10 நிமிடத்தில் சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி..!

Advertisement

Nellikai Pickle Recipe in Tamil | Nellikai Oorugai Seivathu Eppadi 

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் சமையல் பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அனைவருக்கும் ரொம்ப பிடித்தமான நெல்லிக்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்பதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். பொதுவாக ஊறுகாய் என்றாலே அனைவருக்கும் வாயில் எச்சில் ஊரும். அதிலும் நெல்லிக்காய் ஊறுகாய் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எனவே அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய நெல்லிக்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

How To Make Gooseberry Pickle Recipe in Tamil:

நெல்லிக்காய் ஊறுகாய் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • நெல்லிக்காய்- தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – 5 ஸ்பூன்
  • கடுகு- 2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- 1 ஸ்பூன் 
  • உப்பு- தேவையான அளவு 
  • மிளகாய் தூள்- 2 ஸ்பூன் 
  • கடுகு- 1 ஸ்பூன்
  • வெந்தயம்- 1 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள்- 1/2 ஸ்பூன்
  • நாட்டு சர்க்கரை- 2 ஸ்பூன்
1 நிமிடத்தில் கொத்தமல்லி ஊறுகாய் இந்த ரகசியம் யாருக்கு தெரியும்..!

நெல்லிக்காய் ஊறுகாய் செய்யும் முறை:

ஸ்டேப்- 1

முதலில் நெல்லிக்காயை சுத்தமாக கழுவி வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு இதனை ஆறவைத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.

how to make nellikai pickle in tamil

ஸ்டேப்- 2

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 ஸ்பூன் கடுகு மற்றும் 1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள். இதனை சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் போல் அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

பிறகு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து  எண்ணெய் சூடானதும் அதில் 2 ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள்.

ஸ்டேப்- 4

 amla pickle recipe how to prepare in tamil

இப்போது, நறுக்கி வைத்த நெல்லிக்காயை சேர்த்து தாளியுங்கள். இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

நெல்லிக்காய் சாப்பிடுவதற்கு முன்பு இதை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்

ஸ்டேப்- 5

பிறகு, அடுப்பை குறைவான அளவில் வைத்து பெருங்காயத்தூள் மற்றும் அரைத்து வைத்த வெந்தய கடுகு பொடியை சேர்த்து கலந்து விடுங்கள். ஊறுகாயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி விடுங்கள்.

ஸ்டேப்- 6

 nellikai pickle recipe in tamil

எண்ணெய் நன்றாக பிரிந்து வந்ததும் அதனுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement