இரவு சாப்பாட்டில் இந்த 5 வகையான உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள்..!

இரவு சாப்பாடு

வணக்கம் நண்பர்களே..! சாப்பாடு என்பது அனைவரும் உயிர் வாழ்வதற்கு அவசியமான ஒன்று. அப்படி நாம் சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக்கொண்டால் தான் நம்முடைய உடல் ஆரோக்கியமானதாக இருக்கும். அதுபோல இரவு நேர தூக்கம் என்பது நம்முடைய உடலுக்கு அவசியமான ஒன்று. அப்படி இரவு தூங்குவதற்கு முன் சில உணவுகளை இரவு டின்னராக சாப்பிட கூடாது. அது என்னென்ன உணவுகள் என்று தொடரை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ டீயுடன் இந்த உணவை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள்…!

இரவு டின்னரில் சாப்பிட கூடாத உணவுகள்:

இரவு எப்போதும் தூங்குவதற்கு முன்பு சத்தான உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். அப்படி இருக்கும்போது இரவில் இந்த 5 உணவுகளை மட்டும் சாப்பிட கூடாது. அது என்னென்ன உணவுகள் என்று கீழே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

  • கோதுமை மாவு
  • பச்சை காய்கறிகள் 
  • மைதா மாவு 
  • தயிர் 
  • உப்பு 

கோதுமை மாவு:

இரவு நேரத்தில் கோதுமையை பயன்படுத்தி செய்யும் எந்த உணவுகளையும் சாப்பிட கூடாது. ஏனென்றால் இரவு நேரத்தில் கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது நமது உடல் ஜீரணம் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் கோதுமை மாவினால் செய்யப்பட்ட எந்த உணவினை இரவில் சாப்பிட கூடாது என்று ஆயர்வேத நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

பச்சை காய்கறிகள்:

நமது உடலுக்கு பொதுவாக பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது. ஆனால் இரவு நேரத்தில் பச்சை காய்கறிகள் சாப்பிட கூடாது. ஏனென்றால் இரவில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவதால் செரிமான கோளாறு ஏற்படும். அதனால் காய்கறிகளை வேகவைத்து சாப்பிடலாம்.

மைதா மாவு:

மைதா மாவில் நார்ச்சத்துக்கள் குறைவாக இருக்கிறது. பகலில் அதை சாப்பிட்டாலே செரிமான ஆகுவதற்கு ரொம்ப நேரம் ஆகிவிடும். அதுமட்டும் இல்லாமல் மலசிக்கல், ஜீரண கோளாறு இதுபோன்ற பிரச்சனைகள் வரும். அதனால் இரவு நேரத்தில் மைதா மாவு சம்மந்தப்பட்ட எந்த உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தயிர்:

காலை மற்றும் மதியம் இந்த இரண்டு வேளைகளில் எடுத்துக்கொள்ளும் அளவிற்கு தயிரினை இரவில் சாப்பிட கூடாது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். தயிரில் இனிப்பு மற்றும் புளிப்பு கலந்திருக்கிறது. அதனை இரவில் சாப்பிடும் போது நாசி பாதியில் சளி உருவாகலாம். இருமல் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை வரும் என்று சொல்லப்படுகிறது.

உப்பு:

இரவில் நாம் சாப்பிடும் உணவுகளில் அதிகம் சோடியம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. இரவு 7 மணிக்கு மேல் அதிகம் உப்பு சார்ந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.

இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அது விஷமாக மாறும்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Tamil maruthuvam tips