பிரியாணி இப்படி மணக்க மணக்க சுவையா மசாலா செஞ்சு அசத்துங்க..!

How to Make Biryani Masala in Tamil

How to Make Biryani Masala in Tamil

வணக்கம் தோழிகளே.. பொதுவாக அசைவ பிரியர்களுக்கு பிரியாணி என்றே மிகவும் பிடித்தமான உணவாகும். அதில் உள்ள வாசனைக்காகவே வழக்கத்தை விட கூடுதலாகவே சாப்பிட்டுவிடுவார்கள். ஒரு சிலர் பிரியாணி செய்வதில் வித்தைக்காரராக இருப்பார்கள். ஒரு சிலருக்கு பிரியாணி டேஸ்ட்டாக வந்துவிடாது. இதற்கு முக்கிய காரணம் பிரியாணிக்கு சரியான பக்குவத்தில் மசாலா பொடியை பயன்படுத்தாமல் இருப்பதுதான் முக்கிய காரணமாகும். சரி கவலை வேண்டாம் இனி நீங்களுமும் பிரியாணியை அருமையான டேஸ்ட்டில் செய்து அசத்த முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டும் தான். அதாவது பிரியாணி மசாலாவை இப்படி தயார் செய்து பிரியாணிக்கு பயன்படுத்துங்கள். பிரியாணியின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். சரி வாங்க பிரியாணி மசாலா எப்பசி செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. பட்டை –  20 கிராம்
  2. ஏலக்காய் – 20 கிராம்
  3. கிராம்பு – 15 கிராம்

பிரியாணி மசாலா செய்முறை:

கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

வெயிலில் காயவைக்க உங்களுக்கு நேரம் இல்லையென்றால் அடுப்பில் கடாய் வைத்து மிதமான சூட்டில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் வருது எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் மிக்சி ஜாரில் வறுத்த பொருட்களை செய்து பொடி செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் மசாலா தயார்.

இந்த மசாலாவை காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து பிரியாணிக்கு பயன்படுத்தலாம். அவ்வளவு சீக்கிரம் இந்த பொடி கேட்டு போகாது.

இந்த பொடியை நீங்கள் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, புலாவ், குஷ்கா போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம்.

ஒரு கிலோ சிக்கன் பிரியாணி என்றால் 1 1/2 ஸ்பூன் இந்த மசாலாவை பயன்படுத்தலாம். அதுவே ஒரு கிலோ மட்டன் பிரியாணி என்றால் 2 1/2 ஸ்பூன் வரை பயன்படுத்தலாம். பிரியாணி வேறு எந்த ஒரு மசாலாவையும் பயன்படுத்த தேவை இல்லை. இந்த ஒரு மசாலா மட்டும் போதும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 சிக்கன் தம் பிரியாணி செய்முறை..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal