குழந்தையின் உடலை பாதுகாக்கும் தேங்காய் எண்ணெயின் மகிமைகள்..! Coconut Oil For Baby Skin Care..!
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் குழந்தையின் உடலை பாதுகாப்பாக வைத்திருக்கும் தேங்காய் எண்ணெயின் 6 நன்மைகளை பற்றி இன்று தெரிந்து கொள்ளுவோம். குழந்தைக்கு வெயில் காலத்திலும் சரி, மழை காலங்களிலும் சரி, ஏதேனும் ஒரு வகையில் பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கும். அந்த பிரச்சனையை தேங்காய் எண்ணெயின்(Benefits Of Coconut Oil) மூலம் எப்படி சரி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..!
டிப்ஸ் 1:
குழந்தையின் வறண்ட உதடு சரியாக:
உங்கள் குழந்தைக்கு உதடு வறண்டு போய் வெடிப்புகள் இருக்கிறது என்றால் குழந்தையின் உதட்டின் மேல் தேங்காய் எண்ணெயை தடவி வர வேண்டும்.
அதாவது கையின் ஒரு விரலால் வறண்டு போய் இருக்கும் உதடு மேல் தேங்காய் எண்ணையை தொட்டு 30 நொடிகள் குழந்தைக்கு வலிக்காதவாறு மெதுவாக மசாஜ் செய்யவேண்டும். இதை செய்து வந்தால் கண்டிப்பாக குழந்தையின் வறண்ட உதடு குணமாகும்.
டிப்ஸ் 2:
குழந்தைக்கு காயம் குணமாக:
குழந்தைகளுக்கு சருமத்தில் மற்றும் உடலில் எந்த பகுதியிலும் பூச்சிகள், கொசு போன்றவை கடித்து குழந்தைகள் அந்த இடத்தில் கைவைத்து சொரிந்து விடுவதால் பூச்சி கடித்த இடங்கள் குழந்தைக்கு அலர்ஜியாக மாறி சிவந்த நிலையில் மாறிவிடும்.
அது போன்ற காயங்கள் குழந்தைக்கு வராமல் தடுக்க தேங்காய் எண்ணெயை காயம் பட்ட இடத்தில் தடவிவர எளிதில் இந்த பிரச்சனை குணமடைய செய்யும்.
டிப்ஸ் 3:
டயாப்பர் அணிவதால் குழந்தைக்கு ஏற்படும் அரிப்பு நீங்க:
இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு டயாப்பர் அணியும் பழக்கம் இன்றும் உள்ளது. அந்த டயாபரை அவுக்கும் நிலையில் பார்த்தோம் என்றால் குழந்தைக்கு டயாப்பர் போட்ட இடம் தடித்தது போன்று இருக்கும்.
அதனால் அந்த பிரச்சனை வராமல் இருக்க குழந்தைக்கு டயாப்பர் மாற்றும் போது மறக்காமல் ஒவ்வொரு முறையும் டயாப்பர் போட்டுவிடும் இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி விட்டால் குழந்தைக்கு அரிப்பு பிரச்சனை நீங்கிவிடும்.
டிப்ஸ் 4:
தேங்காய் எண்ணெயின் சரும பாதுகாப்பு:
குழந்தைகளின் சருமத்தை பாதுகாப்பதற்கு சிறிய வயதில் இருந்து ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளை கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு மசாஜ் எண்ணெய் அனைவரும் பயன்படுத்துவோம். அதற்கு பதிலாக குழந்தைக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினாலே போதும்.
குழந்தைக்கு சருமத்தில் எந்த விதமான பிரச்சனைகளும் வராமல் குழந்தைக்கு சருமத்தை பாதுகாப்பாகவும், முகத்தை வெண்மையாக வைத்திருக்கும்.
டிப்ஸ் 5:
குழந்தை முடிக்கு தேங்காய் எண்ணெய் நன்மைகள்:
குழந்தைகளை தலை குளிப்பாட்டும் முன் குழந்தையின் தலையில் தேங்காய் எண்ணெயை 3 அல்லது 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
அப்படி செய்து வந்தால் குழந்தையின் மண்டையில் ரத்த ஓட்டம் சீராக அமையும். குழந்தைக்கு முடி கொட்டாமல் நன்றாக வளர்ச்சி அடையும்.
டிப்ஸ் 6:
குழந்தைகளுக்கு வறண்ட மண்டைத்தோல் குணமாக:
கைக்குழந்தை அனைவருக்கும் தலையில் பொடுகு போன்று இருக்கும். ஆனால் அது பொடுகு இல்லை. பொடுகு போன்று இருக்கும் வறண்ட மண்டைத்தோல் உதிர்ந்து காணப்படும்.
இந்த பிரச்சனை இல்லாமல் இருக்க வறண்ட மண்டை பகுதியில் தேங்காய் எண்ணெயை 20 நிமிடம் தடவி வைத்து அதன் பின்னர் வெது வெதுப்பான தண்ணீரில் குழந்தைக்கு தலையை கழுவி விடலாம். வறண்ட மண்டைத்தோல் பிரச்சனை விரைவில் குணமடையும்.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |