3 வகையான பேபி மசாஜ் எண்ணெய் தயாரிப்பது எப்படி..! Best homemade Baby Massage Oil..!
Best Baby Massage Oil: அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் குழந்தைகளுக்கு இயற்கையான முறையில் வீட்டிலே மசாஜ் எண்ணெய் எப்படி தயாரிப்பது என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். தாய்மார்கள் அனைவரும் செய்யும் தவறு என்னவென்றால் கடைகளில் விற்கும் பேபி மசாஜ் ஆயிலை குழந்தைகளுக்கு பெரும்பாலும் பயன்படுத்தி வருவார்கள். அதில் ஏராளமான கெமிக்கல்ஸ் கலந்து இருப்பதால் குழந்தைக்கு பல நோய்கள் வரக்கூடும். அதனால் இதை தவிர்த்துக்கொள்வது நல்லது. சரி வாங்க நண்பர்களே இந்த பதிவில் மூன்று வித மசாஜ் எண்ணெய் செய்முறையை பற்றி பார்க்கலாம். இந்த மசாஜ் எண்ணெயினை 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தாராளமாய் பயன்படுத்தலாம்.
குழந்தைக்கு ஏற்படும் சரும பருக்களின் தீர்வு..! Baby Acne Treatment home Remedies..! |
இயற்கை முறையில் குழந்தைக்கு அரோமா மசாஜ் எண்ணெய் / Aroma Body Massage Oil:
அரோமா எண்ணெய் – தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
- பாதாம் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
- விளக்கெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- நெய் – 1 டேபிள் ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – 2 டேபிள் ஸ்பூன்
- குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
- சந்தனத்தூள் – 1 சிட்டிகை
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் மூன்றையும் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து சிறிது நேரம் இளஞ்சூடாக வைத்துக்கொள்ளவும். அடுத்து அடுப்பில் ரோஸ் வாட்டர், குங்குமப்பூ, மஞ்சள்தூள், சந்தனத்தூள் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் இருந்து 1 நிமிடம் கழித்து இறக்கிவிடலாம்.
அடுத்து 12 மணிநேரம் கழித்து அடுப்பில் மீண்டும் இதனை வைத்து இளஞ்சூடாக்க வேண்டும். இதுபோல 4 முறை இளஞ்சூடாக்கி 12 மணிநேரம் அப்படியே வைக்கவேண்டும். எண்ணெய் நன்றாக ஆறியதும் வடிகட்டிய பிறகு கண்ணாடி பாட்டிலில் எண்ணெயை ஊற்றிக்கொள்ளலாம்.
குறிப்பு:
இந்த தயாரித்த எண்ணெயை 2 மாதம் வரை வைத்துக்கொள்ளலாம். இந்த எண்ணெயினால் குழந்தையை 20 நிமிடம் கழித்து குளிக்கவைக்க வேண்டும். 5 வயது வரை உள்ள குழந்தைக்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
முகம் பளிச்சென்று இருக்க மசாஜ் எண்ணெய்:
தேவையான பொருட்கள்:
- தேன் – 1 டேபிள் ஸ்பூன்
- பாதாம் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- கொதிக்க வைக்காத பால் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
ஒரு சுத்தமான பவுலில் தேன், கொதிக்க வைக்காத பால், பாதாம் எண்ணெயை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். அடுத்து கலந்ததை பஞ்சினால் நனைத்து குழந்தைக்கு உடல் முழுவதிலும் தடவிவிட வேண்டும். லேசாக குழந்தைக்கு மசாஜ் போல் தடவிவிட்டு 20 நிமிடம் கழித்து குழந்தையை குளிக்கவைக்கலாம்.
கோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..! Baby Skin Care Tips In Summer..! |
குறிப்பு:
இந்த மசாஜ் எண்ணெயினை மொத்தமாக செய்து வைக்காமல் தேவைப்படும்போது செய்து கொள்ளலாம். 5 வயதிற்கு உட்பட குழந்தைக்கு ஏற்றது.
ஃப்ரெஷ் லெமன் பேபி மசாஜ் எண்ணெய் செய்வது எப்படி:
தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- விளக்கெண்ணெய் – ½ டேபிள் ஸ்பூன்
- பாதாம் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- ஃப்ரெஷ் எலுமிச்சைத் தோல் பொடி – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை (பெண் குழந்தைக்கு 2 சிட்டிகை)
- ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
முதலில் கண்ணாடி பவுலில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் மூன்றனையும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். அடுத்து மசாஜ் எண்ணெய் செய்வதற்கு எலுமிச்சை தோலை, பொடியாக ரெடி செய்துக்கொள்ள வேண்டும்.
ஒரு டீஸ்பூன் அளவுக்கு, இந்த பொடியை எண்ணெயில் சேர்த்து கலக்கிக்கொள்ளவும். அதன் பிறகு மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் கலந்து நன்றாக மிக்ஸ் செய்யவும். இயற்கையான முறையில் குழந்தைக்கு ஹோம்மேட் பேபி மசாஜ் எண்ணெய் தயார்.
குறிப்பு:
இந்த தயாரித்த எண்ணெயை ஃப்ரிட்ஜில் வைத்து 7 நாட்களுக்கு பயன்படுத்தி வரலாம். இந்த எண்ணெய் தேவைப்படும்போது அந்த நேரத்தில் செய்வது நல்லது.
எலுமிச்சை தோல் இல்லையென்றால் ஆரஞ்சு பழத்தோலைகூட பயன்படுத்தி கொள்ளலாம். அதும் இல்லாதவர்கள் ஒரு சொட்டு சிட்ரஸ் எசன்ஷியல் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
இயற்கை பேபி மசாஜ் எண்ணெயின் பலன்கள்:
இந்த எண்ணெய் பயன்படுத்துவதால் குழந்தையின் சருமம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
குளிர் காலம், வெயில் காலம், பனி போன்ற காலத்தில் சருமத்தில் எந்த வித நோய்களும் வராது.
தொற்றுக்கள் எதுவும் பரவாமல் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும். ஏனென்றால் இதில் மஞ்சள், தேன் போன்றவை சேர்த்துள்ளதால் மிக எளிமையாக தடுத்து நிறுத்திவிடும்.
குழந்தையின் சருமத்தில் எப்போதும் ஈரப்பதம் நிலைப்பெற்று தோல்களுக்கு எப்போதும் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன.
குழந்தையின் சருமத்தை பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய்..! Coconut Oil Benefits In Tamil..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |