அரிசி மாவில் பூரி சுட முடியும்.! உங்களுக்கு தெரியுமா.?

Advertisement

அரிசி மாவு பூரி செய்வது எப்படி.?

வணக்கம் நண்பர்களே.! கோதுமை மாவில் பூரி சுட தெரியும், எண்ணெய் இல்லாமலும் பூரி சுட தெரியும், மைதா மாவு பூரி போன்றவையில்  தான் பூரி செய்து ருசித்திருப்போம். ஆனால் அரிசி மாவில் பூரி செய்திருக்கீர்களா..! அப்படி செய்தது இல்லை, செய்ய தெரியாது என்றால் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த அரிசி மாவு பூரி பாலக்காட்டில் மிகவும் விசேஷமானது.! வாங்க அரிசி மாவு பூரி எப்படி செய்வது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ எண்ணெய் இல்லாமல் பூரி சுட முடியுமா.? இனிமேல் சுடலாம் வாங்க..!

அரிசி மாவு பூரி செய்ய தேவையான பொருட்கள்:

  • தேங்காய் துருவல் –1/4 கப்
  • பெரிய வெங்காயம் – 1
  • சீரகம் – 1/2 தேக்கரண்டி

பூரி செய்முறை:

arisi maavu recipe in tamil

 

ஸ்டேப்:1

முதலில் வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். பின் தேங்காய் துருவல் 1/4 கப், நறுக்கிய வெங்காயம், சீரகம் 1/2 தேக்கரண்டி சேர்த்து அரைத்து கொள்ளவும்.

ஸ்டேப்:2

பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் அரிசி மாவு சேர்க்கவும். பின் அதில் அரைத்து வைத்த கலவையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் பிசைந்து வைத்த மாவை உருண்டையாக உருட்டி கொள்ளவும்.

ஸ்டேப்:3

இந்த பூரி மாவை பூரி கட்டையால் வைது தேய்க்க முடியாது. அதனால் வாழை இலை எடுத்து கொள்ளுங்கள். இந்த’வாழை இலையில் உருட்டி வைத்த உருண்டையை வைத்து அதன் மேல் ஒரு தட்டை வைத்து அழுத்துங்கள். ரொம்ப மெல்லிசையாக தட்டி விடாதீர்கள். கொஞ்சம் கடினமாக தட்டி கொட்டுங்கள்.

ஸ்டேப்:4

பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாயை வையுங்கள். கடாய் சூடானதும் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் தட்டி வைத்த பூரியை பொரித்து எடுங்கள். அவ்வளவு தாங்க சூப்பரான அரிசி மாவு பூரி ரெடி..! பூரி குருமா வைத்து சுவைத்திடுங்கள்.

ஸ்டேப்:5

ஒரே மாதிரியான பூரி சுட்டு சாப்பிடாமல் இந்த வித்தியாசமாக செய்து சாப்பிடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவை படிப்பதோடு இல்லாமல் செய்து ருசித்திடுங்கள்.!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement