தேங்காய் சாதம் செய்வது எப்படி | Coconut Rice Recipe in Tamil
Thengai Sadam: குழந்தைகள் அனைவருக்கும் தேங்காய் சாதம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். காலை நேரத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வேகமாகவும், நல்ல சுவையுடனும் ஒரு அருமையான கலவை சாதம் இந்த தேங்காய் சாதம். தேங்காய் சாதத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலாக செய்வார்கள். தேங்காய் சாதத்தில் வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து செய்யும் போது அதன் டேஸ்ட் இன்னும் சூப்பராக இருக்கும். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் இந்த தேங்காய் சாதத்தை (coconut rice in tamil) எப்படி ஈசியாக செய்யலாம் என்று பார்ப்போமா..
தேங்காய் சாதம் செய்ய தேவையான பொருள்:
- அரிசி – 1 கப்
- தண்ணீர் – 2 கப்
- தேங்காய் – 1/2 கப் (துருவியது)
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- முந்திரி – 1/4 கப்
- உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் – 3-4
- பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
- கறிவேப்பிலை – சிறிது
- உப்பு – தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் சாதம் செய்வது எப்படி:
ஸ்டேப்: 1 தேங்காய் சாதம் (thengai sadam seivathu eppadi) செய்ய முதலில் அரிசியை நன்றாக 1/2 மணிநேரம் ஊற வைத்து சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
ஸ்டேப்: 2 பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கி, சாதத்தை தட்டில் போட்டு சில நேரம் உலர வைக்கவும்.
கோவில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி |
ஸ்டேப்: 3 அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கடாய் நன்கு காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு, முந்திரி, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
ஸ்டேப்: 4 அடுத்து துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு பொன்னிறம் ஆகும் அளவிற்கு வதக்கி விட வேண்டும்.
ஸ்டேப்: 5 கலவையானது ஓரளவு பொன்னிறமாக வந்ததும், சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும். சூப்பரான தேங்காய் சாதம் ரெடியாகிவிட்டது.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |