வீட்டில் வாழைப்பழம் இருக்குதா..! அப்போ இந்த மாதிரி ருசியான ரெசிபியை செஞ்சி பாருங்க..!

Advertisement

 Banana and Bread Recipe in Tamil

இன்றைய பதிவில் மிகவும் எளிமையான மற்றும் ருசியான ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். உங்களின் பிள்ளைகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி வரும் பொழுது அவர்களுக்கு இந்த பதிவில் கூறியுள்ள வாழைப்பழத்தை வைத்து செய்கின்ற ஸ்னாக்ஸ் ரெசிபியை ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள். அவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் மீண்டும் மீண்டும் செய்து தருமாறு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவர்களுக்கு செய்து கொடுங்கள். சரி வாங்க நண்பர்களே இந்த ரெசிபி எவ்வாறு செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Easy Banana Recipes in Tamil:

முதலில் இந்த ஸ்னாக்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. வாழைப்பழம் – 4
  2. கோதுமைமாவு – 1 கப் 
  3. பால் – 1 கப் 
  4. சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன் 
  5. பிரட் – 8 பீஸ் 
  6. ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன் 
  7. ஜாம் – தேவையான அளவு 
  8. எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்துவைத்துள்ள வாழைப்பழத்தின் தோலினை நீக்கிவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

Simple banana recipes in tamil

பின்னர் அதனுடனே 1 கப் கோதுமைமாவு, 1 கப் பால், 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு மாவுப்போல் அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது மாவு ரெடி.

ஸ்டேப் – 3

Banana recipes dessert in tamil

பிறகு நாம் எடுத்துவைத்துள்ள 8 பிரட் பீஸ்களில் இருந்து இரண்டினை எடுத்து அதனின் ஓரங்களை நறுக்கிக்கொள்ளுங்கள். பின்னர் பிரட்டின் நடுவில் ஜாம் தடவிக் அதனை ஒன்றன் மீது ஒன்று வைத்து இரண்டு பாதியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இதேபோல் மீதமுள்ள பிரட் பீஸ்களையும் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

பின்னர் நாம் ஜாம் தடவி வைத்துள்ள பிரட்டுகளை தயார் செய்துவைத்துள்ள மாவினுள் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

Banana recipes in tamil

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் நாம் மாவினுள் போட்டு எடுத்துவைத்துள்ள பிரட்டுகளை போட்டு நன்கு பொறித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்பொழுது நமது மிகவும் ருசியான ஸ்நாக்ஸ் ரெடி வாங்க சுவைக்கலாம். இந்த ஸ்நாக்ஸ் ரெசிபியை நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்துப்பாருங்கள் அவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேக்குறாங்களா பத்தே நிமிடத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் குழிப்பணியாரம் ரெடி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement