஒரு முறை நீங்கள் பாபில் கம்மை விழுங்கி இருந்தால் அது பெரிய ஆபத்தே இல்லை. இனிப்பூட்டிகள் மற்றும் சில பிளேவர்களை கொண்ட பபிள் காம் வயிற்றில் எளிதாக செறிந்து விடும். ஆனால் பபிள் காம்மில் உள்ள கம் போன்ற பொருள் மட்டும் செரிமானம் ஆகாமல் குடல் வழியாக தள்ளப்பட்டு கழிவு வழியாக வெளியேற்ற பட்டுவிடும்.

குழந்தைகளுக்கு ஓரளவு விவரம் தெரியும் வரை பெற்றோர்கள் பபிள் காம் வாங்கி தருவதை முற்றிலும் தவிர்க்கவும். ஏனென்றால் குழந்தையின் தொண்டைக்குள் சிக்கி கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் வயிற்று கோளாறு உள்ளவர்கள், சில உடல் நல கோளாறு உள்ளவர்கள் இந்த பபிள் கம்மை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து கொள்ளவும். ஏனென்றால் சில சமையம் நீங்கள் தெரியாமல் விழுங்கி விட்டிர்கள் என்றால் பிறகு நீங்கள் தான் பிரச்சனையை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

பெரியவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பபிள் கம்மை சாப்பிடலாம். அதற்கு மேல் அதிகளவு தினமும் பபிள் கம் சாப்பிட்டிர்கள் என்றால் தாடை எலும்புகளில் சில கோளாறுகளை ஏற்படுத்திவிடுமாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement