1 கப் இட்லி மாவு 1 கப் தேங்காயில் சூப்பரான ரெசிபி..! Breakfast Recipes In Tamil..!

Advertisement

இட்லி மாவு, தேங்காய் இருக்கா இதோ அருமையான ஃப்ரேக் பாஸ்ட் ரெசிபி..! Breakfast Recipes..!

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் வீட்டில் உள்ள இட்லி மாவு, தேங்காய் வைத்து சூப்பரான ஒரு ரெசிபியை(Breakfast Recipes in Tamil) பார்க்க போகிறோம். அனைவரும் ஒரே உணவை சாப்பிடுவதால் அலுத்து போய்விடும். இதுபோன்று வித விதமான முறையில் உணவுகளை செய்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு அலுத்து போகும் நிலை வராது. சரி வாங்க இப்போ இந்த ரெசிபி எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..!

newஅரிசி மாவில் சுவையான ஸ்வீட் செய்வது எப்படி? Rice Flour Sweet Recipes In Tamil..!

ஃப்ரேக் பாஸ்ட் ரெசிபி செய்முறை:

தேவையான பொருட்கள்:

  1. கெட்டியான இட்லி மாவு – 1 கப் 
  2. தேங்காய் துருவல் – 1 கப் 
  3. சர்க்கரை – 1 அல்லது 1/2 ஸ்பூன் அளவு 
  4. உப்பு – தேவையான அளவு 
  5. ஏலக்காய் – 3

Steps 1:

முதலில் கெட்டியாக அரைத்த இட்லி மாவு 1 கப் எடுத்து கொள்ளவும். அடுத்து தேங்காய் துருவல் 1 கப் எடுத்து கொள்ளவும்.

அடுத்ததாக இந்த மாவில் சர்க்கரை 1 அல்லது 1/2 ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும்.

Steps 2:

உப்பு சர்க்கரையின் சுவை தெரிவதற்காக சிறிதளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது நன்றாக மாவை கலந்துகொள்ள வேண்டும்.

அடுத்து மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவலை சேர்க்கவேண்டும். மிக்ஸி ஜாரில் இருக்கும் தேங்காய் துருவலுடன் ஏலக்காய் 3 சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

Steps 3:

அரைத்த ஏலக்காய் பாலை தனியாக பவுலில் ஊற்றிக்கொள்ளவும். இப்போது அரைத்த பாலுடன் 1/2 கப் சர்க்கரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை நன்றாக மிக்ஸ் செய்யவும்.

அடுத்து சர்க்கரை சேர்த்த மாவை எடுத்துக்கொள்ளவும். இந்த மாவு பஞ்சு போல் வேண்டும் என்றால் சிறிதளவு சோடா உப்புவை கூட சேர்க்கலாம்.

இப்போது அடுப்பில் எண்ணெயை நன்றாக ஹீட் செய்து வைத்து கொள்ளவேண்டும்.

newஅரிசி பாயாசம் செய்வது எப்படி..! Kheer Recipe in Tamil..!

Steps 4:

எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பவுலில் இருக்கும் மாவை சிறிது சிறிது அளவாக எடுத்து எண்ணெயில் பொறிக்க வேண்டும்.

நன்றாக சிவந்த நிலையில் வந்த உடன் எடுக்க வேண்டும்.

Steps 5:

எல்லாவற்றையும் பொரித்து எடுத்தபிறகு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போதே அரைத்த தேங்காய் பாலில் பொரித்து எடுத்ததை சேர்க்க வேண்டும்.

இதை உடனே சாப்பிடாமல் அந்த பாலில் 10 நிமிடம் ஊறவைத்து சாப்பிட்டால் இந்த தேங்காய் பாலுடன் பணியாரம் ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும்.

இந்த டிப்ஸை கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க.

newஇட்லி மாவில் சுவையான தேன் மிட்டாய் செய்வது எப்படி..! Snacks recipe in tamil..!


இட்லி,தோசை இல்லாத காலை உணவு சட்டுன்னு ஐந்தே நிமிடத்தில்..! Breakfast Recipes in Tamil

breakfast-recipes-in-tamil

Breakfast Recipes in Tamil:- இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிக்குதா உங்களுக்கு அப்போ இந்த டிஷ் செய்து சாப்பிடுங்கள் மிகவும் சுவையாகவும், மிக அருமையாகவும் இருக்கும். குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்… இந்த டிஷ் செய்வதற்கு அதிக நேரம் ஆகாது.. அதுவும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக சுவையாக செய்துவிட முடியும்.

சரி வாங்க கோதுமை மாவை வைத்து செய்ய கூடிய அந்த சுவையான டிஸ் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போமா…

எளிமையான காலை உணவு செய்ய – தேவையான பொருட்கள்:

இரண்டு நபர் சாப்பிடுவதற்கான அளவு:

  1. உருளைக்கிழங்கு – 400 கிராம்
  2. கோதுமை மாவு – அரை கப்
  3. பொடிதாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
  4. கொத்தமல்லி இலை – பொடிதாக நறுக்கியது சிறிதளவு
  5. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  6. உப்பு – தேவையான அளவு
  7. மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப
  8. எண்ணெய் – தேவையான அளவு
  9. முட்டைக்கோஸ் மற்றும் கேரட் துருவல் – அரை கப்

எளிமையான காலை உணவு செய்முறை / Breakfast Recipes in Tamil Step: 1

முதலில் உருளைக்கிழங்கை சுத்தமாக அலசி அவற்றில் உள்ள தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக கட் செய்யவும்.

அதன் பிறகு மிக்சி ஜாரில் கட் செய்த இந்த உருளைக்கிழங்கை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைபோல் அரைத்து கொள்ளவும்.

எளிமையான காலை உணவு செய்முறை / Breakfast Recipes in Tamil Step: 2

அரைத்த இந்த உருளை கிழங்கை ஒரு சுத்தமான பவுலில் ஊற்றி அதனுடன் 1/2 கப் கோதுமை மாவு, வெங்காயம் ஒரு கப், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, துருகிய முட்டைக்கோஸ் மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக தோசை மாவு போல் கலந்து கொள்ளவும்.

அவ்வளவு தாங்க மாவு தயார்.

எளிமையான காலை உணவு செய்முறை / Breakfast Recipes in Tamil Step: 3

இவ்வாறு தயார் செய்த மாவினை தோசை கல்லில் தோசை போல் ஊற்றி வேகவைத்து எடுக்க வேண்டும்.

சுவையான மற்றும் எளிமையான காலை உணவு தயார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடுய காலை உணவு தயார். அனைவருக்கும் அன்புடன் பரிமாறுங்கள்.



ஈசியா ருசியா Breakfast Recipes செய்து முடிக்கனுமா இதை படியுங்கள்..!

எளிமையான காலை உணவு / Breakfast Recipes in Tamil:- இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிக்குதா உங்களுக்கு அப்போ இந்த டிஷ் செய்து சாப்பிடுங்கள் மிகவும் சுவையாகவும், மிக அருமையாகவும் இருக்கும். குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்… இந்த டிஷ் செய்வதற்கு அதிக நேரம் ஆகாது.. அதுவும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக சுவையாக செய்துவிட முடியும்.

Sweet Recipes Tamil – டபுள் டெக்கர் கலாகண்ட் செய்முறை..!

 

சரி வாங்க கோதுமை மாவை வைத்து செய்ய கூடிய அந்த சுவையான டிஸை எப்படி (Breakfast Recipes in Tamil) செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் இங்கு படித்தறிவோம்.

தேவையான பொருட்கள்:-

  1. உருளைக்கிழங்கு – 1 (சீவி நிலமாக கட் செய்து கொள்ளவும்)
  2. பச்சைமிளகாய் – 2 (பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்)
  3. கொத்தமல்லி இலை – (பொடிதாக நறுக்கியது)
  4. மிளகு தூள் – 1/4 ஸ்பூன்
  5. வெங்காயம் – 1 (பொடிதாக நறுக்கியது)
  6. கோதுமை மாவு – 4 ஸ்பூன்
  7. முட்டை – 2
  8. உப்பு – தேவையான அளவு
  9. எண்ணெய் – தேவையான அளவு
காளான் 65 செய்வது எப்படி..? செய்முறை விளக்கம்..!

Breakfast Recipes in Tamil / எளிமையான காலை உணவு செய்முறை:

How To Make Breakfast Recipes in Tamil Step: 1

முதலில் வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும், பின்பு பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும், அதன் பிறகு உருளைக்கிழங்கை தோல் சீவி, பஜ்ஜி சீவும் கட்டையில் நைசாக சீவி, பின்பு நீளவாக்கில் கட் செய்து கொள்ளவும். பிறகு கொத்தமல்லியை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.

இப்பொழுது ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளவும் அவற்றில் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் ஒவ்வொன்றாக சேர்த்துக்கொள்ளவும்.

How To Make Breakfast Recipes in Tamil Step: 2

பின்பு நான்கு ஸ்பூன் கோதுமை மாவை சேர்க்க வேண்டும்.

பிறகு இரண்டு முட்டையை உடைத்து இந்த கலவையுடன் ஊற்றுங்கள்.

பின் தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 ஸ்பூன் மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து இந்த கலவையை நன்கு கலந்து கொள்ளவும்.

How To Make Breakfast Recipes in Tamil Step: 3

இப்போது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து, கல் சூடேறியதும், எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவை தோசை போல் ஊற்றி வேகவைக்கவும். கீழ் பகுதி நன்கு வெந்தவுடன், தோசையை பிரட்டி மறுபக்கத்தையும் வேகவைக்க வேண்டும்.

அவ்வளவு தான் சுவையான மற்றும் எளிமையான காலை உணவு தயார் அனைவருக்கும் அன்புடன் பரிமாறுங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!
Advertisement