குழந்தைக்கு வெள்ளி பாத்திரங்களின் பயன்பாட்டால் கிட்டும் நன்மைகள்..!

Advertisement

குழந்தைக்கு வெள்ளி பாத்திரங்களின் பயன்பாட்டால் கிட்டும் நன்மைகள் (Silver Utensils For Baby Benefits)..!

வெள்ளி பாத்திரங்கள் பயன்கள் – பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான விஷயங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும். அந்த வகையில் குழந்தைகளுக்காக பயன்படுத்தும் ஒவ்வொரு பொருள் மீதும் அதிகம் கவனம் செலுத்தி சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் எண்ணுவார்கள். அந்த வகையில் குழந்தைகளுக்கு பால் மற்றும் திட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு வெள்ளி பாத்திரங்களை பயன்படுத்தலாம். இதனால் குழந்தையின் உடல் நலம் ஆரோக்கியமாக பாதுகாக்கப்படுகின்றது.

சரி வாங்க குழந்தைகளுக்கு வெள்ளி பாத்திரத்தில் உணவு கொடுப்பதினால் கிடைக்கும் நண்மைகளை (Silver Utensils For Baby Benefits) பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா? இதோ எளிய வழிகள் !!!

வெள்ளி பாத்திரங்கள் பயன்கள்..!

வெள்ளி பாத்திரத்தில் ஏன் குழந்தைகளுக்கு உணவு தர வேண்டும்?

குழந்தைகளுக்கு உணவு விஷயத்தில் ஏன் வெள்ளி பாத்திரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால்… வெள்ளி பாத்திரங்களில் சில மருத்துவ குணங்கள் ஒளிந்துள்ளது.  ஆகையால் தான் குழந்தைகளுக்கு (Silver Utensils For Baby Benefits) உணவு கொடுக்கும் விஷயத்தில் வெள்ளி பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று சொல்கின்றனர்.

வெள்ளி பாத்திரத்தின் நன்மைகள்:

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – பாக்டீரியாக்களை அளித்து போராடும்:

வெள்ளி பாத்திரங்கள் பயன்கள் – குழந்தைகளுக்கு வெள்ளி பாத்திரத்தில் உணவு தரும் போது உணவில் உள்ள நுண்ணுயிர்கள் முற்றிலுமாக அகற்றப்படும்.

இதனால், நீங்கள் அதிக சிரமப் பட்டு பாத்திரத்தைச் சுத்தப் படுத்த தேவை இல்லை. சாதாரணமாகத் தண்ணீரில் கழுவினாலே, வெள்ளி பாத்திரம் சுத்தமாகி விடும். இதனால் குழந்தையின் ஆரோக்கியமும் பாதுகாக்கபடுகின்றது.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

வெள்ளி பாத்திரங்கள் பயன்கள் – குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் வெள்ளிக் கிண்ணத்தில் உணவு அளிப்பதால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

சூடாக உணவை வைத்து தரும் போது, வெள்ளியின் எதிர்ப்பு பாக்டீரியல் பண்புகள் அதிகமாகி உணவில் கலக்கின்றது. இதனால் குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகின்றது.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – நச்சுத் தன்மையும் இருக்காது:

வெள்ளி பாத்திரங்கள் பயன்கள் – வெள்ளி பாத்திரங்களில் உணவைச் சூடாக வைக்கும் போது எந்த விதமான நச்சுத் தன்மையும், இரசாயன செயல்பாடும் நடக்காது.

இது ஏன் என்றால், வெள்ளியைப் பல விதி முறைகளுக்குப் பின்னரே சுத்திகரிக்கப் பட்டு பின் தேவைப்படும் பாத்திரமாக வடிவமைக்கப் பட்டு பயன் பாட்டிற்குத் தருகின்றார்கள். இதனால், இதில் எந்த நச்சுத் தன்மையும் இருக்காது.

சுக‌ப்பிரசவம் ஆகணுமா ? Simple Normal Delivery Tips in Tamil..!

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – உணவு கெட்டு போகாது:

வெள்ளி பாத்திரங்கள் பயன்கள் – வெள்ளி பாத்திரத்தில் வைக்கப் படும் உணவு அதிக நேரத்திற்கு தன் தன்மையை இழக்காமல் புதிதாக இருக்கும். விரைவில் கெட்டுப் போகாது.

இதனாலேயே பழங்காலங்களில், மக்கள் வெள்ளி குடங்களில் தண்ணீர் சேமித்து வைப்பார்கள்.

மேலும் உணவுப் பொருட்களை வெள்ளிப் பாத்திரங்களில் வைப்பார்கள். ஆக இந்த வெள்ளிப் பயன்பாடு நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே வழக்கத்திலிருந்துள்ளது.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – உடல்சூடு சீராகும்

வெள்ளி பாத்திரங்கள் பயன்கள் – வெள்ளியின் மற்றுமொரு முக்கியமான பண்பு என்னவென்றால், இதில் உணவை உண்ணும் போது உடல் சூட்டைச் சீராக வைத்துக் கொள்ள உதவும். இதனாலேயே, வெள்ளியை நகை / ஆபரணங்கள் செய்ய அதிகம் பயன் படுத்துகின்றனர்.

பிறந்த குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள்..! முழு வளர்ச்சி அட்டவணை
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement