காளானை இவர்கள் மறந்தும் சாப்பிடவே கூடாது.!

who cannot eat mushroom in tamil

காளான் தீமைகள்

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் காளானில் உள்ள சத்துக்கள் மற்றும் யாரெல்லாம் சாப்பிட கூடாது என்று தெரிந்து கொள்வோம். காளானை ஒரு சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு சிலர் விரும்ப மாட்டார்கள். காளானை வீட்டில் சமைப்பது அரிதான விஷயம். கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். எப்படி சாப்பிட்டாலும் சில நபர்கள் சாப்பிடவே கூடாது. வாங்க யார் சாப்பிட கூடாது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

காளானில் உள்ள சத்துக்கள்:

காளானில் ஜின்க், காப்பர், மினரல், பொட்டாசியம், சோடியம் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றன. மற்றும் கே, சி, டி, பி போன்ற சத்துக்கள் உள்ளன. இதில் புரதச் சத்து அதிகமாக உள்ளது.

காளானை யாரெல்லாம் சாப்பிடலாம்:

காளானை நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடலாம்.

மேலும் இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் இரத்தம் அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் காளானை சாப்பிடலாம்.

காளான் யார் சாப்பிடக்கூடாது:

காளானை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்  சாப்பிட கூடாது. ஏனென்றால் தாய் பால் சுரப்பதை தடுத்துவிடும்.

மேலும் சரும பிரச்சனைகள், கீழ்வாதம் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட கூடாது. சரும பிரச்சனை உள்ளவர்கள் காளானை சாப்பிட்டால் சரும பிரச்சனைகள் அதிகமாகும்.

காளானை எப்படி பயன்படுத்த வேண்டும்:

காளானை சமைப்பதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து கொண்டு அதில் எலுமிச்சை சாறு கலக்கவும். இந்த தண்ணீரில் காளானை கழுவிட்டு சமையலுக்கு பயன்படுத்தலாம். காளானை மூன்று நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். ஆனால் பிரீஸரில் வைத்து பயன்படுத்த கூடாது.

காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

காளான் சாப்பிடுவதால் எலும்புகளை வலிமை பெற உதவுகிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்க உதவுகிறது.

புற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்