சுவையான குலாப் ஜாமூன் அல்வா இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்…!

Advertisement

 குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா 

ஹாய் நண்பர்களே..! நீங்கள் பல விதமான அல்வா சாப்பிட்டு இருப்பீர்கள். பாதம் அல்வா, கேசரி அல்வா, கோதுமை அல்வா, கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா, பூசணி அல்வா, சப்போட்டா அல்வா இது மாதிரி நிறைய வகையான அல்வா சாப்பிட்டு அலுத்துபோகிருக்கும். ஆனால் இந்த பதிவானது சமைக்கும் தாய்மார்களுக்கும், அல்வா பிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த புது விதமான குலாப் ஜாமூன் அல்வா செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொண்டு இந்த தீபாவளிக்கு செய்து பாருங்கள்..!

இதையும் படியுங்கள்⇒ சப்போட்டா பழத்தில் அல்வா செஞ்சு வீட்டில் இருந்தே                       ருசித்து பார்க்கலாம் வாங்க..!

குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

  • குலாப் ஜாமூன் மாவு- 1 கப் 
  • முந்திரி- 2 ஸ்பூன் 
  • நாட்டு சர்க்கரை- 1/2 கப் 
  • நெய்- 1/4 கப் 
  • ஏலக்காய் தூள்- 1/4 ஸ்பூன் 

குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா செய்முறை விளக்கம்:

குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா

 

ஸ்டேப்- 1

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் நாட்டு சர்க்கரை, குலாப் ஜாமூன் இரண்டையும் மிக்சியில் போட்டு விடுங்கள். பிறகு அதனுடன் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரியை பொன் நிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

அதன் பிறகு அதே பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள குலாப் ஜாமூன் மாவை இதில் ஊற்றி கரண்டி விட்டு மாவு கட்டி ஆகாமல் மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து கிண்டி கொண்டே இருங்கள்.

ஸ்டேப்- 4

மாவு வெந்து நல்ல பதத்திற்கு வரும் வரை அடுப்பில் வைத்து கிண்டி கொண்டே இருங்கள். அதன் பிறகு மாவு பதத்திற்கு வந்தவுடன் நெய் சேர்த்து ஒரு 5 நிமிடம் அப்படியே கிண்டி விடுங்கள்.

ஸ்டேப்- 5 

கடைசியாக 5 நிமிடம் களித்து வறுத்து வைத்துள்ள முந்திரியை அல்வாவில் போட்டு இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள். இப்போது நாவிற்கு சுவை தரும் சுவையான குலாப் ஜாமூன் மிக்ஸ் அல்வா தயார்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement