மழைக்காலத்தில் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?

Baby care tips in rainy season

மழைக்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?

மழைக்கால பாதுகாப்பு (Baby care tips in rainy season):- குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது என்று நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். எனவே குழந்தைகளின் சருமத்தை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கிய கடைமையாகும். அதுவும் புதிதாக பிறந்த குழந்தைகளை பாதுகாக்க சற்று அதிகம் கவனம் செலுத்த வேண்டும். தற்போது மழைக்காலம் வேற தொடங்கிவிட்டது. இந்த மழைக்காலம் வந்துவிட்டால் அதனுடன் கிருமிகளும் சேர்த்து வந்துவிடும். இது குழந்தைகளுக்கு பரவும் போது பல பிரச்சனைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த மழைக்காலத்தில் குழந்தைகளை எப்படி பத்திரமாக பார்த்து கொள்வது என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க…

7 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் ..!

மழைக்காலத்தில் குழந்தை பராமரிப்பு..!

மழைக்கால பாதுகாப்பு (Baby care tips in rainy season) டிப்ஸ்: 1

முதலில் உங்கள் வீட்டையும் வீட்டை சுற்றியுள்ள இடத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மழை காலத்தில் கிருமிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம்.

எனவே வீடு, தோட்டம் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றாகும்.

குளிர்காலங்களில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது..!

மழைக்கால பாதுகாப்பு (Baby care tips in rainy season) டிப்ஸ்: 2

baby care tips in rainy season 01

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.  ஏனெனில் நீங்கள் உண்ணும் உணவு தாய்ப்பால் வழியாகக் குழந்தைகளை பாதிப்பதற்கு வழிகள் உள்ளன.

எனவே நீங்கள் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் தேவை.

மழைக்கால பாதுகாப்பு (Baby care tips in rainy season) டிப்ஸ்: 3

baby care tips in rainy season 02

குழந்தைகளுக்கு மழைக்காலத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளும் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும். அதாவது காய்ச்சல், உடல் வலி, தும்மல் போன்ற சிறிய பிரச்சனைகளும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களின் அறிகுறியாகும்.

எனவே சிறிய பிரச்சனை தான் என்று விட்டுவிடாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..!

மழைக்கால பாதுகாப்பு (Baby care tips in rainy season) டிப்ஸ்: 4

மழைக்காலம் வந்துவிட்டால் கொசு தொல்லைகளும் அதிகரித்து விடும்.  கொசு கடித்தல் குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்தும். மேலும் கொசு கடித்த இடத்தில் சிவப்பாக தடித்து வீக்கத்தையும் ஏற்படுத்தி விடும்.

எனவே குழந்தைகளை கொசு நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை தூங்க வைக்கும்போது அவர்களை பாதுகாப்பான கொசு வலைக்குள் தூங்க வைய்யுங்கள். மாலை நேரத்தில் குழந்தைகளின் முழு உடலையும் முடி வையுங்கள். முடிந்தால் இயற்கையான கொசு விரட்டியைப் பயன்படுத்துங்கள்.

மழைக்கால பாதுகாப்பு (Baby care tips in rainy season) டிப்ஸ்: 5

மழைக்காலத்தில் குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது நாப்கின் அணியாமல் இருப்பதே நல்லது. குழம்பிதைகளுக்கு மழைக்காலத்தில் நாப்கின் அணிந்தால் அவை ஈரமானால் உடனே கழற்றிவிடுங்கள்.

நாப்கின் குழந்தைகளின் இடுப்பில் ஈரத்துடன் இருப்பதால் பாக்டீரியாக்கள் பரவி குழந்தைகளுக்கு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகளைக் கவனித்து அடிக்கடி நாப்கின்களை மாற்றி விடுங்கள்.

மழைக்கால பாதுகாப்பு (Baby care tips in rainy season) டிப்ஸ்: 6

மழைக்காலத்தில் குழந்தைகள் அணியும் ஆடைகளில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மழைக்காலத்தில் ஏற்படும் குளிரிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க குழந்தைகளுக்கு காட்டன் ஆடை அல்லது கம்பளி ஆடைகளை அணிந்து விடுங்கள். இவை குழந்தைகளை குளிரில் இருந்து பாதுகாக்கும்.

மழைக்கால பாதுகாப்பு (Baby care tips in rainy season) டிப்ஸ்: 7

கைகளில்தான் அதிகப்படியான பேக்டீரியாக்கள் வசிக்கின்றன. எனவே பெற்றோர்கள் கைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் உங்கள் கைகளில் தான் குழந்தைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவுகளை கொடுக்கும் போது பாக்டீரியாக்கள் குழந்தைகளை தாக்க வழி உள்ளது. எனவே உங்கள் கைகளையும், குழந்தையின் கைகளையும் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா? இதோ எளிய வழிகள் !!!

மழைக்கால பாதுகாப்பு (Baby care tips in rainy season) டிப்ஸ்: 8

குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டார்கள் எனில், அவர்களுக்கு மழைகாலங்களில் கொடுக்கப்படும் உணவானது புதிய ஒன்றாகவும் மற்றும் சூடானதாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். திரவமாக ஏதாவது குழந்தைகளுக்குக் கொடுக்கும் போதும் அவற்றை நன்றாகச் சூடேற்றி கொடுப்பதே சிறந்தது.

மழைக்கால பாதுகாப்பு (Baby care tips in rainy season) டிப்ஸ்: 9

மழைக்காலத்தில் குழந்தைகளைச் சுத்தமாக வைத்து கொள்ளவேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும். அதற்காக குழந்தைகளை மலைக்காலத்தில் தினமும் குளிக்க வைக்க முடியாது. எனவே ஒரு ஈரத்துணையை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குழந்தைகளை துடைக்க வேண்டும். ஈரத்துணியால் துடைத்த பிறகு மிக முக்கியம் மற்றொரு காய்ந்த துணியைக் கொண்டு குழந்தைகளின் உடலில் ஈரம் இல்லாமல் சுத்தமாகத் துடைப்பது தான். இவை எல்லாவற்றையும் கடைபிடித்து குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுங்கள்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby health tips in tamil