சிக்கன் குழம்பு செய்வது எப்படி? | Chicken Kulambu Seivathu Eppadi
Chicken Kulambu Seivathu Eppadi:- பொதுவாக சிக்கன் குழம்பை எப்படி செய்தாலும் சிக்கனின் சுவை குழம்பில் சேர்ந்து அந்த குழம்பினை மிகவும் சுவையாகிவிடும் அல்லவா? நாம் சாதாரணமாக செய்யும் கோழி குழம்பே அவ்வளவு ருசியாக இருக்கும் போது. நாம் முறையாக, பக்குவமாக அதனை செய்தால் அந்த சிக்கன் குழம்பு எப்படி இருக்கும் பாருங்களே.. சரி வாங்க இந்த பதிவில் சிக்கன் குழம்பை மிகவும் டேஸ்ட்டா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி சாப்பிடும் சிக்கன் குழம்பை எப்படிம் சரியான முறையில் வைப்பது என்பதை இப்பொழுது படித்தறியலாம்.
சிக்கன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்து அரைக்க:
- கல்பாசி – 2
- பிரிஞ்சு இலை – 2
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 1
- அன்னாசி பூ – 1
- மராத்திமொக்கு – 1
- பட்டை – 1 துண்டு
- சீரகம் – 1 டீஸ்பூன்
- தனியா – 2 டீஸ்பூன்
- சோம்பு – 1/2 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 4
- கருவேப்பிலை – சிறிதளவு
- துருவிய தேங்காய் – 1 கப்
குழம்பு வைக்க:
- சிக்கன் – 250 கிராம்
- வெங்காயம் – 2
- தக்காளி – 2
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- புளிக்காத தயிர் – 2 டீஸ்பூன்
- கருவேப்பிலை – சிறிதளவு
சிக்கன் குழம்பு செய்முறை – Chicken Kulambu Seivathu Eppadi:
ஸ்டேப்: 1
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் மேல் வெறுப்பதற்கு கூறப்பட்டுள்ள பொருட்களை அனைத்தும் ஒவ்வொன்றாக அதாவது தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பொருட்களை வறுப்பதற்கு எண்ணெய் பயன்படுத்தக் கூடாது.
பிறகு வறுத்த பொருட்களை அனைத்தயும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
ஒரு தேங்காவையும் பொன்னிறமாக வறுத்து அதனுடன் சிறிதளவு பெருஞ்சீரகம் சேர்த்து பேஸ்ட்டு பதத்திற்கு மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 3
பிறகு மீண்டும் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெயை சூடேற்றவும். எண்ணெய் சூடேறியதும் பட்டைகிராம்பு சேர்த்து வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
ஸ்டேப்: 4
வெங்காயம் நன்கு வாதங்கயதும் தக்காளியை சேர்த்து வதக்குங்கள், தக்காளியும் ஓரளவு தங்கியது அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து வதக்க வேண்டும்.
ஸ்டேப்: 5
அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதினை பச்சை வாசனை நீங்கும் வரை வதக்க வேண்டும்.
ஸ்டேப்: 6
அடுத்ததாக மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள்.
ஸ்டேப்: 7
பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள கறியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கறியை மசாலாவுடன் சேர்த்து வதக்கியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்குகிளறியபின் குழம்பை நன்கு கொதிக்க வைக்கவும்.
ஸ்டேப்: 8
கொதித்து கொஞ்சம் கறி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் முறையான மற்றும் அருமையான சுவையில் சிக்கன் குழம்பு தயார். ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.
சிக்கன் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா ஆளா தூக்கும்!!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |