குழந்தை பல் வலி நீங்க பாட்டி வைத்தியம்..!

Advertisement

குழந்தை பல் வலி நீங்க பாட்டி வைத்தியம்..!

சில இடங்களில் ஏற்படும் வலிகளை வாயை திறந்துகூட சொல்ல முடியாது. அவற்றில் ஒன்று தான் பல் வலி. ஆமாங்க இந்த பல் வலி வந்துவிட்டால், முகம் முழுவது வலி பரவும், முகம் வீக்கமடையும். இந்த பிரச்சனையை பெரியவர்களால் கூட தாங்கிக்கொள்ள முடியாது, குழந்தைகள் மட்டும் எப்படி தாங்கி கொள்ள முடியும். பெரியவர்கள் நாம் எப்படியாவது இந்த பிரச்சனையை எதிர்கொள்ள முடியும். ஆனால் குழந்தைகளால் இந்த பிரச்சனையை தாங்கி கொள்ள முடியாது. அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.

சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..!

சரி குழந்தை பல் வலி நீங்க பாட்டி வைத்தியம் என்னென்ன உள்ளது என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – கல்லுப்பு தண்ணீர்:

குழந்தை பல் வலி நீங்க ஒரு டம்ளர் இளஞ்சூடான தண்ணீரில் 3 கல்லுப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.

அதிகமாக உப்பு சேர்த்துவிட கூடாது. வேண்டுமெனில் சிறிதளவு மஞ்சள் தூள் கூட சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த முறையினை காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் செய்து வர குழந்தை பல் வலி நீங்கும்.

பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – கோதுமை புல் ஜூஸ்:

குழந்தை பல் வலி நீங்க கோதுமை புல் ஜூஸ். இந்த கோதுமை புல் ஜூஸில் குணமாக்கும் மூலப்பொருட்கள் உள்ளன.

உடலுக்குள் சென்று வீக்கத்தைக் குறைக்கும். கிருமிகளை அழிக்கும். அதில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடும். கோதுமை புல் ஜூஸை மவுத் வாஷ் போல வாயில் வைத்துக் கொப்பளிக்க பல் வலி குறையும்.

பல் ஈறு பலம் பெற

பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – தைம் எண்ணெய்:

குழந்தை பல் வலி நீங்க ஒரு டம்ளர் இளஞ்சூடான நீரில் தைம் எண்ணெய் 2 சொட்டு விட்டு, வாய் கொப்பளித்தாலும் பல் வலி குறையும்.

பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – கிராம்பு எண்ணெய்:

குழந்தை பல் வலி நீங்க (pal vali maruthuvam) ஒரு டம்ளர் இளஞ்சூடான நீரில் கிராம்பு எண்ணெய் 2 சொட்டு விட்டு, வாய் கொப்பளித்தாலும் பல் வலி குறையும்.

உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா? இதோ எளிய வழிகள் !!!

பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – கொய்யாய் இலை:

குழந்தை பல் வலி நீங்க (pal vali maruthuvam) கொய்யா இலைகள் துளிராக இருந்தால், அதை நன்கு கழுவி, வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

இந்த பல் வலி குறையும். கொய்யா இலைகள் – 8, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்கவிட்டு, ஒரு டம்ளராக சுண்டியதும் அதை இளஞ்சூடாக்கி வாய் கொப்பளித்தாலும் பல் வலி குறையும்.

பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – புதினா இலை:

பல் வலி மருத்துவம் (pal vali maruthuvam) ஒரு கைப்பிடி புதினா இலை 2 டம்ளர் வெந்நீரில் கொதிக்கவிட்டு, 20 நிமிடம் அப்படியே ஆறவிட்டு, அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கவும்.

அந்த புதினா தண்ணீரை மவுத் வாஷ் போல வாயில் வைத்துக் கொப்பளிக்க வேண்டும்.

பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – அக்குபிரஷர் புள்ளி

கையின் கட்டைவிரலின் மேல் பகுதியை, அதாவது முதல் ரேகையின் மேல் உள்ள பகுதியை மிதமான அழுத்தம் கொடுத்து, 10 நிமிடங்கள் வரை அடிக்கடி அழுத்தி பிடிக்க பல் வலி குறையும்.

இதெல்லாம் அப்போதைக்கு வலி குறைய, பிறகு பல் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை செய்து கொள்வது நல்லது. சின்ன குழந்தைகளுக்கு, பெற்றோர் மிதமாக அழுத்தி விடலாம்.

பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – ஹோமேட் மிளகு பேஸ்ட்:

மிளகு ஒரு டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் இந்துப்பு அல்லது கல்லுப்பு இவற்றை சிறிதளவு நீர் விட்டு அரைத்து பேஸ்ட்டு போல் அரைத்து வலி உள்ள இடத்தில் தடவுங்கள். இவ்வாறு செய்வதினால் பல் வலி குணமாகும்.

பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – பூண்டு மற்றும் கிராம்பு:

ஒரு பூண்டு, இரண்டு கிராம்பு இரண்டையும் நன்றாக தட்டி வைத்துக்கொள்ளவும். இதனுடன் இந்துப்பு அல்லது சாதாரண உப்பு சேர்ந்து கலந்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து தேய்க்கவும். இவ்வாறு செய்வதினால் பல் வலி குணமாகும்.

பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – கிராம்பு பேஸ்ட்:

ஒரு ஸ்பூன் கிராம்பு பொடி மற்றும் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் அல்லது ஏதேனும் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து, பல் வலி உள்ள இடத்தில் நன்றாக தடவுங்கள். இவ்வாறு செய்வதினால் குழந்தை பல் வலி குணமாகும்.

பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் – சின்ன வெங்காயம்:

குழந்தையின் பல் வலி குணமாக சின்ன வெங்காயம் மிகவும் பயன்படுகின்றது. சின்ன வெங்காயம் இடித்து, அதன் சாறு வெளிவருவது போல, பல் வலி உள்ள இடத்தில் வைக்கவும். இதனால் கிருமிகள் அழியும்.

கால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை !!! முழு விளக்கம் !!!
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement