குழந்தைக்கு மொட்டை அடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்..! Benefits of Shaving Head..!
அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் குழந்தைகளுக்கான பதிவை பார்க்க போகிறோம். குழந்தைக்கு மொட்டை அடிப்பதனால்(Shaving Head) ஏற்படும் நன்மைகள், மொட்டை எப்போது அடிக்கலாம் என்பதன் விவரங்களை பற்றி கீழே முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..!
பிறந்த குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து இல்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள் |
நன்மைகள்:
இன்றைய காலகட்டத்தில் இளம் தம்பதியினர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைக்கு மொட்டை அடிப்பது(Shaving Head) குற்றம், தவறு, ஏதோ மனநல பிரச்னை இருக்கிறது போல தோன்றலாம் என நினைத்துக்கொண்டு இன்று வரை தங்கள் குழந்தைக்கு மொட்டை அடிக்காமலே இருக்கின்றனர்.
பெரும்பாலான சமயங்களில் மொட்டை அடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இந்து சமயம், புத்த சமயம், சமண சமயம், இஸ்லாம் சமயம், ரோமன் கேத்தோலிக்ஸ் போன்ற சமயங்களில் மொட்டை அடிக்கும் பழக்கத்தை பின்பற்றுவார்கள்.
கடந்த பிறவியிலிருந்த தொடர்புகளைத் துண்டிப்பதற்காக மொட்டை போடுவதாக சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதால் இந்த பிறவியில் தன் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக மொட்டை அடிக்கப்படுவதாகவும் சிலர் சொல்கின்றனர்.
சரி குழந்தைகளுக்கு மொட்டை அவசியமா? மொட்டை அடிக்க கூடாதா? மொட்டை அடிப்பது ஏன்? என்ற விவரங்களை படித்தறிவோம் வாங்க..!
மொட்டை அடிப்பதனால் குழந்தையின் உடலில் என்னெல்லாம் நடக்கும்:
மரத்தில், செடியில் உள்ள இலைகளை கழித்துவிட்டால் மரமோ செடியோ அதன் சக்தியை இலைகள் இல்லாத இடத்துக்குத் திருப்பி இலைகள் மீண்டும் வளரும்படி தன் ஆற்றலை பாய்ச்சும்.
அதேபோன்று குழந்தைக்கு மொட்டை அடித்தால் உடலும் அந்த இடத்தில் தன் ஆற்றலை பாய்ச்சி சற்று உறுதியான, ஆரோக்கியமான முடியை வளர வைக்கும். முன்பு இருந்தது போல இல்லாமல் முடி நன்றாக அடர்த்தியாகவே வளரும் என சில அறிவியல் ஞானிகளால் சொல்லப்படுகிறது.
உங்கள் செல்ல குழந்தைகளுக்கான கஞ்சி உணவு செய்முறை..! Porridge for Babies ..! |
மொட்டை அடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்:
நரம்புகள், ரத்த நாளங்கள் ஆகியவை தூண்டப்பட மொட்டை அடிக்கும் பழக்கம் உதவுகிறது. குழந்தைக்கு மொட்டை போடுவதனால் மூளை வளர்ச்சியும் நன்றாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
குழந்தைக்கு பல் வளரும்போது மொட்டை அடிக்கலாம் எனும் பழக்கம் தொடர்கிறது. பல் வளர்ச்சி இருக்கும்போது குழந்தையின் உடல் அதிக வெப்பம் அடையும், தலை பாரமாக இருக்கும். இந்த தருணங்களில் மொட்டை அடித்தால், உடலில் உள்ள அசௌகரியத்தைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகளின் மண்டைத் தோலில் உள்ள தொற்றுகள், பாதிப்புகள், பூஞ்சைகள் ஆகியவை மொட்டை அடிப்பதால் நீங்குகின்றன. இதனால் குழந்தையின் முடி வளர மிகவும் உதவுகிறது.
வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு முடி எடுப்பதால், வியர்வையால் ஏற்படும் பிரச்னைகளும் தடுக்கப்படுகின்றன. மொட்டை அடித்த பிறகு சில காலம் வரை தலையைப் பராமரிக்க எளிது. பேன், தொற்றுகள் போன்ற பிரச்சனைகள் இருக்காது.
நம்பிக்கைகள்:
குழந்தைக்கு மொட்டை போடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். குழந்தை வயிற்றில் இருக்கும் போது, இருந்த அசுத்தம், மண்டைத்தோலில் இருக்கும். அவை நீங்கும்.
ரத்த ஓட்டம் மேம்படும். முடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். உடலின் ஆன்மாவும் சுத்தப்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.
மொட்டை அடிப்பதால்(Shaving Baby Head) தலைக்கணம் நீங்கி, கடவுளுக்கு அருகில் வருவோம் எனவும் சொல்லப்படுகிறது.
குழந்தைக்கு மொட்டை அடிப்பது எப்போது:
குழந்தைக்கு 9 மாதம், 11 மாதம், 1 வயது, 3 அல்லது 5 வயதில் மொட்டை அடிக்கலாம்.
மொட்டை அடிப்பதற்கான முக்கிய டிப்ஸ்:
குழந்தைக்கு நீங்கள் மொட்டை அடிப்பதாக இருந்தால் பிளேட், ரேசர் ஆகியவை ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டதா என உறுதி செய்து கொள்ளுங்கள்.
குழந்தையின் தலையில் எந்த காயமும் வராதபடி, மிக சிறந்த, மொட்டை அடிக்கும் நபரிடம் உங்கள் குழந்தைக்கு மொட்டை அடிக்க சொல்லி அழைக்கலாம்.
குழந்தைகளுக்கு வெப்ப காலங்கள், மிதமான வெப்ப காலங்களில் மொட்டை அடிக்கலாம்.
குழந்தைக்கு மொட்டை அடிக்கும் முன் உணவுக் கொடுங்கள். பசியோடு குழந்தைக்கு மொட்டை அடிக்க வேண்டாம். குழந்தைக்கு காற்று போகும்படியான உடைகளை அணிந்துவிட வேண்டும்.
குழந்தைக்கு மொட்டை போட்டபின் என்ன செய்ய வேண்டும்:
குழந்தைக்கு மொட்டை போட்டபின் வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிக்க வைக்கலாம். குழந்தையின் தலையை போட்டு தேய்க்காமல், மெதுவாக டவலால் ஒத்தி எடுங்கள்.
மொட்டை போட்டவுடன் குழந்தையின் தலையில் வெண்ணெய் அல்லது தயிர் பூசி, அதன் பிறகு சந்தனம் பூசலாம். குழந்தையின் தலை எரிச்சலைக் குறைக்கும்.
சிறிது மஞ்சளும் சந்தனமும் சேர்த்துப் பூசலாம். மஞ்சள் கிருமி நாசினி, சந்தனமும் குளிர்ச்சியைத் தரும். மொட்டை அடித்து ஓரிரு வாரம் வரை குழந்தையின் தலையில் ஷாம்பு பயன்படுத்த வேண்டாம்.
மொட்டை அடித்தபின் பராமரிப்பு:
- உணவு:
குழந்தைக்கு மொட்டை அடிக்கும் முன்பும் அடித்த பின்பும் நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுக்கவும்.
பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள், பழங்கள் கொடுக்கலாம்.
இரும்பு சத்து உணவுகள், விட்டமின் சி உணவுகள் குழந்தையின் முடி வளர்ச்சிக்கு மிக மிக முக்கியம்.
பூசணி கூழ், பரங்கிக்காய் கூழ், சக்கரைவள்ளிகிழங்கு கூழ், பப்பாளி, ஆரஞ்சு, சிட்ரஸ் பழங்கள் ஆகிய உணவுகளை கொடுக்கலாம்.
பிரவுன் அரிசி புட்டு, ராகி புட்டு போன்ற உணவு வகைகளை குழந்தைக்கு கொடுக்கலாம்.
2. எண்ணெய்:
குழந்தைக்கு தினமும் தலையில் எண்ணெய்த் தடவ வேண்டும்.
மண்டைத்தோலுக்கு எண்ணெய் அவசியம்.
குழந்தையின் சருமத்தை சரியான பதத்தில் வைத்திருக்கும். குழந்தையின் நரம்புகள் தூண்டப்படும்.
செதிலாக மாறுவது, அரிப்பு போன்றவை வராது. குழந்தைக்கு மொட்டை போட்ட தலையில் ஆர்கானிக் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் தடவலாம்.
3. தலையை அலசுதல்:
மொட்டை போட்ட தலையில்(Shaving Head) குழந்தைக்கு மைல்டான ஷாம்புவை பயன்படுத்தலாம்.
நிறைய முடி இருந்தால் இயற்கை கண்டிஷனர் பயன்படுத்தலாம்.
முடியில் தயிர் அல்லது முட்டையின் வெள்ளைகரு தடவிய பிறகு 10 நிமிடங்கள் கழித்து அலசி விடலாம்.
4. உலர்த்துதல்:
குழந்தை முடியை போட்டு தேய்க்க கூடாது. டவலால் அழுத்தித் தேய்க்க கூடாது.
குழந்தை தலையில் உள்ள ஈரத்தை ஒத்தி எடுக்க வேண்டும். இல்லையெனில் முடியின் வேர்க்கால்கள் பாதிக்கும்.
மிருதுவான சீப்பால் குழந்தையின் முடியை வார வேண்டும்.
அகலமான பற்கள் கொண்ட சீப்பை குழந்தைக்கு பயன்படுத்தலாம்.
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |