ஐந்தே நிமிடத்தில் சுவையான Bread Chili Recipe தயார்..!
Bread Chili Recipe:- வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய பிரட் சில்லி ரெசிபி எப்படி எளிமையான முறையில் விட்டிலேயே செய்யலாம் என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம். முதலில் நாம் இந்த பிரட் சில்லி செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதையும் அடுத்ததாக அதன் அதன் செய்முறை விளக்கத்தையும் தெரிந்து கொள்வோம்.
வீட்டில் இருந்து மிக எளிமையான முறையில் செய்து சாப்பிடக்கூடிய பல வகையான ரெசிபிக்களை உங்களுக்காக நம் பொதுநலம் பதிவில் நாங்கள் செய்முறை விளக்கத்துடன் பதிவு செய்துள்ளோம் அவற்றை தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉100 Best Samayal
வீட்டுலயே மிகச்சுவையான ஐஸ்கிரீம் செய்யலாம் அதுவும் கிரீம் இல்லாமல் |
Bread Chili recipes in tamil language
தேவையான பொருட்கள்:
- பிரட் – ஒரு கப் நறுக்கியது
- சீரகம் – 1/4 ஸ்பூன்
- பொடிதாக நறுக்கிய பூண்டு – ஒரு ஸ்பூன்
- பொடிதாக நறுக்கிய இஞ்சி – ஒரு ஸ்பூன்
- கடுகு – 1/4 ஸ்பூன்
- நறுக்கிய பச்சைமிளகாய் – 4
- காய்ந்த மிளகாய் – 4
- கருவேப்பிலை – சிறிதளவு
- பெரிய வெங்காயம் – 2 பொடிதாக நறுக்கியது
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- தக்காளி – 2 பொடிதாக நறுக்கியது
- குடைமிளகாய் – 1 பொடிதாக நறுக்கியது
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – தேவையான அளவு
- கொத்தமல்லி இலை – பொடிதாக நறுக்கியது சிறிதளவு
கேக் செய்வது எப்படி? தெளிவான செய்முறை விளக்கம்..! |
பிரட் சில்லி செய்முறை / Bread Chili recipes:
Bread Chili recipes in tamil step by step:
Step: 1
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் சூடேறியதும் மீடியம் சைசில் நறுக்கி வைத்துள்ள பிரட் துண்டுகளை அவற்றில் சேர்க்கவும், பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பிரட் துண்டுகளை 2 நிமிடங்கள் பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள்.
Step: 2
பின் அதே கடாயில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின் அவற்றில் கடுகு 1/4 ஸ்பூன், சீரகம் 1/4 ஸ்பூன், பொடிதாக நறுக்கிய இஞ்சி 1 ஸ்பூன், பொடிதாக நறுக்கிய பூண்டு 1 ஸ்பூன், நீளமாக நறுக்கிய பச்சைமிளகாய் 4, காய்ந்த மிளகாய் 4 மற்றும் சிறிதளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
Step: 3
பின் அதனுடன் பொடிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அந்த சமயம் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.
Step: 3
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கிய பின் அதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் கரம் மசலா தூள், 2 ஸ்பூன் மிளகாய் தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
1 கப் கோதுமை மாவில் Soft- ஆன பிஸ்கட் செய்முறை..! |
Step: 4
பின் அதனுடன் பொடிதாக நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதாவது வெங்கயமும், தக்காளியும் சேர்த்து வதக்கும் போது எண்ணெய் பிரிந்து வரும் அந்த அளவிற்கு வதக்கினால் போதும்.
Step: 5
மசாலாவில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அதனுடன் பொடிதாக நறுக்கி வைத்துள்ள குடைமிளகாவை சேர்த்து ஒரு நிமிடங்கள் வரை நன்றாக வதக்க வேண்டும்.
Step: 6
குடைமிளகாவை நன்கு வதக்கிய பின் வறுத்து தனியாக வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதவாது பிரட்டில் மசாலாக்கள் நன்கு சேரும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
இறுதியாக இவற்றில் பொடிதாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை சேர்த்து ஒரு கிளறி இறக்கினால் சுவையான பிரட் சில்லி ரெசிபி தயார்.
அனைவருக்கும் அன்புடன் பரிமாறுங்கள் நன்றி வணக்கம்..🙏🙏🙏
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |