தாய்ப்பால் கட்டினால் என்ன செய்வது..! Thai Paal Kattuthal In Tamil..!
Blocked Milk Duct Breastfeeding: பொதுநலம்.காம் பதிவில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கட்டினால் என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். குழந்தைகள் பால் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் தாய்மார்களுக்கு பால் கட்டிக்கொள்ளும் பிரச்சனை ஏற்படும். சரி இப்போது தாய்ப்பால் கட்டிக்கொண்டு மார்பில் வலி இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பொதுநலம் பதிவில் விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!
![]() |
தாய்ப்பால் கட்டியை குணப்படுத்தும் உருளைக்கிழங்கு:
தாய்ப்பால் கட்டிக்கொண்ட இடத்தில் சிறியதாக நறுக்கிய உருளை கிழங்கை மார்பகத்தில் வைக்க வேண்டும். அதன் மீது சிறிய துணியை வைத்து 1 மணிநேரம் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் உருளை கிழங்கை நாம் மாற்றியும் கொள்ளலாம். இதனால் தாய்ப்பால் கட்டும் பிரச்சனை நீங்கும்.
தாய்ப்பால் கட்டியை குணப்படுத்தும் வெந்நீர்:
தாய்மார்களுக்கு தாய்ப்பால் கட்டிக்கொண்டால் வெந்நீர் வைத்து மார்பு பகுதியின் மேல் மெதுவாக மசாஜ் செய்து தாய்ப்பாலை வெளியில் அகற்றலாம். வெந்நீர் வைத்து மசாஜ் செய்வதால் தாய்ப்பால் கட்டிக்கொள்ளும் பிரச்சனை விரைவில் குணமாகும்.
தாய்ப்பால் கட்டி குணமாக கற்றாழை:
முதலில் 2 கப் அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு நீரை கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீருடன் கற்றாழை சேர்த்து 10 அல்லது 15 நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.
கற்றாழை தண்ணீர் நன்றாக கொதித்து வந்த பிறகு ஒரு துணியால் தண்ணீரில் நனைத்து தாய்ப்பால் கட்டிக்கொண்ட மார்பு பகுதியில் 15 நிமிடம் நன்றாக மசாஜ் செய்வது போல் தடவி வரவேண்டும். இந்த முறையை பின்பற்றினால் தாய்ப்பால் கட்டும் பிரச்சனையை குணமடைய செய்யும்.
தேங்காய் எண்ணெய் குணப்படுத்தும் தாய்ப்பால் கட்டி:
தாய்ப்பால் கட்டி இருக்கும் இடத்தில் தேங்காய் எண்ணெயை மசாஜ் போல் செய்து வர வேண்டும். மார்பக பகுதிகளில் உண்டாகும் காயங்களில் கூட இந்த தேங்காய் எண்ணெயை தடவி வந்தால் மார்பக காயங்களும் விரைவில் ஆறும்.
![]() |
தாய்ப்பால் கட்டியை சரி செய்யும் அன்னாசி பழ சாறு:
மார்பு பகுதியில் தாய்ப்பால் கட்டி உள்ளவர்கள் தினமும் 1 கப் அன்னாசி பழ சாறு எடுத்துக்கொள்ளலாம். அன்னாசியில் இருக்கும் ஃப்ரோமெலைன் மார்பகத்தில் உள்ள வீக்கத்தை குறைத்து அடைத்து இருக்கும் மார்பக குழாய்களை சரி செய்யும்.
பூண்டை வைத்து தாய்ப்பால் கட்டியை குணப்படுத்தலாம்:
தாய்ப்பால் கட்டி பிரச்சனை உள்ள தாய்மார்கள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை பூண்டை மசித்து சாப்பிட்டு வரவேண்டும். பச்சை பூண்டு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.
அதனால் பூண்டுடன் சிறிதளவு தேன் மற்றும் தண்ணீரில் பூண்டை ஊறவைத்து கூட தாய்ப்பால் கட்டி பிரச்சனை இருப்பவர்கள் தாராளமாய் சாப்பிடலாம்.
மார்பக வலி இல்லாமல் குழந்தைக்கு எப்படி பால் கொடுக்க வேண்டும்:
குழந்தைக்கு பால் கொடுக்கும் போது விலங்குகளை போல் தாய்மார்கள் குனிந்துக்கொண்டு பால் கொடுக்க வேண்டும். மார்பக பகுதி குழந்தையின் வாயில் படும் அளவிற்கு கொடுக்க வேண்டும். இந்த முறை ஈர்ப்பு விசையின் மூலம் மார்பக கட்டியின் வலி இல்லாமல் இருக்கும்.
![]() |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby Health Tips Tamil |