குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்..!

Winter Season Weight Loss Foods in Tamil

இன்றைய ஆரோக்கியம் பதிவில் குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் எது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். குளிர்காலம் வந்தாலே அனைவரும் அதிகமாக சாப்பிட தொடங்குகிறார்கள். காரணம், குளிர்காலம் வரும் போது பண்டிகைகளும் விழாக்களும் சேர்ந்தே வந்து விடும். இதன் காரணமாக நாமும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உடல் எடையை கூட்டி விடுகிறோம்.

அதுமட்டுமில்லாமல், இந்த குளிர்காலத்தில் நாம் சூடாகவும் காரசாரமாகவும் சாப்பிட வேண்டும் என்ற நோக்கில் இறைச்சிகளை வாங்கி சாப்பிடுகிறோம். இதனால் மேலும் உடல் எடை அதிகரிக்கிறது. அந்த வகையில் குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் என்ன என்று பார்க்கலாம் வாங்க..!

உடல் எடை குறைய கலோரி குறைந்த உணவுகள்

குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்:

கொய்யாப்பழம்: 

கொய்யாப்பழம்

இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் நெல்லிக்காய்க்கு அடுத்து வைட்டமின் சி அதிகம் உள்ள பழம் இது தான். தினமும் இரண்டு கொய்யாப்பழம் சாப்பிட்டு வருவது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. மேலும், இது உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது.

சக்கரவள்ளி கிழங்கு:

சக்கரவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் A, B, C, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற பலவிதமான சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால் இது உடலில் கொழுப்பு சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கேரட்: 

கேரட்

கேரட்டில் கால்சியம், வைட்டமின் A, D, E, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துகள் காணப்படுகின்றன. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், கேரட்டில் கலோரிகள் குறைவாக இருப்பதால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

பீட்ரூட்:

பீட்ரூட்

இதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் உடல் எடையை குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளன. மேலும் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்
10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்

 

இதுபோன்ற உடல் ஆரோக்கியம் பற்றிய தகவலை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் Heath Tips In Tamil