11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..!

11 மாத குழந்தை உணவு அட்டவணை

11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..!

11 மாத குழந்தைகள் யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் தானாகவே நிற்ப்பார்கள். சில குழந்தைகள் சேர், கட்டில், சோபா போன்றவற்றின் உதவியுடன் நிற்ப்பார்கள். மிகவும் குறும்புத்தனமாகவும், அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடுவார்கள். இந்த நிலையில் குழந்தைக்கென்று தனியாக உணவு தயார் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

வீட்டில் அனைவருக்கும் சமைக்கும் உணவுகளையே 11 மாத குழந்தைகளுக்கு உணவாக கொடுக்கலாம். சில குழந்தைகள் இன்னும் மசித்த உணவுகளையே சாப்பிடுவார்கள். சில குழந்தைகள் காரமாக சாப்பிடுவார்கள், சில குழந்தைகள் காரமாக சாப்பிடமாட்டார்கள். ஒவ்வொரு குழந்தைகள் ஒவ்வொரு வகை.

அந்த வகையில் 11 மாத குழந்தை உணவு அட்டவணை (11 month old baby food) அதாவது 11 மாத குழந்தைகளுக்கு ஒரு வாரம் முறையில் என்னென்ன உணவுகளை கொடுக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் படித்தறிவோம்.

1 வயது குழந்தை உணவு வகைகள்..!

11 மாத குழந்தை உணவு அட்டவணை பட்டியல்:-

11 மாத குழந்தை உணவு அட்டவணை (11 month old baby food) பட்டியலில் பூண்டு, மிளகு, துளசி, இஞ்சி, பட்டை, ஜாதிக்காய், புதினா மற்றும் கருவேப்பிலை பொடி போன்ற மசாலா பொருட்களை 11 மாத குழந்தையின் உணவு பட்டியலில் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த மசாலா பொருட்களை சேர்த்து சமைக்கும் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு உடலில் எந்த ஒரு அலர்ஜியும் ஏற்படாது.

சரி இப்போது 11 மாத குழந்தை உணவு அட்டவணை (11 month old baby food) பட்டியலை நாம் படித்தறிவோம்.

பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்!

11 மாத குழந்தை உணவு அட்டவணை..!

நாள் 11 மாத குழந்தை உணவு அட்டவணை (11 month old baby food)..!
9 மணி 12 மணி 1.30 மணி 5 மணி 8 மணி 
திங்கள்சத்துமாவு கஞ்சிஆப்பிள் பழம்வெஜ் பிரியாணிமாதுளை ஜூஸ்தோசை
செவ்வாய்கேள்விரகு கஞ்சிஆரஞ்சு பழம்வெஜ் புலாவ்வேகவைத்த கொண்டைக்கடலைவெஜ் உப்புமா
புதன்அரிசி கஞ்சிதர்பூசணி அல்லது அவகேடாபருப்பு சாதம்வேகவைத்த பரங்கிக்காய்வெஜ் கிச்சடி
வியாழன்தோசைவாழைப்பழம்கீரை சாதம்திராட்சை ஜூஸ்பொங்கல்
வெள்ளிஇட்லிவீட்டில் தயார் செய்த ஏதேனும் ஒரு  பழசாறுநெய் சாதம் அல்லது சாம்பார் சாதம்கீரை நக்கெட்ஸ்அவித்த கொண்டைக்கடலை
சனிஆப்பிள் பான்கேக்பிஸ்கெட்பீட்ருட் சாதம்உளுந்து வடைபான்கேக்
ஞாயிறுரவை கஞ்சிபிரெட் ஸ்டிக்கேரட் சாதம்வெஜிடபிள் சூப்மிளகு ரசம் சாதம்
அதி காலை மற்றும் குழந்தை இரவு தூங்கும் நேரம் ஆகிய இரண்டு வேளையும் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

 

11 மாத குழந்தை உணவு அட்டவணை பட்டியல்களில் கொடுக்கப்பட்டுள்ள உணவு முறைகளை தினந்தோறும் தயக்கம் இல்லாமல் பின்பற்றி வரலாம். இருப்பினும் குழந்தை நல மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது மிகவும் நல்லது.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்