கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி? | Karuveppilai Sadam in Tamil

Karuveppilai Sadam in Tamil

கறிவேப்பிலை சாதம் | Karuveppilai Sadam Seivathu Eppadi

வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நாம் சமையல் பதிவில் பார்க்க போகிறது என்னவென்றால் எல்லோருக்கும் பிடித்த சுவையான கருவேப்பிலை சாதம். இது எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொன்னால் அது தவறு ஏன்னென்றால் கருவேப்பிலை என்றால் குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் இதனை குழந்தைகள் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் வாரத்தில் ஒருநாள் இந்த கருவேப்பிலை சாதம் செய்து கொடுக்கலாம். இதனை செய்வது மிகவும் எளிது வாங்க கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி என்பதை தெளிவாக காண்போம்.

கோவில் ஸ்டைல் தயிர் சாதம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

 1. வடித்த சாதம்- ஒரு கப்
 2. காய்ந்த மிளகாய்- 5
 3. கருவேப்பிலை – 4 கைப்பிடி அளவு
 4. தனியா -1 கை
 5. மிளகு -2 டீஸ்புன்
 6. கடலைப்பருப்பு -1 கை
 7. துவரம் பருப்பு- 1/2 கை
 8. உளுத்தம் பருப்பு -1/2 கை
 9. பெருங்காய தூள் – 1 டீஸ்புன்
 10. முந்திரிப்பருப்பு -10
 11. வேர்கடலைப்பருப்பு – சிறிதளவு
 12. உப்பு – தேவையான அளவு.

 கறிவேப்பிலை சாதம் செய்முறை:

கருவேப்பிலை பொடி செய்வதற்கு: 

 • ஸ்டேப்: 1 மிளகாய் 5, கருவேப்பிலை 4 கைப்பிடி அளவு, தனியா 1 கை, மிளகு 2 டீஸ்புன், கடலைப்பருப்பு 1 கை, துவரம் பருப்பு 1/2 கை, உளுத்தம் பருப்பு 1/2 கை, பெருங்காய தூள் 1 டீஸ்புன் இதனை எடுத்துக்கொள்ளவும்.
 • பின் ஒரு வாணலியில் ஒரு கை தனியா அதனுடன் துவரம் பருப்பு 3 டீஸ்புன், கடலை பருப்பு 1 கை, மிளகு 2 டீஸ்புன், உளுத்தம் பருப்பு 2 டீஸ்புன், காய்ந்த மிளகாய் 5 வறுக்கவும்.
 • பின் அதனுடன் பெருங்காய தூள் 2 டீஸ்புன், கடைசியாக கருவேப்பிலை 4 கை போட்டு வறுக்கவும்.

ஸ்டேப்: 2

 • வறுத்த எல்லாவற்றையும் போட்டு மிக்சியில் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

 • வாணலியில் நல்லெண்ணெய் தாளிக்கும் அளவிற்கு சேர்த்துக்கொள்ளவும். எண்ணெய் சூடான பிறகு அதில் முதலில் கடுகு, காய்ந்த மிளகாய்-2 கிள்ளி போட்டுக்கொள்ளவும்.
 • முந்திரிப்பருப்பு -10, வேர்கடலைப்பருப்பு சிறிதளவு போட்டு பொன்னிறம் மாறும் வரை வறுக்கவும்.
 • கடைசியாக கருவேப்பிலை போட்டு செய்து வைத்த கருவேப்பிலை பொடியை போட்டுகொள்ளவும் பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
கோவில் பிரசாத ஸ்டைல் தேங்காய் சாதம் செய்வது எப்படி?

 

ஸ்டேப்: 4

 • அது மசாலாவாக மாறும் வரை கலக்கவும். இப்போது வடித்து வைத்த சாதத்தை போடவும். அதனை மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.

ஸ்டேப்: 5

 • அடிபிடிக்காமல் நன்றாக கிளறவும். சுவையான கருவேப்பிலை சாதம் ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்