Carrot Delight Recipe
இன்றைய சமையல் குறிப்பு பதிவில் கேரட்டை வைத்து ஒரு அருமையான ரெசிபி செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கும், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் ஏதாவது சுவையாக செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இதை செய்து கொடுங்கள். இந்த கேரட் டிலைட் ரெசிபி இனி கடைகளில் வாங்கி சாப்பிட தேவையில்லை. சுலபமான முறையில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். கேரட் டிலைட் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
கேரட் டிலைட் செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
- கேரட் – 1/2 கிலோ
- சர்க்கரை – 1/2 கப்
- சோளமாவு – 3 டேபிள் ஸ்பூன்
- ஃபுட் கலர் (Food Color) – 1/4 டீஸ்பூன்
அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய கேரட் கீர் இப்படி செஞ்சி பாருங்க..! |
கேரட் டிலைட் செய்முறை:
செய்முறை -1
முதலில் கேரட்டை சுத்தமாக கழுவி அதன் தோலை சீவி விட்டு, பின் அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
செய்முறை -2
பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நாம் நறுக்கி வைத்துள்ள கேரட்டை சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும். கேரட் நன்றாக வெந்து வரும் வரை வேகவைக்க வேண்டும். அடுத்து இதை இரக்கி ஆறவிட வேண்டும்.
செய்முறை -3
கேரட் நன்றாக ஆறியதும் அதை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் 1/2 கப் அளவில் சர்க்கரை மற்றும் 3 டேபிள் ஸ்பூன் அளவில் சோளமாவு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
இதையும் பாருங்கள் –> கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
செய்முறை -4
பின் அதில் 1/4 டீஸ்பூன் சிவப்பு நிற ஃபுட் கலர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் அரைத்து வைத்துள்ள கேரட்டை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
செய்முறை -5
கேரட் மாவு பதத்திற்கு நன்றாக கெட்டியாக வரும் வரை கலந்து விட வேண்டும். இது மாவு பதத்திற்கு கெட்டியாக வந்ததும் அடுப்பில் இருந்து இரக்கி ஆறவிட வேண்டும்.
கேரட் டிலைட் நன்றாக ஆறியதும் அதை எடுத்து லட்டு போல உருட்டி கொள்ள வேண்டும். பின் அதன் மேல் Coconut Powder தூவி கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் நண்பர்களே..! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய கேரட் டிலைட் ரெடி..! இதை நீங்கள் மிகவும் சுலபமான முறையில் சுவையாக வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |