ஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி? Homemade Horlicks For Kids

ஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி?

குழந்தையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க, குழந்தை என்றும் சுறுசுறுப்பாக இருக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான மற்றும் ஆரோக்கியமான ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் (homemade horlicks powder) செய்வது எப்படி என்று இப்போது நாம் படித்தறிவோம் வாங்க..!

ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் தேவையான பொருட்கள்:-

  • முளைக்கட்டிய முழு கோதுமை – 1 கப்
  • பாதாம் – 10
  • முந்திரி – 10
  • பிஸ்தா – 10
  • பால் பவுடர் – 2 – 3 டேபிள் ஸ்பூன்
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்..!

ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் (Homemade Horlicks Powder) செய்முறை விளக்கம்:-

முதலில் கோதுமையை முளைக்கட்ட வேண்டும் அது எப்படி என்று இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

முதலில் கோதுமையை நன்றாக கழுவி 6 முதல் 7 மணி நேரம் வரை சுத்தமான நீரில் ஊறவைத்து கொள்ளவும்.

பின்பு அவற்றில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி கொண்டு, வெள்ளை நிறத்தில் உள்ள காட்டன் பை அல்லது காட்டன் துணியில் கட்டி தொங்கவிட வேண்டும்.

காலையும் மாலையும் கோதுமை இருக்கும் பையை, லேசாக தண்ணீரால் அப்படியே தெளித்து விடவும். இவ்வாறு இரண்டு நாள் வரை இப்படி செய்து வர வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் முளைவிட்டிருக்கும், நன்றாக முளைவிட்டிருந்தால் அன்று காலை தண்ணீர் தெளிக்க வேண்டும்.

அந்த வெள்ளைத் துணியிலிருந்து, கோதுமையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தொட்டுப் பார்த்தால் உலர்ந்தது போல தெரியும்.

இருந்தாலும் ஒரு உலர்ந்த வெள்ளைத் துணியில் முளைவிட்ட கோதுமையைப் போட்டு நன்கு உலரவிடவும்.

பாதாம், முந்திரி, பிஸ்தா பவுடர் செய்முறை:-

அடுப்பில் ஒரு வெறும் வாணலியை வைத்து, சூடேறியதும் 10 பாதாம் பருப்பை சேர்த்தும் 5 முதல் 6 நிமிடங்கள் வரை நன்றாக வறுத்து கொள்ளவும்.

இவ்வாறு முந்திரி, பிஸ்தா ஆகியவற்றையும் வறுத்து கொள்ளவும்.

பின்பு வறுத்த பாதாம், முந்திரி, பிஸ்தா அனைத்தையும் மிக்சியில் சேர்த்து பவுடராக அரைத்து கொள்ளவும். பின்பு ஒரு சுத்தமான பவுலில் அரைத்த பவுடரை சேர்த்து உலரவிடவும்.

குழந்தைக்கு காலை வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டிய பானங்கள் !!!

ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடேறியதும் முளைவிட்ட கோதுமையை வாணலியில் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை நன்றாக வறுக்க வேண்டும்.

லேசாக பொரியும் சத்தமும், வருத்தால் படபட என வரும் சத்தமும் இருந்தால் பிரவுனாக மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

பின்பு வறுத்த கோதுமையை, உலர்ந்த வெள்ளைப் பருத்தி துணியில் போட்டு பரவலாகக் கொட்டி ஆற விடுங்கள்.

கோதுமை நன்றாக ஆறியதும் மிக்சியில் சேர்த்து பவுடராக அரைத்து கொள்ளவும்.

இப்போது அரைபட்ட கோதுமை பவுடரில், அரைத்து வைத்துள்ள பாதாம் பவுடர், பால் பவுடரை சேர்த்து கலக்கவும்.

உங்கள் குழந்தைக்கு சாக்லேட் சுவைப் பிடித்தால், 2 ஸ்பூன் கோகோ பவுடரை சேர்த்துக் கொள்ளலாம்.

நன்றாக கலக்க வேண்டும் என்பதற்காக, மிக்ஸியில் ஒருமுறை இந்த அனைத்து பவுடரையும் போட்டு சுத்திவிட்டால் நன்றாக கலந்துவிடும்.

அவ்வளவுதான்… ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் (homemade horlicks powder) ரெடி.

உலர்ந்த டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் எப்படி அருந்தலாம்?

காய்ச்சிய பாலில் இந்த ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் (homemade horlicks powder), பனை வெல்லம் அல்லது பிரவுன் சுகர் போட்டு கலக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி அருந்துவார்கள்..!

குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் ?
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Baby Health Tips in tamil 
SHARE