செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி? முழு விவரம்..! Chettinad Mushroom Masala in Tamil..!

chettinad mushroom masala in tamil

செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி? முழு விவரம்..! Chettinad Mushroom Masala in Tamil..!

Chettinad Mushroom Masala in Tamil..! பொதுவாக செட்டிநாடு சமையல் என்றாலே அனைவருமே மிகவும் விரும்பி சாப்பிடுவோம். அந்த வகையில் இன்று நாம் மிகவும் சுவையான அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

செட்டிநாடு காளான் மசாலா chettinad mushroom masala செய்ய தேவையான பொருட்கள்:-

 1. காளான் – 200 கிராம்
 2. எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
 3. கடுகு – 1/2 தேக்கரண்டி
 4. சீரகம் – 1 தேக்கரண்டி
 5. பொடிதாக நறுக்கிய வெங்காயம் – 1
 6. பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
 7. பொடிதாக நறுக்கிய தக்காளி – 2
 8. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
 9. மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
 10. உப்பு – தேவைக்கேற்ப
 11. கருவேப்பிலை – சிறிதளவு
இப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..!

மசாலா விழுது அரைப்பதற்கு:-

 1. எண்ணெய்
 2. கொத்தமல்லி விதை – 1 மேசைக்கரண்டி
 3. சீரகம் – 1 தேக்கரண்டி
 4. சோம்பு – 1 தேக்கரண்டி
 5. மிளகு – 1/2 தேக்கரண்டி
 6. காய்ந்த மிளகாய் – 4
 7. பூண்டு பற்கள் – 4
 8. இஞ்சி – 1 துண்டு
 9. துருகிய தேங்காய் – 2 தேக்கரண்டி
 10. மிளகாய் தூள் – தேவைக்கேற்ப
 11. ஊறவைத்த புளி – ஒரு துண்டு
காளான் 65 செய்வது எப்படி..? செய்முறை விளக்கம்..!

செட்டிநாடு காளான் மசாலா செய்முறை விளக்கம் / How to make chettinad mushroom masala in tamil

How to make காளான் மசாலா செய்வது எப்படி chettinad mushroom masala in tamil step: 1

முதலில் மசாலா விழுதினை தயார் செய்து வைத்து கொள்வோம். அதற்கு முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அவற்றில் ஒரு ஸ்பூன் மல்லி விதை, ஒரு தேக்கரண்டி சீரகம், சோம்பு ஒரு தேக்கரண்டி, 1/2 கரண்டி மிளகு, நான்கு பற்கள் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, 4 மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

How to make chettinad mushroom masala in tamil step: 2

பின் இறுதியாக இரண்டு தேக்கரண்டி துருவிய தேங்காவையும் சேர்த்து ஒரு முறை வதக்கி கொள்ளவும். பின் அதனுடன் ஊறவைத்த புளியையும் சேர்த்து மிக்சியில் மைபோல் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

இப்பொழுது செட்டிநாடு காளான் மசாலா செய்வதற்கு மசாலா தயாராகிவிட்டது. அடுத்ததாக செட்டிநாடு காளான் மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க…

How to make chettinad mushroom masala in tamil step: 3

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும், அவற்றில் 1/2 ஸ்பூன் கடுகு சேர்க்கவும்.

கடுகு பொரிந்த பின் 1/2 தேக்கரண்டி சீரகம், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

பின் சிறிதளவு கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.

பலவகையான பன்னீர் ரெசிபி செய்முறை தெரிஞ்சிக்கலாம் வாங்க..!

How to make chettinad mushroom masala in tamil step: 4

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் பொடிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளியை 2 நிமிடங்கள் வதக்கிய பின் இதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

How to make chettinad mushroom masala in tamil step: 5

பிறகு இதனுடன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 200 கிராம் காளானை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

பின் அரைத்து வைத்துள்ள மசாலாவினை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். பிறகு இவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளறிய பின் கடாயை மூடி 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவைக்க  வேண்டும்.

அவ்வளவு தாங்க  அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான செட்டிநாடு காளான் மசாலா தயார்.

இந்த மசாலாவை சப்பாத்தி, தோசை, இட்லி போன்ற உணவுகளுக்கு தொட்டு சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டீர்களா வீட்டில் செய்து அசத்துங்கள் நன்றி வணக்கம்..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>samayal kurippugal in tamil