What To Eat During Menstruation Period in Tamil
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கின் காரணமாக பெண்களின் உடல் மிகவும் பலமின்றி இருக்கும். அந்த நேரத்தில் அவர்கள் சிலவற்றை கடைபிடிக்க வேண்டும். அதில் முக்கியமான ஒன்று அவர்கள் சாப்பிடும் உணவுகள் தான். மாதவிடாய் காலத்தில் பெண்கள் சத்து நிறைந்த உணவுகளை கட்டாயமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் கர்ப்பப்பை வலிமையின்றி இருக்கும். எனவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் சில உணவுகளை கட்டாயமாக சாப்பிட வேண்டும். எனவே மாதவிடாய் காலத்தில் பெண்கள் கட்டாயமாக உட்கொள்ள வேண்டிய உணவுகள் என்னவென்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
மாதவிடாய் காலத்தில் சாப்பிட வேண்டியவை:
வாழைப்பூ:
வாழை பூ துவர்ப்பு சுவை உடையது. இதில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதை பெண்கள் அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் மலட்டு தன்மை பிரச்சனை வராமல் இருக்கும். வாழை பூவை கர்ப்பப்பையின் காவலன் என்றும் கூறுகிறார்கள்.
வெள்ளைப்படுதல் ஏற்பட காரணம் அதனை தடுப்பதற்கான வழிகள்.! |
பயன்படுத்தும் முறை:
வாழைப்பூவை சுத்தம் செய்து அரிசி கழுவிய தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். பிறகு இதை கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்துக்கொள்ளுங்கள்.
இதை பெண்கள், மாதவிடாய் காலத்தில் சாதத்துடன் சேர்த்து அதனுடன் சிறிதளவு நெய்யும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பையில் ஒதுங்கியிருக்கும் இரத்தம் வெளியேறும்.
தண்ணீர்:
மாதவிடாய் காலத்தில் திரவ ஆதாரங்களைஅதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். திரவ ஆதாரங்களில் முதன்மையானது தண்ணீர். மாதவிடாய் காலத்தில் வயிற்றை காயவிடாமல் தண்ணீர் குடிப்பதன் மூலம் வயிற்று வலி வராமல் இருக்கும்.
பயன்படுத்தும் முறை:
மாதவிடாய் நாட்களில் 8 லிருந்து 12 டம்ளர் வரை தண்ணீர் குடிக்கவேண்டும். தண்ணீர் மட்டுமில்லாமல் மோர், சிறிதளவு உப்பு, சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு போன்றவற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்து குடிக்க வேண்டும்.
பால்:
மாதவிடாய் காலத்தில் டீ, காபி போன்றவற்றை தவிர்த்து சத்துள்ள பால் குடிக்க வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து காய்ச்சி குடிக்கவேண்டும். மேலும் அதனுடன் சிறிதளவு கசகசாவையும் சேர்த்து அரைத்து குடித்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கை, கால் வலி மற்றும் இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் குறைந்து விடும்.
மாதவிடாய் காலத்தில் இந்த பிரச்சனைகளால் கஷ்டப்படுபவர்கள் இந்த பாலை மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இதை தினமும் இரவில் குடித்து வர வேண்டும்.
பெண்களின் அடி வயிறு வலி |
கீரை வகைகள்:
மாதவிடாய் காலங்களில் பெண்கள் கீரை வகைகளை கட்டாயமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். கீரையை சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்த சோகை பிரச்சனையை ஈடு செய்ய முடியும்.
அதுமட்டுமில்லாமல், மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய உடல் வலியையும் போக்க நல்லது.
பயன்படுத்தும் முறை:
மாதவிடாய் காலத்தில் பெண்கள், கட்டாயமாக கீரையை கூட்டாகவோ அல்லது பொறியலாகவோ செய்து சாப்பிட வேண்டும்.
வெந்தயம்:
வெந்தயத்தில் உள்ள டயாஜினின் என்ற வேதியல் பொருள் ஹார்மோன் சுரப்பு வேலையை சீராக்கி கர்ப்பப்பை கோளாறுகளை நீக்கி மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனையை குறைகிறது.
பயன்படுத்தும் முறை:
வெந்தயத்தை பொடி செய்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம் அல்லது வெந்தய கஞ்சி செய்து குடிக்கலாம்.
மாதவிடாய் காலத்தில் இந்த பொருட்களை உணவில் சேர்த்து கொள்ளாதீர்கள்..! சேர்த்தீர்கள் என்றால் அவ்வளவு தான்..! |
வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள சர்க்கரை உடலுக்கு உடனடியாக ஆற்றலை தருகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் இதை சாப்பிடுவதன் மூலம் உடலை உற்சாகமாகவும் மன அழுத்தமின்றியும் வைத்திருக்கலாம்.
பயன்படுத்தும் முறை:
வாழைப்பழத்தில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால் இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாமால் மற்ற நேரங்களில் சாப்பிட வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |