சுவையான பிரிஞ்சி சாதம் செய்வது எப்படி | Kalyana Veetu Brinji Sadam

Brinji Sadam Seivathu Eppadi in Tamil

பிரிஞ்சி சாதம் செய்வது எப்படி? | Brinji Sadam Seivathu Eppadi in Tamil

சாதரணமாகவே எல்லோருக்கும் வெரைட்டி ரைஸ் என்றால் பிடிக்கும். அதிலும் பிரிஞ்சி சாதம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். அதிலும் குறிப்பாக கல்யாண வீட்டில் செய்யும் பிரிஞ்சி சாதம் சூப்பரான சுவையில் இருக்கும். நாம் வீட்டில் செய்தால் மட்டும் அந்த அளவிற்கு சுவையாக வருவதில்லை என்று பலமுறை யோசித்து கவலை பட்டிருப்போம், இனி கவலையே வேண்டாம் நாம் இந்த பதிவில் கல்யாண வீட்டில் செய்வது போல பிரிஞ்சி சாதம் நம் வீட்டிலும் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

Brinji Seivathu Eppadi Tamil

 1. பாசுமதி அரிசி – அரை கிலோ
 2. நெய் – 4 டேபிள் ஸ்பூன்
 3. பிரிஞ்சி இலை – 4
 4. அன்னாசி பூ – 4
 5. சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
 6. பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
 7. வெங்காயம் – 3 (நறுக்கியது)
 8. தக்காளி  – 2 (நறுக்கியது)
 9. இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
 10. மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
 11. தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 12. மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 13. கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
 14. சோம்பு தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 15. புதினா – 1 கப் (நறுக்கியது)
 16. கொத்தமல்லி – 1 கப் (நறுக்கியது)
 17. பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு – 1 கப் (நறுக்கியது)
 18. உப்பு – தேவையான அளவு
 19. தண்ணீர் – 750 ml
 20. தேங்காய் பால் – 500 ml
 21. முந்திரி – 4 (வறுத்தது)
 22. பிரட் துண்டுகள் – தேவையான அளவு (வறுத்தது)

செய்முறை:

Brinji Seivathu Eppadi Tamil

ஸ்டேப்: 1

Brinji Seivathu Eppadi Tamil: அரை கிலோ பாசுமதி அரிசி எடுத்து அதனை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.

ஸ்டேப்: 2

முதலில் Pan-ஐ சூடாக்கி கொள்ளவும். பான் சூடான பிறகு 4 டேபிள் ஸ்பூன் நெய், 4 பிரிஞ்சி இலை, 4 அன்னாசி பூ, 1 டேபிள் ஸ்பூன் சோம்பு, இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் 3 சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 3

பின் அதில் Slice-ஆக நறுக்கிய 3 வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், Slice-ஆக நறுக்கிய தக்காளி 2 சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 4

Kalyana Brinji Recipe in Tamil: அதன் பிறகு அதில் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள், 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா, 1 டேபிள் ஸ்பூன் சோம்பு தூள் சேர்த்து கிண்டவும்.

ஸ்டேப்: 5

பின் அதில் ஒரு கப் நறுக்கிய புதினா, 1 கப் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து மிக்ஸ் பண்ணவும். அதன் பிறகு ஊறவைத்திருக்கும் அரிசியை சேர்த்து மசாலா மிங்கில் ஆகும் அளவிற்கு பொறுமையாக கிண்டவும்.

ஸ்டேப்: 6

Brinji Sadam Seivathu Eppadi: பின் அதில் நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு 1 கப் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். மிக்ஸ் பண்ணிய பிறகு தேவையான அளவு உப்பு, 750 ml தண்ணீர், 500 ml தேங்காய் பால் சேர்த்து பொறுமையாக மிக்ஸ் பண்ணவும்.

ஸ்டேப்: 7

Brinji Recipe in Tamil: பின் அதில் 4 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து 15-20 நிமிடம் மீடியம் flame -ல் வைத்து வேக வைக்கவும். 15 நிமிடம் கழித்து அதன் மேல் வறுத்த முந்திரி 4, வறுத்த பிரட் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும்.

ஸ்டேப்: 8

Vegetable Brinji Recipe in Tamil: பின் அடுப்பில் தோஷ டவாவை வைத்து அதன் மேல் பிரிஞ்சி சாதம் வைத்திருக்கும் பாத்திரத்தை வைத்து 10 நிமிடம் சூடாக்கவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடலாம். இப்போது சூடான சுவையான கல்யாண ஸ்டைல் பிரிஞ்சி சாதம் தயார்.

சுவையான வெஜிடபிள் பிரியாணி

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்