ஹோட்டல் ஸ்டையில் Barbecue chicken செய்முறை..! Barbecue Chicken Recipe in Tamil..!

Barbecue Chicken Recipe in Tamil

ஹோட்டல் ஸ்டையில் Barbecue chicken செய்முறை..!

chicken recipes in tamil: அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த Barbecue chicken-ஐ வீட்டிலேயே மிக சுவையாக ஹோட்டல் ஸ்டைலில் Barbecue chicken செய்வது எப்படி (Barbecue Chicken Recipe in Tamil) என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பெங்களூர் ஸ்பெசல் சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி ..!

Barbecue Chicken Recipe in Tamil

Barbecue chicken செய்ய தேவையான பொருட்கள்:

 1. சிக்கன் லெக் பீஸ் – ஒரு கிலோ
 2. வினிகர் – 2 ஸ்பூன்
 3. உப்பு தேவையான அளவு
 4. கலர் பொடி – விருப்பமிருந்தால் சிறிதளவு பயன்படுத்தி கொள்ளவும்
 5. ஒரு எலுமிச்சை பழத்தின் – சாறு
 6. சின்ன வெங்காயம் – 10 (விழுதாக அரைத்து கொள்ளவும்)
 7. மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன்
 8. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
 9. தயிர் – 1/2 கப்
 10. Mayonnaise (மயோனெய்சு) சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
 11. கான்பிளவர் மாவு – 1/4 கப்
செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை விளக்கம்..!

Barbecue chicken செய்முறை:

Barbecue Chicken Recipe in Tamil Step: 1

முதலில் ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில், இரண்டு ஸ்பூன் வினிகர், தேவையான அளவு உப்பு, கலர் பொடி மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

பின் அதனுடன் சுத்தமாக கழுவி வைத்துள்ள சிக்கன் லெக் பீஸை சேர்த்து திரும்பவும் நன்றாக கலந்து கொள்ளவும்.

Barbecue Chicken Recipe in Tamil Step: 2

இவ்வாறு கலந்த கலவையினை 15 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும்.

15 நிமிடங்கள் கழித்த பின் இன்னொரு பாத்திரத்தில் சின்ன வெங்காயத்தின் விழுது, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர், கான்பிளவர் மாவு  மற்றும் Mayonnaise (மயோனெய்சு) சாஸ் அல்லது முட்டை ஒன்று ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

Barbecue Chicken Recipe in Tamil Step: 3

இந்த கலவையுடன் ஊறவைத்துள்ள லெக் பீஸினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் இவற்றையும் ஒரு நேரம் ஊறவைக்க வேண்டும்.

மைரோ ஓவனில் இந்த லெக் பீஸினை வைத்து அவற்றில் எண்ணெய் தடவி 180 டிகிரி செல்ஷியஸில் 35 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால், சுவையான ஹோட்டல் ஸ்டையில் Barbecue chicken தயார்.

இவற்றை அனைவருக்கும் அன்புடன் பரிமாறுங்கள்.

Barbecue Chicken Recipe in Tamil Step: 4

இந்த Barbecue chicken-ஐ மைக்ரோ ஓவன் இல்லாமல், அடுப்பில் சமைக்கலாம் அதாவது கேஸ் அடுப்பில் chimney starter வைத்து அவற்றில் கரிக்கட்டைகளை போட்டு தீமூட்டி அந்த சாண்டின் மீது ஒரு ட்ரே வைத்து அந்த ட்ரேயின் மீது மசாலாக்களை போட்டு கலந்து வைத்துள்ள லெக் பீஸினை வைத்து வேகவைத்து எடுக்கலாம்.

நாட்டுக்கோழி குழம்பு வைப்பது எப்படி ? Easy Chicken Kulambu in…

 

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>samayal kurippugal in tamil