குழந்தை நிறம் அதிகரிக்க இந்த பேக் ஒன்றே போதும்..!

Advertisement

குழந்தையின் நிறம் அதிகரிக்க இந்த பேக் ஒன்றே போதும்..!

குழந்தையின் நிறம் அதிகரிக்க சில டிப்ஸ் – குழந்தையின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும் என்பதினால் குழந்தைகளுக்கு எப்பொழுதும் கெமிக்கல் நிறைந்த சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளவேண்டும்.

இதனால் குழந்தையின் சருமம் என்றும் மென்மையுடன் ஆரோக்கியமாக இருக்கும்.

சரி வாங்க குழந்தை சிவப்பாக மாற (baby skin colour improvement tips in tamil) என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க.

உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா? இதோ எளிய வழிகள் !!!

குழந்தை சிவப்பாக மாற சந்தனம்:

குழந்தை சிவப்பாக மாற (baby skin colour improvement tips in tamil) வேண்டும் என்பதற்க்காக கடைகளில் விற்கப்படும் கண்டகண்ட கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதில், இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமாக விளங்கும் சந்தனைத்தை குழந்தைக்கு பயன்படுத்தலாம்.

அதுவும் கடைகளில் விற்கப்படும் சந்தனம் பொடியை பயன்படுத்த கூடாது. அதற்கு பதில் சந்தன கட்டையை வாங்கி, அவற்றை உரசி குழந்தைகளுக்கு பயன்படுத்தவும்.

இவ்வாறு செய்வதினால் குழந்தை சருமம் என்றும் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும். குறிப்பாக குழந்தை சிவப்பாக மாற இந்த சந்தனம் ஒரு சிறந்த இயற்கை வரப்பிரசாதமாகும்.

குழந்தையின் நிறம் அதிகரிக்க – மஞ்சள் தூள்:

மஞ்சள் தூள் ஒரு கிருமி நாசினியாக விளங்குகிறது. குறிப்பாக மஞ்சள் தூள் குழந்தை நிறம் அதிகரிக்க மிகவும் பயன்படுகிறது. எனவே குழந்தை நிறம் அதிகரிக்க மஞ்சள் தூளினை பயன்படுத்தலாம்.

குறிப்பாக குழந்தைக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் சுத்தமான மஞ்சள் தூளாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்ட பின்பு, குழந்தைக்கு பயன்படுத்துங்கள்.

குழந்தை சிவப்பாக மாற – குங்குமப்பூ மற்றும் பால்:

குங்குமப்பூ மற்றும் பால் இவை இரண்டுமே இயற்கையாகவே சரும நிறத்தை அதிகரிக்க அனைத்து அழகுநிலையங்களிலும் பயன்படுத்த கூடிய ஒரு சிறந்த பொருட்கள். இவை இரண்டும் குழந்தை நிறம் அதிகரிக்க மிகவும் பயன்படுகிறது.

சரி வாங்க மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களும், குழந்தையின் நிறத்தை அதிகரிக்க எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..!

குழந்தையின் நிறம் அதிகரிக்க ஃபேஸ் பேக் செய்முறை:-

குழந்தையின் நிறம் அதிகரிக்க இந்த பேக் ஒன்றே போதும். முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றில் இரண்டு ஸ்பூன் சந்தானம், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் குங்குமப்பூ மற்றும் மூன்று ஸ்பூன் காய்ச்சாத பசும் பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேக் போல் செய்து கொள்ளவும்.

இந்த ஃபேஸ் பேக்கினை குழந்தைகளுக்கு உடல் முழுவதும் தடவி, சிறிது நேரம் வைத்திருக்கவும். பின்பு குழந்தையை வெது வெதுப்பான நீரில் குளிக்கவைக்கவும். இந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வர குழந்தையின் நிறம் அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு:

குழந்தையின் நிறம் அதிகரிக்க மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகள் குழந்தைக்கு எந்த ஒரு பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. இருப்பினும் குழந்தை நல மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று, பின்பு மேற்கொள்ளவும். நன்றி நண்பர்களே..!

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement