கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் குறைய டிப்ஸ்..!

கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம் உடனடியாக குறைய சில டிப்ஸ்..! High Blood Pressure During Pregnancy in Tamil..!

High Blood Pressure During Pregnancy in Tamil:- உயர் இரத்த அழுத்தம் என்பது நாம் எண்ணுவது போல் வயது தொடர்புடைய பாதிப்பு இல்லை. பெண்கள் பொதுவாக கர்ப்பகாலத்தில் ஹைப்பர் டென்ஸனால் பாதிக்கப்படுவது இயல்பான விஷயம் தான். பெண்கள் தங்களது கர்ப்ப காலத்திற்கு முன் அல்லது கர்ப்ப காலத்தில் அல்லது கர்ப்ப காலத்திற்கு பின் ஹைப்பர் டென்ஸனால் பாதிக்கப்படுகின்றன. இந்த உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்பு, பிறக்கும் குழந்தையின் எடையில் குறைபாடு, பிரீகிளாம்சியா (Pre-eclampsia), வருங்காலத்தில் இதய நோய் பாதிப்பு போன்ற பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது.

எனவே கர்ப்பிணி பெண்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் மற்றும் தங்களுடைய ஆரோக்கியத்தையும் அவசியம் கவனத்தில் கொண்டு தங்கள் இரத்த அழுத்த நிலையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். சரி இப்பதிவில் கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் அந்த பிரச்சனையை குறைக்க சில ஆரோக்கிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன அதனை படித்தறியலாம் வாங்க.

newசுக‌ப்பிரசவம் ஆகணுமா ?

இரத்த அழுத்தம்:-

high blood pressure during pregnancy

பொதுவாக இரத்த அழுத்தத்தில் சுருங்குவது மற்றும் விரிவடைவது என்பது 120/80 அளவில் தான் இருக்கும். அதுவே பெண்களின் கர்ப்ப காலத்தில் 100/70 அளவாக கூடும். கர்ப்பகாலத்தின் இறுதி மூன்றாவது காலமான பிரசவம் நெருங்கையில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.

அந்த சமயத்தில் 140/90 என்று அளவு அதிகரிக்கும் பொழுது அதனை உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த இரத்த அழுத்தம் அதிகரிக்கும் பொழுது கர்ப்பிணி பெண்கள் சில வகையான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதாவது இந்த உயர் இரத்தம் அழுத்தம் கர்ப்பிணி பெண்ணிற்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும்.

சரியான சிகிச்சை முறையை பின்பற்றாவிட்டால் சில சமயத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உப்பின் அளவை குறைக்க வேண்டும்:-

கர்ப்பிணி பெண்களின் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு அதிகமாகும் போது அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் அதிகமாகும். எனவே தாங்கள் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை அவசியம் குறைத்து கொள்ளுங்கள்.

மேலும் கடைகளில் விற்கப்படும் பாக்கெட் உணவுகளில் அதிகளவு சோடியம் சேர்க்கப்படுகிறது எனவே அவ்வகை உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது.

பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடலாம்:-

கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க பொட்டாசியம் பெரிதும் பயன்படுகிறது. இந்த பொட்டாசியம் சத்து பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகளவு நிறைந்துள்ளது.

குறிப்பாக வாழைப்பழம், காராமணி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சிவப்பு பீன்ஸ், உலர் திராட்சை, தக்காளி போன்றவற்றில் அதிகளவு நிறைந்துள்ளது.

இவற்றையெல்லாம் தங்களுடைய உணவில் அதிகளவு சேர்த்து கொள்ளலாம். மேலும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள தானியங்களையும் அதிகளவு உட்கொள்வதன் மூலம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.

newபிரசவத்திற்கு பின் வயிற்றில் ஏற்படும் தழும்பு மறைய டிப்ஸ்..!

உடற்பயிற்சி:-

கர்ப்ப காலத்தில் சுகப்பிரசவம் ஆக மற்றும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்களுடைய கர்ப்ப காலம் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

பெண்கள் பிரசவ காலம் முழுவதும் உட்கார்ந்தபடியே இருந்தால் அது அவர்களுடைய பிரசவத்தின் போது சில சிக்கலை ஏற்படுத்தக்கூடும். எனவே முடிந்தவரை தங்களுடைய கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்பாக இருங்கள்.

இவ்வாறு சுறுசுறுப்பாக இருக்கும்பொழுது உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கப்படும் இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

அதேபோல் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறிது நேரம் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இதனால் உடலின் செயல்பாடு மிகவும் நன்றாக இருக்கும்.

மன அழுத்தத்தை தவிர்த்து கொள்ளுங்கள்:-

ஆரோக்கியத்தின் மிக முக்கிய எதிரியாக கருதப்படுவது மன அழுத்தம் என்று சொல்லலாம். எனவே பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் முக்கியமாக மன அழுத்தம் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும்.

அமைதியாக இல்லையென்றால் தேவையில்லாத பதட்டம் ஏற்படும். இதனால் மனச்சோர்வு உண்டாகி உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.

எனவே மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க தினமும் தியானம் செய்யுங்கள் அதாவது யோகா, பிரம்மரி பிராணயாமம் என்பதும் மூச்சுப்பயிற்சி போன்றவற்றை கர்ப்ப காலத்தின் போது தினமும் செய்யுங்கள் தங்களுக்கும் தங்கள் குழந்தைக்கும் மிகவும் நன்மையை அள்ளித்தரும்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby Health Tips