கர்ப்ப காலத்தில் குழந்தை எடை அதிகரிக்க..! Baby weight during pregnancy in tamil..!

Baby weight during pregnancy

கர்ப்ப காலத்தில் குழந்தை எடை அதிகரிக்க..! Baby weight during pregnancy in tamil..! கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..!

இன்றைய பதிவில் கர்ப்பிணி பெண்களுக்கான ஒரு முக்கிய பதிவை தெரிந்துக்கொள்ள போகிறோம். கர்ப்பிணி பெண்கள் அந்த நேரத்தில் எதெல்லாம் சாப்பிடலாம், எதெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று சில டிப்ஸ்களை இன்னக்கி பார்க்கலாம். கர்ப்பிணி கால நேரத்தில் குழந்தையின் எடை அதிகரிக்க இதோ சில வழிகள்..!

கர்ப்ப காலத்தில் குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பதற்கு காரணங்கள் / Weight Gain During pregnancy in tamil:

கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் கருவில் இருக்கும் குழந்தை நன்றாக உடல் எடை கூட(கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்ச்சி) சத்தான உணவுகளை தினம்தோறும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைப் பிறக்கும்போது குழந்தையின் குறைந்தபட்ச அளவான 2.75 கிலோவை விட உடல் எடை ரொம்ப குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம் தாய் எடுத்துக்கொள்ளும் உணவில் ஊட்டச்சத்து அளவு ரொம்ப குறைவா உள்ளதுதான். வயிற்றில் சிசுவை வைத்துக்கொண்டு சாப்பிட சிரமமாக இருக்கிறது என்பதனால் கர்ப்பிணி பெண்கள் உணவுகளை தவிர்த்து விடுகிறார்கள். அப்படி தவிர்ப்பதால்தான், சிசுவின் எடை மிகவும் குறைவாக இருக்கிறது.

எந்த வகையான உணவுகளைத் கர்ப்பிணி தாய் எடுத்துக்கொண்டால், சரியான உடல் எடையுடன் குழந்தை பிறக்கும் என்பதைப் பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுவோம் வாங்க..!

newபிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்..!

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் / Increase baby weight during pregnancy in tamil:

கர்ப்பிணி பெண்கள் காய்கறிகள் சாப்பிடுவதை விட முட்டையில் அதிகமாக புரோட்டின்(protein) சத்து இருக்கிறது. மேலும் போலிக் ஆசிட், கோலின் மற்றும் இரும்புச் சத்து உள்ளதால் தினமும் ஒரு வேக வைத்த முட்டையைச் சாப்பிட்டு வந்தாலே கர்ப்பிணிப் பெண்களுக்குப் போதுமானது. அதனால், அளவுக்கு அதிகமான முட்டையை எடுத்துக்கொள்ளக் கூடாது. உடலில் புரதத்தின் அளவு அதிகமானால், குழந்தை குண்டாகப் பிறக்கும் அபாயம் உள்ளது. அதனால் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் / pregnancy baby weight increase food in tamil:

கர்ப்பிணி தாய் எல்லாருமே உணவு வகைகளில் தவறாது கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். முருங்கைக் கீரை, அரைக் கீரை, மணத்தக்காளி போன்ற அனைத்து வகையான கீரைகளை சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் கர்ப்பிணி பெண்கள் அகத்திக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.

அது பேறு காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் மாத்திரை காரணமாக ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். கீரை வகைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் என ஏராளமான சத்துக்கள் இருப்பதால்,குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குப் கீரை வகைகள் பெரிதும் உதவுகின்றன.

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் / Increase baby weight during pregnancy in tamil:

கர்ப்பிணி பெண்கள் அனைவரும் கொட்டை வகைகளான முந்திரி, பாதாம் பருப்பு, போன்ற சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை மாலை நேரத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. அல்லது பகல் நேரங்களில் அவ்வப்போது ஒன்று இரண்டாகச் சாப்பிடலாம். கருவில் உள்ள குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும்.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் / baby weight during pregnancy:

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள்(how to increase baby weight during pregnancy in tamil) சராசரி 2 டம்ளர் அளவு பால் குடிக்க வேண்டும். அதாவது தினசரி 200-500 மி.லி பால் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காலை, மாலை என இரு வேலை அளவான பால் எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் பாக்கெட் பால்களைத் தவிர்த்துவிட்டு, நேரடியாக பசு அல்லது எருமை மாட்டுப் பாலை பருகினால் நல்லது.

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் / Increase baby weight during pregnancy in tamil:

ஆரஞ்சு ஜூஸ் மற்றும் எலுமிச்சை ஜூஸ் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. பழங்கள் சாப்பிட புடிக்காதவர்கள் இதுமாரி ஜூஸ் செய்து குடிக்கலாம். ஃபிரஸ் ஜூஸ் என பல பழங்களைக் கலந்து தயாரிக்கப்படும் ஜூஸைவிட, தனித்தனியே எடுத்துக்கொள்வது கருவில் உள்ள சிசுவுக்கு மிகவும் நல்லது.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் / baby weight during pregnancy:

கர்ப்பிணி பெண்கள் கேரட், பீட்ரூட், வெண்டைக் காய் போன்ற பச்சை காய்கறிகள் சாப்பிடலாம். ஏனென்றால் அதில் விட்டமின் ஏ, விட்டமின் சி, இரும்புச்சத்து, மெக்னீசியம் ஆகியவை உள்ளன. விட்டமின் ஏ ஆரோக்கியமான கண்பார்வைக்கு உதவுகிறது.

மேலும் இது குழந்தை ஆரோக்கியமான உடல் எடையைப்(pregnancy baby weight increase food in tamil) பெறவும் உதவுகிறது. பச்சைக் காய்கறிகளைக் கர்ப்பிணிகள் சாப்பிடும்போது அதை நன்கு வெந்நீரில் கழுவிவிட்டு சாப்பிட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் / Increase baby weight during pregnancy in tamil:

கர்ப்பிணி பெண்களுக்கு மீன் ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும். ஆனால் மீனை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழிற்சாலை கழிவுகள் கலக்கும் பகுதிகளில் வளரும் மீன்களில் ரசாயன பொருட்கள் இருக்கலாம். இதனால் குழந்தையின் வளர்ச்சி ஆபத்து கூட அடையாளம்.

ஏரி அல்லது அணைகளில் பிடிக்கப்பட்ட மீன்களோ அல்லது ஆழ்கடல் மீன்களோ என்றால் நாம் பயப்பட தேவையில்லை. தாராளமாய் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கலாம். மீன் சாப்பிடுவதால் கருவில் உள்ள குழந்தைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் / baby weight during pregnancy:

கர்ப்பிணி பெண்கள் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து, தானியங்கள், ஆட்டு இறைச்சியில் கிடைக்கிறது. கர்ப்பிணி தாய் நன்கு வேக வைத்த இறைச்சியை வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் (baby weight pregnancy)ஆட்டு ஈரலை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் குழந்தையின் வளர்ச்சிக்கு(கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்ச்சி) தேவையான இரும்புச் சத்துடன், பிற விட்டமின்களும் கிடைக்கிறது. குறிப்பாக ஆட்டு ஈரலை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான இரும்புச் சத்துடன், பிற விட்டமின்களும் கிடைக்கும்.

கருவில் குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள்/ Increase baby weight during pregnancy in tamil:

கர்ப்பிணி தாய்மார்கள் வாரம் மூன்று அல்லது நான்கு முறை இளநீர் குடிப்பது கர்ப்பிணிகளுக்கு நல்லது. கர்ப்பிணிகளின் உடலின் வெப்பம் தணிவதால், அதோடு கர்ப்பிணிகளின் உடல் எடையுடன் சிசுவின் உடல் எடையும் சீராக இருக்க உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் / baby weight during pregnancy:

கர்ப்பினிகள் வைட்டமின் சி நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்ளலாம். மேலும் ஃபைபர், பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டசத்துகள் நிறைந்த ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது. அன்னாசி, பப்பாளி போன்ற வெப்பம் தரும் பழ வகைகளைத் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது.

கர்ப்பிணி தாயின் எடை / baby weight during pregnancy:

பேறு காலத்தில், தாயின் உடல் எடை 12 முதல் 16 கிலோ வரை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அதற்காக ஒவ்வொரு மாதமும் எவ்வளவு எடை அதிகரித்திருக்க வேண்டும் என்றும் வரையறுத்துக் கூறுவார்கள். துரித உணவுகளை அதிகம் உட்கொண்டால் உடல் எடை உடனடியாக அதிகரித்துவிடும்.

ஆனால், கர்ப்பிணிகளின் உடல் எடை அதிகரிப்பு என்பது குழந்தைகளின் நலன் காக்கும் கலோரிகளை அதிகரிப்பதாகும். எனவே நல்ல கலோரிகள் அதிகம் எடுத்துக்கொண்டு, உடல் எடையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

கர்ப்பிணிகள் மேலும் சாப்பாட்டில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பதால், உணவு சமைக்கும்போது குறைந்த அளவு உப்பு போட்டு சமைப்பது நல்லது. உடலுக்கு தேவையான கலோரிகளை நேரத்துக்குக் கொஞ்சமாக எடுத்துக்கொண்டால், கர்ப்பிணி தாய்க்கும் சிரமம் இருக்காது, குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும்.

கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமாக எடை கூடிவிட்டது எனக் கருதி ஒருபோதும் உணவை குறைக்கவே கூடாது. குழந்தைப் பிறக்கும் வரை எடை அதிகரிப்பதில் எந்த பிரச்சனையும் கிடையாது.

newகுழந்தை உயரமாக வளர உணவு வகைகள்..! How to increase height for kids..!

கர்ப்பிணி தாய்மார்கள் தவிர்க்க வேண்டியவை / Increase baby weight during pregnancy in tamil:

கருவில் குழந்தை எடை அதிகரிக்க கர்ப்பிணி தாய்மார்கள் மைதாவில் தயாரான உணவு பொருட்களை சாப்பிடவேக் கூடாது. மேலும் இனிப்பு , அரிசி ஆகியவற்றை சாப்பிடும் அளவை குறைத்துக்கொள்ளலாம். மது அருந்தும் பழக்கமுள்ள பெண்கள், முற்றிலுமாக கைவிடுவது நல்லது. அல்லது குழந்தை பிறக்கும் வரை இது மாதிரியான பழக்கம் இருக்கவே கூடாது. ஆல்கஹால் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.

கருவில் குழந்தை எடையை அல்ட்ரா ஸ்கேன் வசதி மூலம் கண்டறிந்து விடலாம். துல்லியமாக தெரியாவிட்டாலும் ஏறத்தாழ உரிய எடை தெரிந்துவிடும். இதை வைத்துதான் மருத்துவர்கள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை அறிகிறார்கள்.

வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவதால் எந்த சிக்கலும் ஏற்படாது. ஆனால், புரதம் அதிக அளவில் எடுத்துக்கொள்வதால், குழந்தையின் உடல் எடை வெகுவாக அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். உணவுப் பொருட்களில் புரதம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளாமல், தேவையான அளவுக்கு மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது. உணவுப் பொருட்களில் புரதம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளாமல், தேவையான அளவுக்கு மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது.

கர்ப்பிணி பெண்கள் உடலில் எந்த வித பிரச்சனை மற்றும் சந்தேகம் இருந்தாலும் மருத்துவரை அணுகி விளக்கம் கேட்டுத் தெளிவு பெறுவதில் தயக்கம் இருக்கவே கூடாது. தயக்கமின்றி நீங்கள் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளும் உணவுதான் உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்கு அஸ்திவாரமாகப் போகிறது என்பதை மறக்காமல் நினைவில் வைத்து கொள்ளுங்கள்..!

newகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்