குழந்தைகளுக்கு முதன் முதலில் பசும்பாலை எப்படி கொடுக்க வேண்டும்..! How To Give Cow Milk For Baby..!
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் குழந்தைக்கு முதன் முதலில் பசும்பாலை(cow milk in tamil) எப்படி கொடுக்க வேண்டும். குழந்தைக்கு பசும்பால் கொடுப்பதால் நிறைய நன்மைகள் இருக்கிறது. சரி வாங்க இப்போது குழந்தைக்கு பசும்பாலை எப்படி கொடுக்க வேண்டும் என்ற விவரத்தை படித்து தெரிந்து கொள்ளுவோம்..!
தாய்ப்பாலுக்கு பிறகு முதலில் குழந்தைக்கு கொடுக்கவேண்டிய உணவுகள்..! baby food for 6 months..! |
பசும்பாலில் சேர்க்க வேண்டியவை:
- கொதிக்க வைத்த தண்ணீர் – தேவையான அளவு
- பனங்கற்கண்டு (அ) வெல்லம் (அ) கருப்பட்டி
குழந்தைக்கு பசும்பால் கொடுக்கும் முறை:
முதலில் குழந்தைக்கு கொடுக்கும் பசும்பாலை 2 அல்லது 3 முறை நன்றாக கொதிக்கவைக்க வேண்டும். பாலை நன்றாக கொதிக்க வைப்பதினால் அதில் இருக்கும் கிருமிகள் இறந்துவிடும்.
அடுத்து பால் எந்த அளவிற்கு எடுத்துக்கொள்கிறமோ அந்த அளவுக்கு கொதிக்க வைத்த தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பாலில் இனிப்பு வேண்டும் என்றால் ஜீனி சேர்ப்பதை தவிர்த்துவிட்டு பனங்கற்கண்டோ, வெல்லம் அல்லது கருப்பட்டியோ கொதிக்க வைத்த நீரில் சேர்த்து வடிகட்டிய பிறகு குழந்தைக்கு கொடுக்கவும்.
உங்கள் செல்ல குழந்தைகளுக்கான கஞ்சி உணவு செய்முறை..! Porridge for Babies ..! |
முதல் முறையாக பசும்பாலை குழந்தைக்கு எப்படி கொடுக்க வேண்டும்:
இதை கொடுக்கும் போது குழந்தைக்கு இரவு நேரத்தில் கொடுக்காமல் பகல் நேரத்தில் கொடுக்கவும். இரவு நேரங்களில் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
முதன் முதலில் கொடுக்கும்போது பகல் நேரத்தில் கொடுப்பது நல்லது. எந்த விதமான பிரச்சனை ஏற்பட்டாலும் எளிதில் கண்டுபிடித்து மருந்து கொடுத்து விடலாம்.
பசும்பால் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்:
சில நேரங்களில் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் உடலுக்கு ஒற்றுக்கொள்ளாமல் போய்விடும். குழந்தைக்கு வாமிட், டைரியா, போன்ற பிரச்சனைகள் இருந்தால் பசும்பாலை 2 நாள் கழித்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
குறிப்பாக ஒரே மாட்டில் இருந்து வரும் பாலை மட்டும் வாங்கி குழந்தைக்கு கொடுக்கவும். இது மாதிரியான பசும்பாலை குழந்தைக்கு கொடுத்தால் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
குளிர்காலங்களில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby Health Tips Tamil |