Chettinad Mutton Gravy Recipe in Tamil
ஹாய் நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் சொல்லும் போதே நாவிற்கு சுவை தரும் செட்டிநாடு மட்டன் கிரேவி செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துகொண்டு உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள். மட்டன் கிரேவி ஒரே மாதிரியான சுவையில் சாப்பிட்டு அலுத்து போகிருபவர்களுக்கும் சமைக்கும் தாய்மார்களுக்கும் இன்றைய பதிவு மிகவும் உதவியானதாக இருக்கும். சரி வாருங்கள் செட்டிநாடு மட்டன் செய்வது எப்படி என்று தொடரை படித்து தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படியுங்கள்⇒ செட்டிநாடு முட்டை குழம்பு மிகவும் சுவையாக செய்யும் முறை
செட்டிநாடு மட்டன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
- மட்டன்- 300 கிராம்
- சோம்பு- 1 ஸ்பூன்
- ஏலக்காய்- 1
- கிராம்பு- 3
- பிரியாணி இல்லை- 1
- அன்னாசி- 1/4 ஸ்பூன்
- துருவிய தேங்காய்- 1/2 கப்
- சின்ன வெங்காயம்- 200 கிராம்
- பச்சை மிளகாய்- 2
- தக்காளி- 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 1/2 ஸ்பூன்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- கருவேப்பிலை- ஒரு கையளவு
வறுத்து அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:
- மிளகு- 1 ஸ்பூன்
- சோம்பு- 1/2 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- ஏலக்காய்- 1
- பட்டை- 1 துண்டு
செட்டிநாடு மட்டன் கிரேவி செய்வது எப்படி.?
ஸ்டேப்- 1
முதலில் எடுத்து வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி இவை அனைத்தையும் தனித்தனியாக நறுக்கி வைத்து கொள்ளவும். அதன் பிறகு 1/2 கப் தேங்காயை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அதையும் தனியாக அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்த பிறகு வறுத்து அரைப்பதற்கு எடுத்து வைத்துள்ள பொருட்களை அதில் போட்டு பொன் நிறமாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள். வதக்கிய பொருட்கள் ஆரிய பிறகு அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு மசாலாவாக அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
அதன் பிறகு மட்டனை தண்ணீரில் கழுவி சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் பிரியாணி இலை, சோம்பு, ஏலக்காய், அன்னாசி இலை, கிராம்பு அனைத்தையும் போட்டு பொன் நிறமாக வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
அடுப்பில் உள்ள பொருட்கள் பொன் நிறமாக மாறியவுடன் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பிலை, வறுத்து அரைத்த மசாலா மற்றும் எடுத்து வைத்துள்ள மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் போட்டு நன்றாக 10 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 5
அடுப்பில் உள்ள மசாலா பொருட்கள் நன்றாக வதங்கிய பிறகு அரைத்த தேங்காய், மட்டன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிது நேரம் கிண்டி விடுங்கள். அதன் பிறகு மட்டனை 3/4 மணி நேரம் நன்றாக வேகா விடுங்கள்.
ஸ்டேப்- 6
மட்டன் வெந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் நீங்கள் எதிர் பார்த்த சுவையான செட்டிநாடு கிரேவி ரெடி. ஒரு முறை வீட்டில் இப்படி செய்து பாருங்கள் அதற்கு பிறகு இந்த சுவையை மறக்கவே மாட்டீர்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |