ப்ரேக்பாஸ்டை ஈஸியா முடிக்கணுமா அப்போ இந்த உணவ ட்ரையல் பாருங்க..!

Advertisement

அரிசி உப்புமா செய்வது எப்படி? | Arisi Upma Seivathu Eppadi

வேலைக்கு செல்பவர்களுக்கு காலை டிபன் தனியாக செய்வதற்கும், மதிய உணவு தனியாக செய்வதற்கும் போதுமான நேரம் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த டிஷ் மிகவும் பயனாக இருக்கும். அப்படி என்ன டிஷ்னு நினைக்கிறீங்களா.? சுவையான அரிசி உப்புமா தாங்க.. இதனை ஈஸியாவே சிறிது நேரத்திலே செய்து முடித்துவிடலாம். வாங்க எப்படி அரிசி உப்புமா செய்யலாம்னு பார்க்கலாம்..!

இட்லி உப்புமா செய்வது எப்படி?

அரிசி உப்புமா செய்ய – தேவையான பொருள்:

  1. எண்ணெய் – 4 ஸ்பூன் 
  2. கடுகு – 1 ஸ்பூன் 
  3. உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன் 
  4. கடலைப்பருப்பு – 2 ஸ்பூன் 
  5. பச்சை மிளகாய் – 2 நறுக்கியது 
  6. கருவேப்பிலை – சிறிதளவு 
  7. வெங்காயம் – மீடியம் அளவு 2 நறுக்கியது 
  8. தண்ணீர் – 4 கிளாஸ் 
  9. கேரட் பீன்ஸ் – 5 நறுக்கியது 
  10. உப்பு – தேவையான அளவு 
  11. பச்சரிசி – 2 க்ளாஸ் (ஊற வைத்தது)

சுவையான அரிசி உப்புமா செய்வது எப்படி – செய்முறை விளக்கம்:

ஸ்டேப்: 1

முதலில் அடுப்பை ஆன் செய்து குக்கரை வைத்து எண்ணெய் 4 ஸ்பூன் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும்.

ஸ்டேப்: 2

கடுகு நன்றாக பொரிந்து வந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பினை சேர்த்து பொன்னிறம் ஆகும் .வரை காத்திருக்கவும்.

ஸ்டேப்: 3

அதன் பிறகு சிறிதளவு கருவேப்பிலை, பச்சை மிளகாய், மீடியம் சைஸ் அளவிற்கு 2 வெங்காயத்தை நறுக்கி வதக்கிக்கொள்ளவும்.

ஸ்டேப்: 4

இப்போது தனியாக ஒரு கடாயை வைத்து அரிசி உப்புமாவிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

ஸ்டேப்: 5

வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியதும் தேவையான அளவு உப்பு, அதனுடன் சிறிய அளவில் கேரட் மற்றும் 5 நறுக்கிய பீன்ஸினை சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 6

அடுத்ததாக 10 நிமிடம் ஊறவைத்த பச்சரிசியை இதில் சேர்த்து 1 நிமிடம் கிண்டிவிடவும். 2 கிளாஸ் பச்சரிக்கு 4 கிளாஸ் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப்: 7

அடுத்து கொதிக்க வைத்துள்ள தண்ணீரை குக்கரில் வேகின்ற சாதத்தில் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் 2 விசில் வைக்கவும்.

ஸ்டேப்: 8

2 விசில் வந்ததும் மூடியை எடுத்துவிடலாம். இப்போது உதிரியாக அரிசி உப்புமா ரெடியாகிட்டு. எல்லோரும் ட்ரை பண்ணி பாருங்க..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement