நெல்லிக்காய் மிட்டாய் | Amla Candy Recipe in Tamil
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் மிகவும் அருமையான மற்றும் மிகவும் சுவையான நெல்லிக்காய் மிட்டாய் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். பொதுவாக ஒரு நெல்லிக்காய் 2 ஆப்பிள்களுக்கு சமம் என்று கூறுவார்கள். இப்படி மிகுந்த சத்துக் கொண்டுள்ள நெல்லிக்காயை குழந்தைகள் சாப்பிட விரும்ப மாட்டாரகள்.
அதனால் இந்த பதிவில் கூறியுள்ளதுபோல் நெல்லிக்காயை மிட்டாய் போல செய்து தந்து பாருங்கள் மிட்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். இதனை மீண்டும் மீண்டும் செய்து தருமாறு கேட்பார்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Sweet Amla Candy Recipe in Tamil:
முதலில் இந்த நெல்லிக்காய் மிட்டாய் செய்ய தேவையான பொருட்களை பற்றி காணலாம்.
- நெல்லிக்காய் – 1 கிலோ
- வெல்லம் – 1 கிலோ
- நெய் – 2 டீஸ்பூன்
- உப்பு -1/2 டீஸ்பூன்
- இஞ்சி – 1 துண்டு
- எலும்பிச்சைபழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை :
ஸ்டேப் – 1
முதலில் 1 கிலோ நெல்லிக்காயை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 – 15 நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் வேக வைத்த நெல்லிக்காயில் விதையை நீக்கி விட்டு சதைப்பகுதியை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 துண்டு இஞ்சி சேர்த்து பசை போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து 1 கிலோ வெல்லத்தை சேர்த்து அதில் வெல்லம் கரைய தேவையான அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்து கலந்து விடுங்கள்.
ஸ்டேப் – 4
வெல்லம் நன்கு கரைந்த பிறகு அரைத்து வைத்துள்ள நெல்லிக்காயை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். நெல்லிக்காயும், வெல்லமும் வெந்த பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் எலும்பிச்சைபழச்சாறு சேர்த்து வேக விடுங்கள்.
ஸ்டேப் – 5
இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று நன்கு திரண்டு வரும் நேரத்தில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
ஸ்டேப் – 6
பின்னர் ஒரு கிண்ணத்திலேயோ அல்லது தட்டிலேயோ சிறிதளவு நெய் தடவி செய்து வைத்துள்ள நெல்லிக்காயை ஊற்றி நன்கு சூடு ஆறியவுடன் சிறிய சிறிய துண்டுகளாக மிட்டாய் போல் நறுக்கி அனைவருக்கும் பரிமாறலாம்.
இப்பொழுது நமது நெல்லிக்காய் மிட்டாய் ரெடி வாங்க சுவைக்கலாம். நீங்களும் உங்கள் வீட்டில் இந்த நெல்லிக்காய் மிட்டாயை செய்து சுவைத்து பாருங்கள்.
ஒரு துண்டு நெல்லிக்காய் சாப்பிட்டால் அப்படி என்ன நன்மை கிடைக்க போகிறது
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |