மணமணக்கும் ஐயர் வீட்டு Special பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி தெரியுமா..?

Garlic Pickle Recipe in Tamil

Garlic Pickle Recipe in Tamil

பொதுவாக ஒரு சிலருக்கு எத்தனை வகையான சாப்பாடு இருந்தாலும் அதற்கு எத்தனை வகையான தொட்டுக்கை இருந்தாலும் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு ஊறுகாய் தொட்டு சாப்பிடுவது என்பது மிகவும் பிடிக்கும். அப்படி உங்களுக்கும் ஊறுகாய் மிகவும் பிடிக்கும் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் மணமணக்கும் ஐயர் வீட்டு Special பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள ரெசிபியை பயன்படுத்தி ஒருமுறை பூண்டு ஊறுகாய் செய்து சுவைத்துப்பாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Poondu Pickle Recipe in Tamil:

Poondu Pickle Recipe in Tamil

மணமணக்கும் ஐயர் வீட்டு Special பூண்டு ஊறுகாய் எப்படி செய்வது என்பதை பற்றி தான் விரிவாக காணலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.

  1. வெந்தயம் – 1 டீஸ்பூன் 
  2. கடுகு – 3 டீஸ்பூன் 
  3. நல்லெண்ணெய் – 150 மி.லி 
  4. பூண்டு – 250 கிராம் 
  5. புளிக்கரைசல் – 1 கப் 
  6. கருவேப்பில்லை – 1 கைப்பிடி அளவு 
  7. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் 
  8. மிளகாய் தூள் – 4 டீஸ்பூன் 
  9. பெருங்காய தூள் – 1 டீஸ்பூன் 
  10. உப்பு- தேவையான அளவு 

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 250 கிராம் பூண்டினை நன்கு சுத்தம் செய்து விட்டு அதனின் தோல்களை நீக்கி கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு தொக்கு இப்படி செஞ்சி பாருங்க

ஸ்டேப் – 2

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 150 மி.லி நல்லெண்ணெயை ஊற்றி அதில் நாம் தோல் நீக்கி வைத்துள்ள பூண்டினை சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் கடுகு மற்றும் 1 டீஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து  கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் என்ன பலன் வறுத்த பூண்டு பயன்கள்

ஸ்டேப் – 4

இப்பொழுது நாம் பூண்டினை வேகவைத்தநல்லெண்ணயிலேயே 1 டீஸ்பூன் கடுகு, 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருந்த பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 4 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் பெருங்காய தூள், 1 கப் புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வேகவிடுங்கள்.

இறுதியாக நாம் அரைத்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் கடுகு பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் கழித்து அதிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் அப்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளுங்கள்.

இப்பொழுது நமது மணமணக்கும் ஐயர் வீட்டு Special பூண்டு ஊறுகாய் தயாராகிவிட்டது. இந்த ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப்பாருங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ஒரு முறை பூண்டு கறிவேப்பிலை குழம்பு சுவையாக இப்படி ட்ரை பண்ணுங்கள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்