இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்..!

Advertisement

Homemade Ice Cream Recipe in Tamil

ஐஸ்கிரீம் என்றால் யாருக்குதான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று ஐஸ்கிரீம் தான். ஐஸ்கிரீம் பிரியர்கள் எங்கு சென்றாலும் ஐஸ்கிரீமை பார்த்துவிட்டால் போதும் அதனை எப்படியாவது அடம் பிடித்தாவது சாப்பிட்டு வருவார்கள். அதுமட்டுமில்லாமல் குழந்தைகள் அழுதால் ஐஸ்கிரீம் வாங்கி தருகிறோம் என்று சொன்னால் போதும் அழுகையை நிறுத்தி விடும். இப்படி ஐஸ்கிரீமிற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. எனவே வெயில் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட வெளியில் செல்லாமல் குழந்தைகளுக்கு வீட்டிலே டேஸ்டாக 6 வகையான ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Make Ice Cream at Home Without Egg in Tamil:

ஐஸ்கிரீம் செய்ய தேவையான 2 முக்கிய பொருட்கள்:

  • Condensed Milk- 500 கிராம்
  • கிரீம்- 500 கிராம்

4 விதமான ஐஸ்கிரீம் பொருட்கள்:

  1. Strawberry
  2. Mango
  3. Oreo Biscuit
  4. Pista

How to Make Ice Cream Recipe in Tamil:

How To Make Ice Cream Recipe in Tamil

முதலில் ஒரு சுத்தமான பெரிய கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். இதில் கிரீமை சேர்த்து Electric Whisk அல்லது Egg Whisk -யை பயன்படுத்தி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பிறகு, இதனுடன் Condensed Milk சேர்த்து இதனையும் நன்றாக கலந்து விடுங்கள். இவை ஐஸ்கிரீம் பதத்திற்கு வரும்வரை கலந்து கொள்ளுங்கள்.

இப்போது, நார்மல் ஐஸ்கிரீம் தயார்..! இதனை வைத்து 4 விதமான ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஐஸ்கிரீம் என்ற பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா..?

Strawberry Ice Cream Recipe in Tamil:

Strawberry Ice Cream Recipe in Tamil

முதலில் ஸ்ட்ராபெரி பழத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது, ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தயார் செய்து வைத்துள்ள ஐஸ்கிரீமை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் அரைத்த ஸ்ட்ராபெரி பேஸ்டினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதனை மற்றொரு கிண்ணத்தில் சேர்த்து பிரிட்ஜில் 1/2 மணிநேரம் அல்லது 1 மணிநேரம் வைத்து எடுத்தால் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் தயார்.!

mango Ice Cream Recipe in Tamil:

mango Ice Cream Recipe in Tamil

மாம்பழத்தை கழுவி விட்டு நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தயார் செய்து வைத்துள்ள ஐஸ்கிரீமை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் அரைத்த மாம்பழ பேஸ்டினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதனை மற்றொரு கிண்ணத்தில் சேர்த்து பிரிட்ஜில் 1/2 மணிநேரம் அல்லது 1 மணிநேரம் வைத்து எடுத்தால் மாம்பழம் ஐஸ்கிரீம் தயார்.!

Oreo Ice Cream Recipe in Tamil:

Oreo Ice Cream Recipe in Tamil

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தயார் செய்து வைத்துள்ள ஐஸ்கிரீமை எடுத்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன், Oreo Biscuit-யை சிறிது சிறிதாக உடைத்து  சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதனை மற்றொரு கிண்ணத்தில் சேர்த்து பிரிட்ஜில் 1/2 மணிநேரம் அல்லது 1 மணிநேரம் வைத்து எடுத்தால் ஓரியோ ஐஸ்கிரீம் தயார்.!

5 நபர்களுக்கு மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன தெரியுமா..?

Pista Ice Cream Recipe in Tamil:

Pista Ice Cream Recipe in Tamil

முதலில் பிஸ்தா பருப்பை சிறிது சிறிதாக இடித்து எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது, ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தயார் செய்து வைத்துள்ள ஐஸ்கிரீமை எடுத்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன், உடைத்த பிஸ்தா பருப்புகளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதனை மற்றொரு கிண்ணத்தில் சேர்த்து பிரிட்ஜில் 1/2 மணிநேரம் அல்லது 1 மணிநேரம் வைத்து எடுத்தால் பிஸ்தா ஐஸ்கிரீம் தயார்.!

உங்கள் வீட்டில் வாழைப்பழம் உள்ளதா..? அப்போ இந்த ரெசிபியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க ..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement