ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன் | Green Chilli Chicken In Tamil
பொதுவாக அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடித்த ஒன்றாகும். சிக்கனில் பலவகையான ரெசிபிக்களை மிக குறைந்த நேரத்திலேயே செய்துவிடலாம். இது போக சிக்கனை நாம் எப்படி சமைத்தாலும் சிக்கன் சுவை அப்படி இருக்கும். சிக்கனில் செய்யப்பட்ட உணவு என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பொதுவாக கேரளா ஸ்டைல் சிக்கன் ரெசிபி, வட இந்தியர் ஸ்டைல் சிக்கன் ரெசிபி, தென்னிந்தியா ஸ்டைல் சிக்கன் ரெசிபி, காரைக்குடி ஸ்டைல் சிக்கன் ரெசிபி, செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் ரெசிபி என்று பலவகையான சிக்கன் ரெசிபி இருக்கும். அந்த வகையில் இன்று நாம் ஆந்திரா ஸ்டைல் கிரீன் சிக்கன் ரெசிபி எப்படி செய்வது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- சிக்கன் – ஒரு கிலோ
- எலுமிச்சை சாறு – 1/2 பழம்
- இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
- தயிர் – 1 மேசைக்கரண்டி
- பச்சை மிளகாய் – 1 (பொடிதாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- கரமசாலா – 1 ஸ்பூன்
- வெங்காயம் – 2 (விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்)
- பெரிய வெங்காயம் – 1 (பொடிதாக நறுக்கியது)
- எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
- கடுகு – 1/2 ஸ்பூன்
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- பச்சை மிளகாய் – 5
- கொத்தமல்லி – 1/2 கட்டு
- உப்பு – தேவையான அளவு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இனி வீட்டிலேயே சிக்கன் சவர்மா செய்யலாம்..!
ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன் செய்முறை – Green Chilli Chicken In Tamil:
ஸ்டேப்: 1
ஒரு அகலமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒருகிலோ சிக்கன், ஒரு ஸ்பூன் உப்பு, 1/2 எலுமிச்சை பழத்தின் சாறு, பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய், கரமசாலா ஒரு ஸ்பூன், ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், விழுதாக அரைத்த பெரிய வெங்காயம் 2, பொடிதாக நறுக்கிய வெங்காயம் 1 ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
இவ்வாறு மிக்ஸ் செய்த சிக்கனை மூடி போட்டு ஒரு மணி நேரம் நன்றாக ஊறவைக்க வேண்டும்.
ஸ்டேப்: 3
ஒரு மணி நேரம் கழித்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும், எண்ணெய் நன்றாக காய்ந்ததும் 1/2 ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
ஸ்டேப்: 4
கடுகு பொரிந்ததும் 1/2 ஸ்பூன் சீரகம், ஒரு கொத்து கருவேப்பில்லை இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு கலந்து வைத்துள்ள சிக்கன் கலவையை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். சிக்கனில் தண்ணீர் சேர்க்காமல் 15 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
ஸ்டேப்: 5
இந்த 15 நிமிடத்திற்குள் நாம் கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாவை அரைத்து எடுத்துக்கொள்வோம். அதற்கு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் 5 பச்சை மிளகாய், 1/2 கட்டு கொத்தமல்லி இலை இவை இரண்டையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 6
பிறகு இந்த கலவையை அடுப்பில் வைத்திருக்கும் சிக்கனில் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். பிறகு சிக்கனில் உள்ள தண்ணீர் வற்றும் வரை வேகவைத்து எடுத்தால் போதும் சுவையான ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன் தயார். கண்டிப்பாக உங்கள் வீட்டில் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |