எவ்வளவோ அல்வா சாப்பிட்ரூப்பீர்கள்.! ஆனால் இந்த மாதிரி அல்வா சாப்பிட்டுயிருக்கிங்களா ..!

coconut halwa recipe in tamil

தேங்காய் அல்வா செய்வது எப்படி.?

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் தேங்காய் அல்வா செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம். அல்வா என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் வீட்டில் செய்ய மாட்டோம். கடையில்  வாங்கி தான் சாப்பிடுவோம். வீட்டில் செய்தால் மைதா அல்வா, கான்பிளவர் அல்வா என்று தான் சமைத்திருப்போம். ஆனால் இந்த மாதிரி செய்யும் போது திகட்டும் என்று பெரியவர்கள் சாப்பிட மாட்டார்கள். இந்த அல்வா செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ பீட்ரூட் இருக்கிறதா? உடனே இந்த பீட்ரூட் அல்வா செய்து பாருங்கள்..!

தேங்காய் அல்வா தேவையான பொருட்கள்:

  • தேங்காய் துருவல் – 2 கப்
  • நெய் – ஒரு கரண்டி
  • முந்திரிப் பருப்பு – 12
  • சர்க்கரை  – 1 1/2 கப்
  • ஏலக்காய் – தேவையான அளவு

தேங்காய் அல்வா செய்முறை:

ஸ்டேப்:1

முதலில் தேங்காயை திருகி வைத்து கொள்ள வேண்டும். முந்திரி பருப்பையும் உடைத்து வைத்து கொள்ளுங்கள். பின் ஏலக்காய் நுனிக்கி வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:2

பின் அடுப்பை பற்ற வைத்து கொள்ளுங்கள். அதில் கடாயை வையுங்கள். அதில் தேவையான அளவு நெய் ஊற்றவும். பின் திருகிய தேங்காயை சேர்க்கவும். பின் வதக்கவும்.

ஸ்டேப்:3

தேங்காய் வதங்கிய பிறகு அதில் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரையை சேர்த்து நல்லா வதக்கவும். தேவைப்பட்டால் நெய் ஊற்றி கொள்ளவும். பின் அதில் நுனிக்கி ஏலக்காய் சேர்க்கவும்.

ஸ்டேப்:3

குறைவான தீயிலே இருக்கட்டும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கி கொள்ளவும்.

ஸ்டேப்:4

பின் வதக்கி வைத்த  முந்திரியை சேர்க்கவும். தேங்காய் நல்லா பிரண்டு பாத்திரத்தில் ஒட்டாத நிலை வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

அவ்ளோ தாங்க சுவையான தேங்காய் அல்வா ரெடி..! ருசிக்கலாம் வாங்க..

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal