குழந்தையின் விக்கல் நிற்க (Stop baby hiccups) இப்படி செய்யுங்கள்..!
ஒருவித ‘ஹிக்’ சத்தம் ஏற்படுவதே ஹிக்கப்ஸ் என்றும் விக்கல் என்றும் சொல்கிறோம். இந்த பிரச்சனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனைதான். இருப்பினும் தண்ணீர் குடித்தபின்பு சில குழந்தைகளுக்கு விக்கல் எடுத்துக்கொண்டே இருக்கும்.
உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா? இதோ எளிய வழிகள் !!! |
சரி அடிக்கடி விக்கல் வருவது சரிதானா? ஏன் குழந்தைக்கு விக்கல் வருகின்றது? சரி குழந்தையின் விக்கல் நிற்க (Stop baby hiccups) ஏதேனும் வழிகள் உள்ளதா என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!
பிறந்த குழந்தைக்கு விக்கல் நிற்க
விக்கல் ஏன் வருகின்றது?
நாம் ஒரு நேரத்தில் இரண்டு விஷயங்களை ஒன்றாக செய்யும்போது விக்கல் வரலாம். சிரித்துக்கொண்டே சாப்பிடுவது.
சிரித்துக்கொண்டே தண்ணீர் குடிப்பது. பேசிக்கொண்டே சாப்பிடுவது. பேசிக்கொண்டே தண்ணீர் குடிப்பது. இதுபோல இரண்டு விஷயங்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக நடந்தால் விக்கல் வரலாம்.
குழந்தைகளுக்கு வரும் விக்கல்:
குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போதோ உணவு உண்ணும் போதோ விக்கல் வரலாம்.
தும்மல், அழுகை, ஆழ்ந்த மூச்சி விடும்போது விக்கல் வருவது இயல்பு. இதுபோல் குழந்தைகளுக்கு அடிக்கடி வரும். மிகவும் அரிதாக, உடல்நல பிரச்சனைகளால் விக்கல் வரக்கூடும்.
அதே போல் குழந்தைகள் வளர வளர அவர்களுடைய உறுப்புகளும் வளர ஆரம்பிக்கும் அந்த வகையில் குழந்தையின் குடல் பகுதியும் வளரும் இத காரணமாக கூட குழந்தைக்கு விக்கல் வர காரணம் என்று சொல்லலாம்.
விக்கல் வந்தால் ஆபத்து. பயப்பட கூடிய விஷயம் என்று இல்லை. விக்கல் வந்தால் அவசர சிகிச்சை தேவை என்பதெல்லாம் கிடையாது.
அது இயல்பான ஒரு விஷயம்தான். ஒரு சிலருக்கு மிகவும் அரிதாக சில பிரச்னைகளை விக்கல் ஏற்படுத்தலாம். அவர்களுக்கு விக்கல் மாதம் முழுக்க வந்தால் என்ன பிரச்சனை எனப் பார்க்க வேண்டும். இதுபோல் இருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.
பிறந்த குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள்..! முழு வளர்ச்சி அட்டவணை |
குழந்தைக்கு விக்கல் எப்படி வருகின்றது:
1 இந்த விக்கல் ஒரு நோய் அல்ல. இதைப் பார்த்து கவலைப்பட வேண்டாம். சின்ன சின்ன முயற்சிகளை பாதுகாப்பாக மேற்கொண்டால் விக்கல் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
2 தாய்ப்பால் தரும்போது குழந்தையை உங்கள் தோள்ப்பட்டை அருகில் சரியான நிலையில் தூக்கி வைத்துக் கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாம்.
3 குழந்தையை சரியான நிலையில் தூக்கி வைத்து தாய்ப்பால் அருந்தும்படி செய்தால், தேவையில்லாமல் காற்று குழந்தையின் வாயின் வழியாக செல்வது தடுக்கப்படும். இதனால் விக்கல் வருவதும் (Stop baby hiccups) தடுக்கப்படும். குழந்தைக்கு தரும் ஃபீடிங் பாட்டிலில் பெரிய துளை இருந்தாலும் அதன் வழியாக அதிக காற்று சென்று குழந்தைக்கு விக்கல் ஏற்படலாம்.
4 குழந்தையின் ஃபீடிங் பாட்டில் சொட்டு சொட்டாக வரும் படி இருக்கவேண்டும். அப்படியே தொடர்ந்து பால், தண்ணீர் வெளியேறும்படி பெரிதாக இருக்க கூடாது. சிலர் விக்கல் வரும்போது தாய்ப்பால் கொடுக்காதீர்கள் என்பார்கள். ஆனால், அது தவறு. விக்கல் வந்தாலும் குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் ஊட்டலாம். கொதிக்கின்ற நீரில் ½ டீஸ்பூன் சோம்பை போட்டு, அந்த தண்ணீரை இளஞ்சூடாக 2-3 டீஸ்பூன் அளவுக்கு கொடுக்க விக்கல் நிற்கும். உடனடியாக விக்கலை நிறுத்தும் வைத்தியம் இது.
5 முதல் சில மாதங்களுக்கு குழந்தைக்கு அடிக்கடி விக்கல் வருகிறது என்றால் நீங்கள் அதிகமாக தாய்ப்பால் கொடுக்கிறீர்களா என சிந்தித்து பாருங்கள். குழந்தைக்கு சரியான இடைவேளியில் சரியான அளவுக்கு தாய்ப்பால் கொடுப்பதே நல்லது.
6 அதிகமாக உணவோ தாய்ப்பாலோ கொடுப்பதாக நீங்கள் எண்ணினால் குழந்தையின் தேவை அறிந்து உணவு கொடுங்கள். குழந்தையை கட்டாயப்படுத்தி உணவைத் திணிக்க வேண்டாம்.
7 குழந்தையின் வயிறு வலி, வாயு பிடிப்பு போன்றவற்றுக்கு ஓம தண்ணீரை சிறிதளவு கொடுக்கலாம்.. இந்த வைத்தியம் குழந்தையின் வயிற்றில் உள்ள வாயு பிரச்னையை சரியாக்கும். வயிற்று பிடிப்புகூட சரியாகும். விக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
சுகப்பிரசவம் ஆகணுமா ? Simple Normal Delivery Tips in Tamil..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இநத லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |