மீன் பிரியாணி செய்வது எப்படி | Fish Biryani Recipe in Tamil

Advertisement

அருமையான மீன் பிரியாணி செய்வது எப்படி?

மீன் பிரியாணி செய்வது எப்படி: சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான், அதிலும் குறிப்பாக அசைவ சாப்பாடு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் அசைவ சாப்பாட்டுக்களில் ராஜாவாக இருக்கும் மீனை வைத்து மீன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். பிரியாணியில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி என பல வகைகள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான Taste-ல் இருக்கும். சரி வாங்க இந்த பதிவில் மிகவும் ருசியான Fish Biryani செய்வது எப்படி என்று பார்ப்போம்.

மீனை ஊற வைப்பதற்கு தேவையான பொருட்கள்:

  1. மீன் (முள் இல்லாதது) – தேவையான அளவு
  2. மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  3. மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 1 – மீன் பிரியாணி:

  • ஒரு பாத்திரத்தில் நீங்கள் வைத்துள்ள மீனை எடுத்துக்கொண்டு அதன் மேல் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக பிசறி வைத்து கொள்ளவும். இது ஒரு அரை மணி நேரம்  மசாலாவில் ஊற வேண்டும்.
  • உங்களுக்கு தேவையான அளவு பாஸ்மாதி அரிசியை எடுத்து நன்றாக கழுவிவிட்டு ஒரு அரை மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

பிரியாணி மசாலா அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:

  1. இஞ்சி – 1 (நறுக்கியது)
  2. பூண்டு – 8 பல் (தோல் நீக்கியது)
  3. பச்சை மிளகாய் – மூன்று
  4. சிவப்பு மிளகாய் – மூன்று
  5. துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
  6. தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை: 2 – மீன் பிரியாணி எப்படி பண்றது?

  • பிரியாணிக்கு தேவையான மசாலா அரைத்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் 1 இஞ்சி நறுக்கியது, எட்டு பல் பூண்டு, மூன்று பச்சை மிளகாய், மூன்று சிவப்பு மிளகாய், துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  1. நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  2. எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  3. பிரியாணி இலை – 3
  4. பட்டை – 2 அல்லது 3 துண்டு
  5. ஏலக்காய் – 4
  6. கிராம்பு – சிறிதளவு
  7. வெங்காயம் – ஐந்து (நறுக்கியது)
  8. தக்காளி – மூன்று (நறுக்கியது)
  9. மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  10. மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  11. தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  12. உப்பு – தேவையான அளவு
  13. புதினா – 1 சின்ன கட்டு
  14. கொத்தமல்லி இலை – 1 சின்ன கட்டு
  15. தேங்காய் பால் – 500 ml (தண்ணீர் கலந்தது)

செய்முறை: 3 – Fish Biryani in Cooker:

  • பின்னர் குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் நெய், 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ளவும். பின் அதில் 3 பிரியாணி இலை, 2 அல்லது 3 துண்டு பட்டை, 4 ஏலக்காய், சிறிதளவு கிராம்பு சேர்த்து கொள்ளவும்.

ஸ்டேப்: 1 – மீன் பிரியாணி – Fish Biryani Recipe in Tamil

  • அதன் பிறகு ஐந்து வெங்காயம் பொடிதாக நறுக்கியது சேர்த்து வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை வதக்க வேண்டும்.
  • வெங்காயம் பொன்னிறம் ஆனதும் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலாவை சேர்த்து அதில் உள்ள பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

ஸ்டேப்: 2 – மீன் பிரியாணி எப்படி செய்முறை?

  • பச்சை வாசனை போன பிறகு நறுக்கிய மூன்று தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கிய பின் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 2 டேபிள் ஸ்பூன் தனியா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொள்ளவும்.

ஸ்டேப்: 3 – Fish Biryani Recipe

  • பின்னர் ஒரு சிறிய கட்டு கொத்தமல்லி இலை, 1 சின்ன கட்டு புதினா இலை சேர்த்து நன்றாக கிளறி விடவும். மசாலாவில் உள்ள நீர் வெளியேறி எண்ணெய் பிரிந்த பிறகு மசாலாவில் ஊற வைத்த மீன் துண்டுகளை சேர்க்கவும்.

ஸ்டேப்: 4 – மீன் பிரியாணி தமிழ்:

  • அதன் பிறகு ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்க்கவும். அடுப்பை மீடியம் flame-ல் வைத்து அரிசி மற்றும் மீன் உடையாதவாறு பொறுமையாக கிண்டவும். பின் அதில் 500 ml தண்ணீர் கலந்த தேங்காய் பாலை ஊற்றவும்.
  • பின் அடுப்பை மீடியம் flame-ல் வைத்து குக்கரை மூடி ஆவி வந்தவுடன் வெயிட் (விசில்) போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து Pressure வெளியே வந்தவுடன் குக்கர் மூடியை திறக்கவும்.
  • இப்பொழுது ருசியான மீன் பிரியாணி தயார்.
காளான் பிரியாணி செய்வது எப்படி
தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement