குழந்தைகளுக்கு நெஞ்சு சளி, இருமல் குணமாக மாத்திரை, மருந்து,கஷாயம் தேவையில்லை.!

Advertisement

குழந்தைக்கு நெஞ்சு சளி வெளியேற

குழந்தைக்ளுக்கு சளி பிரச்சனை ஏற்பட்டாலே Dull ஆகிவிடுவார்கள். சளி வந்தால் அடுத்து இருமல், அடுத்து காய்ச்சல் ஏற்படும். இதற்காக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவீர்கள். அவர்களும் மாத்திரை, மருந்து கொடுப்பார்கள். ஆனால் அந்த மருந்தை ஒவ்வொரு தடவையும் கொடுக்கும் போது போராட்டமாக இருக்கும். இனி குழந்தைகளுக்கு இயற்கையான முறையில் சளி , இருமலை எப்படி சரியாக்குவது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

நெஞ்சு சளி இருமல் குணமாக:

நெஞ்சு சளி இருமல் குணமாக

நெஞ்சு சளி குணப்படுத்துவதற்கு சூடம் 5 , வெற்றிலை 2, தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்து கொள்ளவும்.

தேங்காய் எண்ணெயை சூடுப்படுத்தி கொள்ளவும். சூடானதும் 2 கற்பூரத்தை சேர்த்து கற்பூரம் கரைந்ததும் அடுப்பை அணைத்து கொள்ளவும்.

அடுத்து மண்ணெண்ணெய் விளக்கை எடுத்து கொள்ளவும். அதில் ஒரு ஒரு வெற்றிலையை எடுத்து செய்து வைத்துள்ள கற்பூர எண்ணெயை வெற்றிலையின் உள்பகுதி முழுவதும் தேய்த்து கொள்ளவும். எண்ணெய் தேய்த்த பகுதியை விளக்கில் காட்டி எடுக்கவும்.

லேசான சூடு இருக்கும் போது விளக்கில் காட்டிய வெற்றிலையை குழந்தையின் நெஞ்சு பகுதியில் வைக்கவும். இரவு முழுவதும் வைத்திருந்தால் சிறந்தது. இல்லையென்றால் கொஞ்ச நேரம் வைத்து விட்டு எடுத்து விடலாம். இந்த முறையை தினமும் செய்து வந்தால் விரைவிலே நெஞ்சு சளி குணமாகிவிடும்.

1 மாத குழந்தைக்கு பேதி குணமாக பாட்டி வைத்தியம்…!

நெஞ்சு சளி இருமல் குணமாக:

நெஞ்சு சளி இருமல் குணமாக

ஒரு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைத்து அதில் கரண்டியை வைத்து எண்ணெயை சூடுபடுத்தவும். எண்ணெய் சூடு வந்ததும் விக்ஸ் சிறிதளவு சேர்த்து கரைந்ததும் கரண்டியை எடுத்து விடவும்.

இந்த எண்ணெயை குழந்தையின் நெஞ்சு, மூக்கு, கழுத்து போன்ற பகுதிகளில் தேய்க்கவும். இது போல் தொடர்ந்து செய்து வந்தால் விரைவிலே சளி, இருமல் பிரச்சனை சரியாகிவிடும்.

குழந்தைக்கு நெஞ்சு சளி இருமல் குணமாக:

குழந்தைக்கு நெஞ்சு சளி இருமல் குணமாக

ஓமவல்லி இலை 4 எடுத்து கொள்ளவும். இந்த இலையில் உள்பகுதியில் விக்ஸ் தடவி கொள்ளவும்.

மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைத்து விக்ஸ் தடவி இருக்கும் இடத்தை நெருப்பில் காட்டக் கூடாது. விக்ஸ் தடவாமல்  இருக்கும் மறுபக்கத்தை மட்டும் தான் நெருப்பில் காட்ட வேண்டும்.

விளக்கில் காட்டிய இலைகளை  குழந்தைகளுக்கு நெஞ்சில் வைக்கும் பொழுது வெதுவெதுப்பான சூட்டுடன் வைக்க வேண்டும்.

இந்த இலையை குழந்தையின் நெஞ்சு பகுதி, முதுகு பகுதியில் 1/2 மணி நேரம் வைக்கவும்.

மேல் கூறப்பட்டுள்ள முறைகளில் எதாவது ஒன்றை தினமும் செய்து வாருங்கள் விரைவிலே சளி, இருமல் பிரச்சனை சரியாகிவிடும்.

குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள்

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 

 

Advertisement